August 25, 2010

என்னுலகம்


அத்தனை தெளிவாக இல்லை

என்று விமர்சிக்கப்பட்ட

அறை வாசலில் நிற்கிறேன் ..

வழிதப்பிய நண்பன் எவரேனும்

வரக் கூடுமென ..

இறைக்கப்பட்டவை ..

எதற்கும் பயனில்லை ..

அவசரத்திற்கு கிடைக்காதவை ..

என விமர்சிக்கப்பட்ட

பொக்கிஷங்களின் மத்தியில்

என் இருப்பு.

சகித்துக் கொள்பவர்களும்

முகத்திற்கு நேரே

குறை சொல்லிப் போகிறவர்களும்

விலகிப் போனதும்

நான் சேகரித்த

என் செல்லங்களிடம்

சொல்கிறேன்..

'நாம் நமக்காகவே தான்

வாழ்கிறோம் '

அப்போது அவற்றின்

புன்னகையின் தரிசனம்

பிரத்தியேகமாய்

எனக்கு மட்டுமே!


17 comments:

Chitra said...

உங்கள் உலகம், உங்கள் படைப்புகளின் அழகில் அருமையாக இருக்கிறது..... அது போதுமே!!!

vasu balaji said...

/'நாம் நமக்காகவே தான்

வாழ்கிறோம் '

அப்போது அவற்றின்

புன்னகையின் தரிசனம்

பிரத்தியேகமாய்

எனக்கு மட்டுமே!/

க்ளாஸ்

க ரா said...

அருமை ரிஷபன்.. அவரவர் உலகம் அவரவர்க்கு :)

vasan said...

ப‌ச்சை க‌ற்பூர‌ வாச‌னை க‌விதையில். ரிஷ‌ப‌ன்.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் உலகம் உங்கள் படைப்புகளின் கையில். அருமையான கவிதை.

பனித்துளி சங்கர் said...

////'நாம் நமக்காகவே தான்
வாழ்கிறோம் '
அப்போது அவற்றின்
புன்னகையின் தரிசனம்
பிரத்தியேகமாய் /
எனக்கு மட்டுமே! //////

நல்ல இருக்கு நண்பரே

ஹேமா said...

நாம் நமக்காக என்று சொல்லிக்கொண்டு அடுத்தவர்களுக்காகவேதான் வாழ்ந்து முடிக்கிறோம் ரிஷபன்.

Anonymous said...

last paragh so nice rishaban...

நிலாமகள் said...

விரக்தி நதிக் கரையில் விழி மூடிப்படுத்தபடி விம்மும் வரிகள்...
கண் திறந்தால் தான் தெரியும் உங்கள் பொக்கிஷங்களையும் செல்லங்களையும் உச்சியிலேற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கும் எங்களையும்...

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க ரிஷபன்...

ADHI VENKAT said...

ரொம்ப நல்லாயிருக்குது சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நாம எங்கே நமக்காக வாழ்கிறோம்?

Madumitha said...

நாம் நமக்காக வாழ்கிறோம் என்பதே
ஆச்சர்யம்தான்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு, ரிஷபன்.

கே. பி. ஜனா... said...

ஆமாம் சார் அழகாய்ச் சொன்னீர்கள், அவை பொக்கிஷங்கள் - நமக்கு மட்டும்!

RAJA RAJA RAJAN said...

'நாம் நமக்காகவே தான் வாழ்கிறோம்'...

ரொம்பச் சரி...!
சிறப்பு...!

http://communicatorindia.blogspot.com/

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் மனதில் அடிக்கடி நினைப்பதை நீங்கள் எழுதி விட்டீர்கள். நாம் பொக்கிஷங்களாக நினைப்பது யாவும், நம்மைச்சுற்றியுள்ளவர்களுக்கு, ஏதோ வேண்டாத பொருட்களாகவே தோன்றும். அதுவும் படைப்பாளிகள் (குறிப்பாக எழுத்தாளர்கள்) நிலைமை அங்கிங்கனாதபடி எங்குமே இதுபோலத் தான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.