இரவல் வாங்கிப் போன
கவிதைகளை
திருப்பித் தரவில்லை
நேற்றைய காற்று.
இன்றைய காற்றோ
புதிதாய்த் தந்து போனது
புதுக் கவிதைகளையும்
புது மகிழ்ச்சிகளையும்..
=========================
பயணங்களில்
சட்டென்று
பழகி விடுகிறது
சில குழந்தைகள் ...
விட்டு வர
மனசில்லாமல்
எனக்குள்ளும்
ஒரு குழந்தை மனசு..
17 comments:
புதுக்கவிதைகளையும் புதுமகிழ்ச்சிகளையும் தந்து போன இன்றைய காற்றுக்கு நன்றி, சார்.
ஆம் குழந்தை மனசுக்கு எதையும் விட்டுவர மனசே வராது, சார்.
இரண்டு கவிதைகளுமே அருமை.
பாராட்டுக்கள்.
காற்று போல உங்கள் கவிதையும் ஜீவன் உள்ளது தான்...!!
//சில குழந்தைகள் ...
விட்டு வர
மனசில்லாமல்//
ம் மிக உண்மை,. பல ரயில் பிரயாணங்களில் உணர்திருக்கிறேன். அருமை ஜி
சார்! நானும் உங்களுக்கு அந்தக் குழந்தை போல இருக்க ஆசைப்படுகிறேன். அற்புதமான கவிதை. ;-)
காற்றும் குழந்தைகளும் நமக்கு என்றுமே சலிப்பதில்லை. அதை கவிதை வடிவில் படிக்கும்போது மனதுக்குள் ஒருவித புத்துணர்ச்சியை தந்துவிட்டுப் போனதென்னவோ நிஜம். இரண்டு கவிதையும் அருமை.
காற்றுத்தந்த புதுக்கவிதையும், குழந்தையும் மனத்தில் ஒட்டிக்கொள்கின்றன.
வருடிச் செல்லும் காற்றாய், சிரிக்கும் குழந்தையாய் .... மனதிற்குள் நுழைகிறது கவிதை
காற்றின் வழி குழந்தையின் மனம் கவிதையில் :)
இரண்டும் மிக அருமை.
ரெண்டுமே அருமை..
ரெண்டுமே ரெண்டு முத்துக்கள் ..
சிறப்பான வரிகள் /..
இரண்டு கவிதைகளும் அருமை. எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தைகளைக் காணும்போது தான் அந்த குழந்தை மேலே வரும.
காற்றும் குழந்தைகளும் கடவுள்போல.யாருக்குத்தான் பிடிக்காது !
காற்றும், குழந்தைகளும்… இரண்டுமே அருமை சார்.
தென்றலாக இந்தக் கவிதைகள்!
இரண்டுக்கும் சேர்த்து இரண்டு எழுத்து.
ஆஹா.
very nice kavithaigal rishaban
Post a Comment