யார் சொன்னது ..
கடவுள் இல்லையென்று..
பசித்த வயிறுக்கு
உணவிட்ட எவரும்
கடவுளே ..
சங்கடத்தில் மாட்டிய
மனிதருக்கு
உதவிக்கரம்
நீட்டிய யாரும்
கடவுளே..
எதுவும் செய்ய இயலாமல்
போனாலும்
வார்த்தைகளால்
வானம் காட்டிய
ஜீவன் கடவுளே ..
பேச தெரியாமல்
போனாலும்
அன்பின் ஸ்பரிசம்
உணர்த்தும்
கடவுளின் இருப்பை!
17 comments:
எத்தனை எதார்த்தமான வார்த்தைகள். இது தெரியாமல் நிறைய பேர் கடவுள் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள்… நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.
//அன்பின் ஸ்பரிசம்
உணர்த்தும்
கடவுளின் இருப்பை!//
உண்மை பாஸ்!
சத்தியம் சார்
உறை போடமுடியாத கடவுளுக்கு உரை எழுதிட்டீங்க ரிஷபன்.அருமை.
அருமையாக எளிமையாக சொல்லிப் போகிறீர்கள்
கண்ணதாசன் கூட இந்த கருத்தையே
இப்படிச் சொல்லிப்போவார்
"பசித்த வயிற்றில் உணவே தெய்வம்
பாலைவனத்தில் நீரே தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்...
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Really Superb
உண்மையான வார்த்தைகள்...
கருணைக் கொண்ட உள்ளங்களில்தான் கடவுள் வாழ்கிறார்..
எங்கெங்கு தேடியும் சுலபமாக காண இயலாத அந்தக்கடவுளை, உணவிட்டவர்,
உதவிக்கரம் நீட்டியவர்,
இதமான வார்த்தை கூறியவர், அன்பினால் ஆட்கொண்டவர்
மூலமாக மிகச்சுலபமாக காட்டிவிட்டீர்கள்.
இந்த நால்வரின் மொத்த உருவமாக தங்களைக்காண்கிறேன் இந்தக்கவிதை மூலம். ஆகவே தாங்களே என் ........
மிக்க நன்றி.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
அன்பின் ஸ்பரிசம் உணர்த்தும் கடவுளின் இருப்பை... நிதர்சனமான வரிகள் சார்! கடவுளை கண் முன்னே காண்பித்து விட்டர்கள்.
'அன்பே சிவம்' தான் துணைக்கு வருகிறார்.
பிரமாதம்.
அன்பின் ஸ்பரிசம்
உணர்த்தும்
கடவுளின் இருப்பை!
சத்தியமான வார்த்தைகள்.
உண்மை..உண்மை... செம... ரிஷபன்.
நமக்கு கவிதை ரொம்ப தூரம்பா
:-)
’கடவுள்’ கவிதை அருமை... ’இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவோர்’ பற்றி நினைக்க வைத்த கவிதை.simple and superb என்பதா அல்லது simply superb என்பதா?
ஆம் ரிஷபன்.
நேசத்தின் துளியை
ருசித்தவர்கள்
யாரும் சொல்ல மாட்டார்கள்
கடவுள் இல்லையென.
கடவுள் இருக்கிறார் என்பதைக் கவிதையினூடாகப் பல வழிகளில் தரிசிக்க முடிகிறது.
யதார்த்தம் நிரம்பிய வரிகள்.
Post a Comment