July 28, 2011

மலரும் முட்களும்


கடவுளுக்கான வாசலை
திறந்தே வைத்திருக்கின்றன
இறை தத்துவங்கள்..
வழியெங்கும்
முட்களை இறைத்தபடி
போகும் மனிதர்கள்.



அரும்பத் தொடங்கியிருந்தது
செடி
ஒரு நள்ளிரவு
மழைக்குப் பின்..
அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!



19 comments:

இராஜராஜேஸ்வரி said...

அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!//

நேசம் பாசமாய் மலர்ந்த மலருக்கு பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கடவுளுக்கான வாசலைதிறந்தே வைத்திருக்கின்றனஇறை தத்துவங்கள்..வழியெங்கும் முட்களை இறைத்தபடிபோகும் மனிதர்கள்.

பூவுக்கு பரிசு முள்ளா? மனிதன் மனம்!

நிலாமகள் said...

பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!

கடவுளுக்கான
வழியெங்கும் முட்களை இறைத்தபடிபோகும் மனிதர்கள்.//

ந‌ன்மைக்கும் தீமைக்குமான‌ முர‌ண‌ழ‌கு!

RVS said...

//பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!//

அற்புதம் சார்! நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்!! :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான கவிதை, அந்தப்பூக்கப்போகும்
பூவைப்போலவே!

சாந்தி மாரியப்பன் said...

பூக்கப்போகும் மலர்களைப்போலவே அழகானது இந்தக்கவிதை..

ஹேமா said...

கடவுள்களின் வாசலில் சாத்தான்கள் !

இரண்டாவது நினைத்துப் பார்க்க மனம் சிலிர்க்கிறது !

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பூப் போல மனம் வருடும் வரிகள்

rajamelaiyur said...

//
அரும்பத் தொடங்கியிருந்தது
செடி
ஒரு நள்ளிரவு
மழைக்குப் பின்..
அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!
//

நல்ல வரிகள்

settaikkaran said...

எளிமையாக, குட்டியாய், அழகாய் இருக்கின்றது.

vasu balaji said...

ரெண்டும் அழகு

Kousalya Raj said...

சிறு விதைக்குள் விருட்சம் போல் இச்சிறு கவிதைக்குள் ...?!

படித்து படித்து பக்குவம் அடைகிறது மனது !

ஒரு இனிய அனுபவத்திற்கு நன்றிகள்

RIPHNAS MOHAMED SALIHU said...

அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!//

இந்த வரி அழகா ஆழமா இருக்கு.. வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

முட்களை இறைத்தபடி போகும் மனிதர்கள்.
ஆமாம்.நந்தவனமாய் இருக்க வேண்டிய பூமியை இடுகாடாய் மாற்றி வைத்திருக்கிறார்கள்(கிறோம்) .

vetha (kovaikkavi) said...

''...கடவுளுக்கான வாசலை
திறந்தே வைத்திருக்கின்றன
இறை தத்துவங்கள்..''
அதை அலட்சியப் படுத்தி வாழ்ந்து மனிதன் துன்பமடைகிறான்....
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordppress.com

R. Gopi said...

ரெண்டுமே நல்லா இருக்கு

மோகன்ஜி said...

பூக்கப் போகும் மலர்களுக்காய் காத்திருத்தல் தான் வாழ்க்கையின் அர்த்தமோ. அபாரம் ரிஷபன் சார்!

ADHI VENKAT said...

அழகான கவிதை சார்.