இள மனதின் ஆழத்தில்
பதியனிட்ட நேச முகங்கள்
நினைவுபாசனத்தின்
நித்திய நீரூற்றலில்
பச்சென்று மனசெங்கும்
பசுமையாய் படர்ந்திருக்கும்
எங்கேயோ எப்படியோ
நிகழும் சந்திப்பில்
ஆரதழுவிகொள்ளும்
பிரியமான நினைவுகள்..
'ம் ' அப்புறம் , என்பதாய்
கைகொர்த்துகொள்ளும்
புரிதலான பார்வைகள் ..
சொட்ட சொட்ட நனைய வைக்கும்
நேசத்தின் பொழிதலில்
எப்போதும் குளிர்ந்துகிடக்கும்
ஈரமான மனசு!