”ஹலோ.. அக்கவுண்ட்ஸ்ங்களா”
“ஆமா..”
“மெடிகல் கிளைய்ம்ல ஒரு டவுட்டு”
“அது வேற செக்ஷன்.. நம்பர் சொல்லவா”
“அது எனக்குத் தெரியும்.. நான் டவுட் கேக்கறது உங்ககிட்டதான்”
“கேளுங்க”
“ஒரே ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி.. சிசேரியன் .. ஆச்சு.. ரெண்டு பேருக்கு.. ஆனா பில் செட்டில் பண்ணதுல பணம் கூடக் குறைய இருக்குதுங்களே”
”அப்படியா.. “
”ஒரே நாள்.. ஒரே மாதிரி சிசேரியன்.. அரை மணி இடைவெளில.. 1500 ரூபா குறைச்சு கொடுத்திருக்காங்க ஒருத்தருக்கு..”
(இதையே பத்து நிமிஷம் விடாமல் கேட்டார்)
“ரெண்டும் என்ன குழந்தைங்க”
“ரெண்டுமே ஆண் குழந்தைங்கதான்”
“ஓ.. அப்போ அதுலயும் வித்தியாசம் இல்ல.. ம்ம்”
எதிர்முனையில் வெற்றிக் களிப்பு.
“அதாங்க சொல்றென்.. எப்படி குறைக்கலாம்”
“ஆங்.. குழந்தை என்ன வெயிட்”
“ம்ம்.. என் குழந்தை 2.9 இன்னொன்னு 3.2”
“அதானே பார்த்தேன்.. வித்தியாசம் இருக்குல்ல.. அதான் குறைச்சு பாஸ் பண்ணி இருக்காங்க “
“ஓ.. அப்படியா.. அக்கவுண்ட்ஸ்ல தப்பு பண்ண மாட்டாங்கன்னு அப்பவே சொன்னேன் அவகிட்ட.. இப்ப புரிஞ்சிருச்சு.. நன்றி ஸார் “
(ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா.. கண்ணைக் கட்டுதே.. )
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து இருக்கைக்காரர்களுக்கு சிரிப்பு.
உண்மையில் என்னவென்றால்.. ஒரு டெலிவரிக்கு கூடுதலாய் ஊசி.. மருந்து தேவைப்பட்டிருந்தது.. அதான் அந்த தொகை வித்தியாசம். விசாரித்த நபர் என்னிடமும் பதினோராவது ஆளாய்க் கேட்டார். வேறு வழியின்றி இப்படிப் பேசி அக்கவுண்ட்ஸ் மானத்தைக் காப்பாத்தினேன்.