
மழை பெய்து ஓய்ந்த நிமிடம்..
அலுவலக ஜன்னல்
எட்டிப் பார்த்தேன்.
எதிர் மாடியில்
சுவற்றின் விளிம்பில்
அணில் ஓடியது.
செடிகளின் இடையே
குருவிகள் பறந்தன,
தரைக்கும் உயரத்திற்குமாய்.
பறவைகளுக்கு யாரும்
குடை பிடிப்பதில்லை!
அணில்களுக்கும் தான்..
ஈரம் படிந்த தரையைத் தொட
விரல்களால் முடியவில்லை..
இருந்தது மூன்றாவது மாடியில்.
மாலையில் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போது
நினைவிலிருக்குமா?
ஈரத்தரையும்..
ஓடிய அணிலும்..
குருவிகளூம்..
இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது
என்னைச் சுற்றிநிற்கும்!
13 comments:
//இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது
என்னைச் சுற்றிநிற்கும்!//
இது...இதுதான் உங்கள் டச். அருமையான சொல்லாடலில் படிக்கப் படிக்க மீண்டும் மீண்டும்.
ரேகா ராகவன்.
nice
அழகு
//பறவைகளுக்கு யாரும்
குடை பிடிப்பதில்லை!//
ரசித்தேன்....
//இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள்//
அட என்ன வார்த்தை இது ரிஷபன் அருமை
கவிதை ஒரு சந்தோசம்
மனத்தைக் கொள்ளும்!
உங்கள் கவிதையோ
ஆஹா !வார்த்தை இல்லை!...........
/manithakudaikal / nalla sinthanai . vaalththukkal. nanraaka vanthullathu.
anilukkum kuruvikkum yaarum kudai pitippathillai - arumaiyaana varikaL.
patiththen, rasiththen, paaraattukkaL
இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது
என்னைச் சுற்றிநிற்கும்!
................ரிஷபன் சார், சின்ன சின்ன விஷயங்களை கூட எவ்வளவு அருமையாக கவனித்து, கவிதையாய் உருவாக்கி வருகிறீர்கள்! வாழ்த்துக்கள்.
superb....
mano
கவிதையும் காட்சியும் நல்லாயிருக்குங்க.
நண்பரே!
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
வாருங்கள்....
http://mathavaraj.blogspot.com/2010/02/blog-post_11.html
விருப்பமிருந்தால் தொடரலாம்....
முகமற்ற மனிதக் குடைகள்.சரியா இருக்குமோ ரிஷபன்.
Post a Comment