வாரி இறைத்த
நட்சத்திரங்களை
அள்ளிக் கொண்டு
ஓடி வந்தது
குழந்தை..
அதன் சிரிப்பில்
சிதறிப் போனது
கையில் அள்ளி வந்த
நட்சத்திரங்களும்..
என் மனசும்.
ஒவ்வொரு விதமான
அணுகுமுறை
பெரியவர்களிடம்..
ஆனால்
எல்லாக் குழந்தைகளும்
ஸ்பரிசமும்
புன்சிரிப்பும்தான்
வைத்திருக்கின்றன
எல்லோருக்கும்.
எல்லாப் பிறவியும்
குழந்தையாகவேதான்
மலர்கிறது..
வளர்ந்தபின்புதான்
தெரிகிறது
பிஞ்சு இருந்த இடங்களில்
முறுக்கேறிப் போன
கிளைகளும்..
வாடிப் போன இலைகளும்.
20 comments:
மென் ஸ்பரிசமும்
புன்சிரிப்பும்
குழந்தைகளின் ட்ரேட்மார்க்.
இந்தக் கவிதை
உங்களின் ட்ரேட்மார்க்.
சார்! நீங்களும் ஒரு நட்சத்திரம். ;-))
அற்புதம் ரிஷபன் :)
//வளர்ந்தபின்புதான் தெரிகிறது
பிஞ்சு இருந்த இடங்களில்
முறுக்கேறிப் போன கிளைகளும்..
வாடிப் போன இலைகளும்.//
இது ஒரு நட்சத்திரக்கவிதை, சார்.
குழந்தைகளின் புன்சிரிப்பு போலவே மிகுந்த அழகாய் உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!
//ஒவ்வொரு விதமான
அணுகுமுறை
பெரியவர்களிடம்..
ஆனால்
எல்லாக் குழந்தைகளும்
ஸ்பரிசமும்
புன்சிரிப்பும்தான்
வைத்திருக்கின்றன
எல்லோருக்கும்.//
---குழந்தைகளை இறை தூதுவர்கள் என்பது எத்தனை சத்யமான வார்த்தைகள்!!
ஆஹா....இதுவல்லவோ ரிஷபனின் டச்!
நல்ல கவிதை. குழந்தைகள் சிரிப்பில் தான் எத்தனை எத்தனை ஆனந்தம் நமக்கு.
Superb!
rombavum unmai kooda... esp. the last stanza...
பகலிலும் மின்னும் நட்சத்திரங்களைப் பற்றி அருமையான கவிதை!
குழந்தைகளின் சிரிப்புக்கு ஈடு இணையே இல்லை. கடைசி வரிகள் அற்புதம் சார்.
அற்புதமான கவிதை..
கவிதையின் சாரம் இறுதி வரிகளில்.
அற்புதம் ரிஷபன்.
அர்த்தமுள்ள வரிகள்
///எல்லாப் பிறவியும்
குழந்தையாகவேதான்
மலர்கிறது..
வளர்ந்தபின்புதான்
தெரிகிறது
பிஞ்சு இருந்த இடங்களில்
முறுக்கேறிப் போன
கிளைகளும்..
வாடிப் போன இலைகளும்.///
பிரமாதம் சார்! குழந்தையும் மழையும் சொல்லித் தீரா அற்புதங்கள்.
கவிதைகள் மிக அழகு ரிஷபன் குழந்தையின் சிரிப்பைப் போல!
நல்ல கவிதை ரிஷபன்.
கனிகளைக் காற்று உதிர்த்து விடுகிறதோ
என்னவோ?
"பிஞ்சு இருந்த இடங்களில்
முறுக்கேறிப் போன
கிளைகளும்..
வாடிப் போன இலைகளும்".
நன்றாகச் சொன்னீர்கள்.
அருமை
முறுக்கேறிப்போன கிளைகளும்
வாடிய இலைகளும்...
அருமையான சொற்பிரயோகம்
தொடர வாழ்த்துக்கள்
ஆகா முறுக்கேறிப் போன கிளைகள் சுமந்து கொண்டிருக்கின்றன தளிர்ப் பருவத்தை நினைவுகளில் .
உண்மைதான் ரிஷபன்.. புன்சிரிப்பை பெரியவர்களானதும் இழந்து விடுகிறார்கள்..:(
Post a Comment