Showing posts with label யோசிக்க. Show all posts
Showing posts with label யோசிக்க. Show all posts

July 18, 2011

ரெஜினா ப்ரெட்






ரெஜினா ப்ரெட் - 90 வயசு - எப்பவோ எழுதின 45 புத்திக் கொள்முதல்களை மறுபடி சொல்லியிருக்காங்க.
எனக்குப் பிடிச்சிருந்தது..படிக்க!

1. வாழ்க்கைல அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறாப்ல இல்ல. ஆனாலும் வாழறதுக்கு நல்லாத்தான் இருக்கு.
2. இதுவா அதுவான்னு குழப்பத்துல இருக்கறப்ப.. சின்ன ரிஸ்க்கா தோணற ஒரு முடிவை எடுங்க..
3. ரொம்ப குட்டியான வாழ்க்கை.. இதுல வெறுப்புல நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
4. உங்களுக்கு முடியாம போகறப்ப உங்க வேலை ஹெல்ப் பண்ணாது.. நட்பும் சுற்றமும்தான். எப்பவும் அவங்க தொடர்புலயே இருங்க
5. கிரடிட் கார்ட் அப்பப்ப செட்டில் பண்ணிருங்க
6. எப்பவும் ஜெயிக்க முயற்சிக்க வேணாம்.. 'ஒரு வேளை நீங்க சொல்றாப்லயும் இருக்கலாம்' அப்பிடினு விட்டுக் கொடுங்க
7. தனியா போய் அழறதை விட, பெட்டர் யார்கிட்டயாவது சொல்லி அழறது மேல். துக்கம் ஆறும்.
8. கட்டாயமா கடவுள்கிட்ட கோவிச்சுக்குங்க. அவருக்கு அதுல ஒண்ணும் பிரச்னையே இல்ல
9. முதல் சம்பளத்துலயே ஓய்வுக்கு சேமிக்க ஆரம்பிச்சிருங்க
10. சாக்லேட்ட பார்த்தா 'வேணாம்' மழுப்பாதீங்க. அதாவது பிடிச்சதை சாப்பிடுங்க.
11. கடந்த காலத்தோட அமைதியா கைகுலுக்குங்க. அப்பதான் அது நிகழ்காலத்தை நாசம் பண்ணாது.
12. நீங்க அழறதை உங்க புள்ளைங்க தாராளமா பார்க்கலாம். தப்பில்ல. மறைச்சுக்க வேணாம்
13. அடுத்தவனோட உங்க வாழ்க்கைய ஒப்பிடாதீங்க.. அவனோட 'நாளை' என்னன்னு இப்ப உங்களுக்குத் தெரியாது
14. ஏதாச்சும் ஒரு உறவை ரகசியமா பண்ணனும்னா.. அதைப் பண்ணவே வேண்டாம்.
15. கண் சிமிட்டற நேரத்துல எல்லாம் மாறிப் போயிடும். கவலைப்படாதீங்க. கடவுள் கண் சிமிட்டுவதே இல்லை!
16. ஆழ்ந்த மூச்சு விடுங்க. அமைதி தன்னால வரும்.
17. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சி தராத எதுவா இருந்தாலும் தூக்கி எறிங்க.
18. உங்களுக்கு சாவைத் தராத எதுவும் பலத்தைத் தான் தரும். துணிஞ்சு எடுத்துக்குங்க..


மீதி அடுத்த பதிவுல..