நிறம் முக்கியமா
சிங்கமாய் இருப்பதா..
பதில் தெரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்..
கவிதை வந்து விட்டால்
நல்ல காகிதம் கூட
அவசியமில்லை..
எழுதிப் பழகும் மனசுக்கு !
எதையும் தள்ளிப் போட்டே
காலம் தள்ளுவதில்
ஒரே ஒரு நன்மைதான்..
எவரும் நம்மை
விமர்சிக்கப் போவதில்லை ..
கர்ஜனைக்கு முயற்சிக்கலாம்
முடியாவிட்டால்
முனகல் கேட்டால்கூட
போதும் ..
ஜடமாய் மரிப்பதை விட.
21 comments:
கர்ஜனைக்கு முயற்சிக்கலாம்
முடியாவிட்டால்
முனகல் கேட்டால்கூட
போதும் ..
ஜடமாய் மரிப்பதை விட.
பொட்டுல அடிச்ச மாதிரி சொல்..
இதுக்குள்ள எவ்ளோ அர்த்தங்களை வச்சிருக்கீங்க... அருமையான படைப்பு...
சிந்திக்க வைக்கும் வரிகள்.அருமையான கவிதை .
ரேகா ராகவன்.
//முனகல் கேட்டால்கூட
போதும் ..
ஜடமாய் மரிப்பதை விட.//
சுருக்கமான கவிதை; சுருக்கென்ற கருத்து! பாராட்டுக்கள்!
முயல்,ஆமை ஏதோ ஒன்று ஜெயிப்பது நிச்சயம்.
முயலாமை என்றும் ஜெயித்ததே இல்லை.
(காய்கறி கடையில் கண்ட வாசகம்)
முனகல் கூட வலியின் மொழிதான்,
முயற்சியின்மையை விட.
wow. சிம்பிள் அண்ட் சூப்பர்ப்.
//முனகல் கேட்டால்கூட
போதும் ..
ஜடமாய் மரிப்பதை விட.//
நல்லாயிருக்கு ரிஷபன்.
//கர்ஜனைக்கு முயற்சிக்கலாம்
முடியாவிட்டால்
முனகல் கேட்டால்கூட
போதும் ..
ஜடமாய் மரிப்பதை விட.//
உண்மைதான் இந்தத் தத்துவம் எனக்கும் பிடிச்சிருக்கு !
நிறம் முக்கியமா
சிங்கமாய் இருப்பதா..//
மிக அருமை ரிஷபன்.. சொன்னதை விட விட்டது அருமை..
நல்லாருக்கு.. கர்ஜனையோ முனகலோ ஏதாவது ஒன்று.. இருத்தலை தெரிவிப்பதற்கு.,
ரொம்ப நல்லாயிருக்கு ரிஷபன்.
நிறம் முக்கியமா
சிங்கமாய் இருப்பதா..
பதில் தெரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்..
..... ரொம்ப சரி.... கவிதை சூப்பர்!
// க.பாலாசி said...
இதுக்குள்ள எவ்ளோ அர்த்தங்களை வச்சிருக்கீங்க... அருமையான படைப்பு...//
ரிப்பீட்டேய்
அருமையான கவிதை
ரிஷபன்,
ரொம்ப நல்லாருக்கு.
இப்படித்தான் ஆகிவிடுகிறது
நம் வாழ்க்கை.
கம்பீரமாய் இருந்தது. நல்லாயிருக்கு.
மனத்துள் ஊடுருவுகிறதே உங்கள் கவிதை!!
சரியான போடு. அப்பாடா எனக்கும் சூடு உரைக்கிறது!!!
அர்த்தம் பொதிந்த வரிகள்.
வெங்கட்.
உங்கள் “வெள்ளை சிங்கம்” கவிதை அருமையாக உள்ளதென கர்ஜனை செய்து சொல்லுகிறேன்.
முனகல் சப்தம் கூட கேட்கவில்லை என்று தாங்கள் முனகக்கூடும்.
என்ன செய்வது! எண்ணங்களை ஒலி வடிவத்தில் அனுப்ப இயலவில்லை.
Post a Comment