எந்த அகராதியும்
வார்த்தைகளின் தொகுப்புதான்..
என் கவிதைகளுக்கான வார்த்தைகள்
நிரம்பியே இருக்கின்றன..
சேகரித்து தொகுக்கும்
வேளையும் புத்தியும்
வாய்த்து விட்டால்
என் கவிதை உருப் பெற்று விடும்..
அதுவரைஅகராதியை
எத்தனை முறை புரட்டினாலும்
கண்ணில் படும் வார்த்தைகள்
வெற்று சொற்களே..
தெருமுனை வரை
விரட்டிக் கொண்டு வந்தன
நாய்கள்.
எல்லை முடிந்து விட்டதாய்
அப்படியே நின்று
குலைத்துப் போயின..
வீடு திரும்பிய பின்னும்
விடாமல் ஒலிக்கிறது
மனசுக்குள் குரைப்பொலி.
'நீ அவன் தானே’ என்று
ஆர்வமாய்க்கேட்டார் அவர்.
கேட்டபோது
அவர் கண்களைப் பார்த்தேன்.
'இல்லை' என்று சொல்ல
மனதில்லை..
'ஆமாம்' என்று சொல்லவழியில்லை..
அவர் கையின்
ஜில்லிட்ட ஸ்பரிசம்
எனக்கு ஏன்
அவரைத்தெரியாமல் போனது என்று
உள்ளூர புலம்பத்
தோன்றியதுஎனக்கு.
அவள் கண்களில்தெரிந்த
காதலைஎன் வார்த்தைகளால்
அங்கீகரித்தபோது
என் வாழ்வில்
ஒரு புது அத்தியாயம்தெரிந்தது.
மணமான மறு வருடம்பிறந்த
மழலை
அதையே பழைய
புத்தகமாக்கி விட்டதுஇப்போது..
இன்னொரு புது அத்தியாயம்துவங்கி.
27 comments:
வாழ்த்துக்கள்
அழகாக கூறியுள்ளீர்கள்.. அருமை
மூன்றாவதும், நான்காவதும் மிக அருமை. முதல் கவிதை ஒரு முன்னுரையாய், வேளையும் புத்தியும் வாய்த்துவிட்டதைச் சொல்கிறதே:)
//சேகரித்து தொகுக்கும் வேளையும் புத்தியும் வாய்க்கும் வரை, அகராதியில் எத்தனை புரட்டினாலும் வெற்று சொற்களே
வீடு திரும்பிய பின்னும் விடாமல் ஒலிக்கிறது மனசுக்குள் குரைப்பொலி.
அவர் கையின் ஜில்லிட்ட ஸ்பரிசம்
எனக்கு ஏன் அவரைத்தெரியாமல் போனது
காதலை பழைய புத்தகமாக ஆக்கிவிட்ட மழலை ஒரு புது அத்யாயமாகத்துவங்கி//
அனைத்துக்கவிதைகளும் அருமையே!
பாராட்டுக்கள்.
Brilliant words! 3rd one, especially.... that's my favourite!
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ரிசபன்.
//'நீ அவன் தானே’ என்று
ஆர்வமாய்க்கேட்டார் அவர்.
கேட்டபோது
அவர் கண்களைப் பார்த்தேன்.
'இல்லை' என்று சொல்ல
மனதில்லை..
'ஆமாம்' என்று சொல்லவழியில்லை..
அவர் கையின்
ஜில்லிட்ட ஸ்பரிசம்
எனக்கு ஏன்
அவரைத்தெரியாமல் போனது என்று
உள்ளூர புலம்பத்
தோன்றியதுஎனக்கு. //
beautiful ரிஷபன்!
அவள் கண்களில்தெரிந்த
காதலைஎன் வார்த்தைகளால்
அங்கீகரித்தபோது
என் வாழ்வில்
ஒரு புது அத்தியாயம்தெரிந்தது.
மணமான மறு வருடம்பிறந்த
மழலை
அதையே பழைய
புத்தகமாக்கி விட்டதுஇப்போது..
இன்னொரு புது அத்தியாயம்துவங்கி.
....WOW!!¡ Lovely lines!!!!
மூன்றாவதும் நான்காவது கவிதையும் இதயம் தொட்ட வரிகள்...முதல் இரண்டும் உணர்வுகள்...
அந்த ஜில்லிட்ட ஸ்பரிசம் என்னையும் தாக்கியது சார்! அற்புதம். ;-)
நல்ல எழுத்து நடை !
உண்மைவிரும்பி.
மும்பை.
அனைத்து கவிதைகளும் அருமை!
எல்லாம் அருமை. மூன்று மிகப் பிடித்தது.
அந்த மூன்றாவது ரொம்பப் பிடிச்சது ரிஷபன் :)
எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது சார்.
அற்புதம் சார்! மீண்டும் இரவு மெல்ல ஒருமுறை அசை போடுகிறேன்.
'நீ அவன் தானே’ அருமை ..ஆனால் அந்த புதிய அத்தியாயம் மட்டும் புரியவில்லை..
நீங்கள் கவிதையாக ஆக்கிய பின் தான் நாங்கள் அனுபவித்த அந்த உணர்வுகளில் பொதிந்துள்ள கவிதைத்தனம் நினைவுக்கு வருகிறது!
எனக்கு அனைத்துமே அற்புதாமாய் உள்ளது நண்பரே ...
மிகவும் ரசித்தேன் ..
அருமையான கவிதைகள் ரிஷபன்.
ஒவ்வொரு கவிதையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் தெரிகிறது எனக்கு.
மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது கவிதைக்கான சொற்களும், குரைப்பொலியும். புலம்பலும், அந்த மழலையும்.
ரெண்டாவது க்ளாஸ்.மிகச் சிக்கனமான நேர்த்தியான அனுபவம்.
மூன்று அதற்கடுத்தது.கொஞ்சம் நகாசு குறைவதானாலும் அடிநாதம் ஏ ஒன்.
சபாஷ் ரிஷபன்.
நல்ல கவிதைகள். ஜில்லிட்ட ஸ்பரிசம் - அதை உணரச்செய்தது உங்கள் கவிதை.
//அவர் கையின்
ஜில்லிட்ட ஸ்பரிசம்
எனக்கு ஏன்
அவரைத்தெரியாமல் போனது என்று
உள்ளூர புலம்பத்
தோன்றியதுஎனக்கு. //- இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தன....
துவங்கிய புது அத்தியாயத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
என் வாழ்வில்
ஒரு புது அத்தியாயம்தெரிந்தது.
மணமான மறு வருடம்பிறந்த
மழலை
அதையே பழைய
புத்தகமாக்கி விட்டதுஇப்போது..
இன்னொரு புது அத்தியாயம்துவங்கி.//
அருமையாய் உணர்ந்து எழுதிய அற்புத விரிகளுக்குப் பாராட்டுக்கள்.
உங்கள் ஊர் பற்றிய பதிவை என் வலைப்பூவில் பார்த்தீர்களா.விழி அழகு
என்ற தலைப்பில்<??
துவங்கிய புது அத்தியாயத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
என் வாழ்வில்
ஒரு புது அத்தியாயம்தெரிந்தது.
மணமான மறு வருடம்பிறந்த
மழலை
அதையே பழைய
புத்தகமாக்கி விட்டதுஇப்போது..
இன்னொரு புது அத்தியாயம்துவங்கி.//
அருமையாய் உணர்ந்து எழுதிய அற்புத விரிகளுக்குப் பாராட்டுக்கள்.
உங்கள் ஊர் பற்றிய பதிவை என் வலைப்பூவில் பார்த்தீர்களா.விழி அழகு
என்ற தலைப்பில்<??
Post a Comment