
எல்லா மரங்களும்
விசேஷம்தான் ..
அதிலும் குறிப்பாய்
ஆற்றங்கரை ஒட்டிய
மரங்கள்..
ஈரம் இயல்பாய் படர்ந்த
சூழல்..
இலைகளில் என்னவொரு
மினுமினுப்பு..
விண்ணைத் தொடும்
பிரும்மாண்டம் ..
உதிரும் சருகுகள்
ஆற்றில் கதை பேசிப் போகும்..
சாலையில் வெட்டுப்படும் அபாயம் ..
ஆற்றங்கரை மரங்களுக்கு இல்லை..
நீருக்குள் கால் வைத்து
கிளைகளால் காற்றைத் தடவி..
மூச்சால் சேதி சொல்லி
எத்தனை பிறப்பு இறப்பு பார்த்த
மரங்கள்..
கட்டிப் பிடிக்க நினைத்தாலும்
முடியாத ஆகிருதி ..
விழுந்து வணங்க கூச்சம்..
என் நேசிப்பை எப்படி சொல்ல?!
22 comments:
ஆம். ஆற்றங்கரையோர மரங்கள் சற்றே அதிர்ஷ்டம் வாய்ந்த்வை தான். குளிப்பவர்களின் கண்களுக்கு குளுமையும், குதூகுலமும் அளிப்பவை கூட.
ஆற்றங்கரை மரத்திற்கு உரிதான தனிச்சிறப்பு காணும்போது கண்களுக்கு அவ்வளவு ஆனந்தம்
'மரம்' கவிதை மௌனமாய் ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறது...'மரம்தான்...மரம்தான்....எல்லாம் மரம்தான்..... மறந்தான்....மறந்தான்...மனிதன் மறந்தான்' என்ற கவிஞரின் வரிகளும் ஏனோ நினைவெல்லைக்குள் வருகிறது....
'கிளைகளால் காற்றைத் தடவி..'
நுணுக்கமான கற்பனை!
என் நேசிப்பை எப்படி சொல்ல?!
மனித நாகரிகமே நதிக்கரைகளில்தான். மரங்கள் அறியாத கால ரகசியமா? நதிக்கரை மரங்களைப் பற்றி நிறைய எழுதலாம். தொடங்கிவிட்டீர்கள். நானும் உங்களைப் பின்பற்றி சமயம் வாய்க்கையில் எழுதுவேன் ரிஷபன். அருமை.
கொஞ்சம் அதிஷ்டம் செய்த மரங்கள் ஆற்றங்கரையில் பிறந்ததால் !
/என் நேசிப்பை எப்படி சொல்ல?!/
இப்படித்தான். வேற எப்படி இன்னும் அழகா சொல்ல முடியும்:)
ஏக்கம் ரொம்ப நல்லா இருக்குங்க ரிஷபன்
படிக்கும்போதே காட்சிகள் மனதில் விரிய ஆனந்த துள்ளல் போட வைத்தது.
அருமை.
//இலைகளில் என்னவொரு
மினுமினுப்பு..
விண்ணைத் தொடும்
பிரும்மாண்டம் ..
உதிரும் சருகுகள்
ஆற்றில் கதை பேசிப் போகும்..//
ஆற்றங்கரைக்கே அழைத்து சென்று விட்டன வரிகள்.
//சாலையில் வெட்டுப்படும் அபாயம் ..
ஆற்றங்கரை மரங்களுக்கு இல்லை..//
ஆம், எத்தனை ஆறுதலான விஷயம்!
நானும் மரங்களை நேசிப்பவன் தான்.
மனதை மெலிதாய் வருடிக் கொண்டு செல்கிறது, கவிதை!!
ஆற்றங்கரையோர மரங்கள்....எனக்கு எங்கள் ஊற்றில் சிறிய குளத்தருகே உள்ள பெரிய மரத்தின் (அதன் கீழ் நண்பர்கள் கூடி, அளவளாவி) ஞாபகங்களை மீட்டி விட்டீர்கள்! அருமை!
ஆற்றங்கரை மரங்கள் தனிஅழகுதான்.
ஆற்றங்கரை மரங்கள் அதிர்ஷ்டம் செய்தவை. உங்கள் நேசிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அழகான காட்சியும் கவிதையும் மனதில் ஒட்டி கொண்டன.
சபாஷ் ரிஷபன்.
நதிக்கரையில் நிற்கும் மரங்களின் அடியில் படுத்தபடிக் கழிந்த நாட்களை நினைவுகூர்கிறேன்.
காலங்களைக் கடந்த சாட்சி போலவும் மரங்கள் நம்மிடம் தெரிவிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருப்பது போலவும் தோன்றும்.
//உதிரும் சருகுகள்
ஆற்றில் கதை பேசிப் போகும்..//
என்ன ஒரு கற்பனை! ஆற்றங்கரைக்கு இப்போதே போகவேண்டும் போல இருக்கு! ஆனால் தில்லியின் யமுனாவின் கரையில் மரங்களுக்குப் பதில் மலங்கள்!
ஆற்றங்கரை மரங்களுக்காக ஒரு கவிதை அருமை சார்.
ஆற்றங்கரை மரங்கள்
மேல்தட்டுக் குடிகளைப்
போன்றவை.
சுகபோக வாசி.
பழுத்த சுமங்கலி.
அனுபவக்கதை சொல்லும்
அழகு தாத்தா
விழுந்து வணங்கலாம்.
தவறே இல்லை.
'மரம்' கவிதை மௌனமாய் ஒரு தாக்கம். ரொம்ப நல்லா இருக்குங்க.
ப்ரம்மாண்டமான மரங்களின் சலசலத்த ஓசை ஆரவாரமாய் பார்த்த நினைவு கவிதையைப் படித்ததும் வருகிறது..
அருமை..
ரொம்ப நல்லாயிருக்கு....வாழ்த்தக்கள்
Post a Comment