April 13, 2011

என் உலகம்


எனக்கான உலகம்


இப்போது சிருஷ்டியில்..


வர்ணங்கள் தேர்ந்தெடுத்து,


உடன் இருக்க


மனிதரும் யார் யாரென ..


மரம் செடி கூட


என் விருப்பமாய்..


பவழமல்லி நிச்சயமாய் ...


முடிவானதும் . ..


என் சினேகிதியிடம்


காட்டினேன் சரி பார்க்க..


ஒரு பெயரைச் சொல்லி


‘இல்லியே’ என்றாள்..


என் மன வருத்தங்களை


மீண்டும் ஞாபகப் படுத்த


அவள் சிரித்தாள்..


'உனக்கான உலகத்தில்


சந்தோஷங்கள் மட்டுமே


அங்கே பூத்திருக்கும்!


பழைய வருத்தங்களுக்கு


இடம் ஏது ?’


அவள் பெயரை


முதலாய் வைத்திருந்த


என் தெளிவில்


மகிழ்ந்தேன் மறுபடியும்..



14 comments:

கே. பி. ஜனா... said...

புது உலகம் எப்பவுமே சந்தோஷம் தான்!

Chitra said...

அருமையான "feel good" கவிதை. :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவள் பெயரை முதலாய் வைத்திருந்த
என் தெளிவில் மகிழ்ந்தேன் மறுபடியும்..//

அழகான வண்ணவண்ண நினைவலைகள், பவழமல்லி போலும் அதன் வாசனை போலும் இந்தக் கவிதையில் ஒளிந்து என்னையும் மயக்கி எங்கோ கொண்டு செல்கிறது.

வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கவிதை சார்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பவச்ழமள்ளியின் மென்மையும் வாசமுமாய் அழகிய

raji said...

fantastic sir.hats off

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பவழமல்லியையும் கோர்த்துக்கொண்டதாலேயே கவிதை மணக்கிறது ரிஷபன்.

அது நம் உலகம்.சரிதானே?

ஹேமா said...

பவளமல்லி பெயரிலேயே வாசனை.
மனதைக் கொள்ளையடிக்கும் கள்ளியும்கூட !

vasan said...

நான் காணும் க‌னவில் நாமுன்டு,
நான் ப‌டைக்கும் க‌ன‌வில் நானில்லை.

வசந்தமுல்லை said...

உனக்கான உலகத்தில்


சந்தோஷங்கள் மட்டுமே


அங்கே பூத்திருக்கும்!


பழைய வருத்தங்களுக்கு


இடம் ஏது ?’


அவள் பெயரை


முதலாய் வைத்திருந்த


என் தெளிவில்


மகிழ்ந்தேன் மறுபடியும்..

வேலை பளுவிற்கு நடுவிலும் கவிதை எழுதும் என்னவென பாராட்ட?

மோகன்ஜி said...

அற்புதமான வரிகள் ரிஷபன் சார்! புத்துணர்வூட்டும் வரிகள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//உடன் இருக்க

மனிதரும் யார் யாரென .. //

//பவழமல்லி நிச்சயமாய் ...//


//அவள் பெயரை

முதலாய் வைத்திருந்த

என் தெளிவில்

மகிழ்ந்தேன் மறுபடியும்..//


மனதை நெகிழ்த்திய வரிகள் !!

ADHI VENKAT said...

பவளமல்லியின் மணம் மற்றும் அழகைப்போல அற்புதமா இருக்கு சார்.

Matangi Mawley said...

Brilliant! :) romba azhagaana ulagam! .... esp. pavazhamalli irukkum entha ulagamum nalla ulagame ! :)