April 29, 2011

கடவுள்

யார் சொன்னது ..
கடவுள் இல்லையென்று..
பசித்த வயிறுக்கு
உணவிட்ட எவரும்
கடவுளே ..
சங்கடத்தில் மாட்டிய
மனிதருக்கு
உதவிக்கரம்
நீட்டிய யாரும்
கடவுளே..
எதுவும் செய்ய இயலாமல்
போனாலும்
வார்த்தைகளால்
வானம் காட்டிய
ஜீவன் கடவுளே ..
பேச தெரியாமல்
போனாலும்
அன்பின் ஸ்பரிசம்
உணர்த்தும்
கடவுளின் இருப்பை!

April 23, 2011

நட்சத்திரங்கள்

வாரி இறைத்த
நட்சத்திரங்களை
அள்ளிக் கொண்டு
ஓடி வந்தது
குழந்தை..
அதன் சிரிப்பில்
சிதறிப் போனது
கையில் அள்ளி வந்த
நட்சத்திரங்களும்..
என் மனசும்.

ஒவ்வொரு விதமான
அணுகுமுறை
பெரியவர்களிடம்..
ஆனால்
எல்லாக் குழந்தைகளும்
ஸ்பரிசமும்
புன்சிரிப்பும்தான்
வைத்திருக்கின்றன
எல்லோருக்கும்.

எல்லாப் பிறவியும்
குழந்தையாகவேதான்
மலர்கிறது..
வளர்ந்தபின்புதான்
தெரிகிறது
பிஞ்சு இருந்த இடங்களில்
முறுக்கேறிப் போன
கிளைகளும்..
வாடிப் போன இலைகளும்.

April 17, 2011

காற்று

இரவல் வாங்கிப் போன
கவிதைகளை
திருப்பித் தரவில்லை
நேற்றைய காற்று.

இன்றைய காற்றோ

புதிதாய்த் தந்து போனது
புதுக் கவிதைகளையும்

புது மகிழ்ச்சிகளையும்..

=========================

பயணங்களில்
சட்டென்று
பழகி விடுகிறது
சில குழந்தைகள் ...
விட்டு வர

மனசில்லாமல்
எனக்குள்ளும்
ஒரு குழந்தை மனசு..



April 13, 2011

என் உலகம்


எனக்கான உலகம்


இப்போது சிருஷ்டியில்..


வர்ணங்கள் தேர்ந்தெடுத்து,


உடன் இருக்க


மனிதரும் யார் யாரென ..


மரம் செடி கூட


என் விருப்பமாய்..


பவழமல்லி நிச்சயமாய் ...


முடிவானதும் . ..


என் சினேகிதியிடம்


காட்டினேன் சரி பார்க்க..


ஒரு பெயரைச் சொல்லி


‘இல்லியே’ என்றாள்..


என் மன வருத்தங்களை


மீண்டும் ஞாபகப் படுத்த


அவள் சிரித்தாள்..


'உனக்கான உலகத்தில்


சந்தோஷங்கள் மட்டுமே


அங்கே பூத்திருக்கும்!


பழைய வருத்தங்களுக்கு


இடம் ஏது ?’


அவள் பெயரை


முதலாய் வைத்திருந்த


என் தெளிவில்


மகிழ்ந்தேன் மறுபடியும்..



April 04, 2011

கவிதைகள்


எந்த அகராதியும்

வார்த்தைகளின் தொகுப்புதான்..

என் கவிதைகளுக்கான வார்த்தைகள்

நிரம்பியே இருக்கின்றன..

சேகரித்து தொகுக்கும்

வேளையும் புத்தியும்

வாய்த்து விட்டால்

என் கவிதை உருப் பெற்று விடும்..

அதுவரைஅகராதியை

எத்தனை முறை புரட்டினாலும்

கண்ணில் படும் வார்த்தைகள்

வெற்று சொற்களே..


தெருமுனை வரை

விரட்டிக் கொண்டு வந்தன

நாய்கள்.

எல்லை முடிந்து விட்டதாய்

அப்படியே நின்று

குலைத்துப் போயின..

வீடு திரும்பிய பின்னும்

விடாமல் ஒலிக்கிறது

மனசுக்குள் குரைப்பொலி.


'நீ அவன் தானே’ என்று

ஆர்வமாய்க்கேட்டார் அவர்.

கேட்டபோது

அவர் கண்களைப் பார்த்தேன்.

'இல்லை' என்று சொல்ல

மனதில்லை..

'ஆமாம்' என்று சொல்லவழியில்லை..

அவர் கையின்

ஜில்லிட்ட ஸ்பரிசம்

எனக்கு ஏன்

அவரைத்தெரியாமல் போனது என்று

உள்ளூர புலம்பத்

தோன்றியதுஎனக்கு.


அவள் கண்களில்தெரிந்த

காதலைஎன் வார்த்தைகளால்

அங்கீகரித்தபோது

என் வாழ்வில்

ஒரு புது அத்தியாயம்தெரிந்தது.

மணமான மறு வருடம்பிறந்த

மழலை

அதையே பழைய

புத்தகமாக்கி விட்டதுஇப்போது..

இன்னொரு புது அத்தியாயம்துவங்கி.


April 01, 2011

வீட்டுல இப்படியா நடக்குது

புள்ளைய விட்டுட்டு பத்திரமா பார்த்துக்குவாங்கன்னு போயிடறோம் .. ஆனா இப்படியா நடக்குது.. மெயில்ல வந்த வீடியோ .. இது நிஜமா?