June 14, 2011

கடிதம்


கடிதங்கள் அற்றவாழ்க்கை
முகவரியற்றுப் போகும்
எண்களால் அறியப்பட்டு
கைபேசிகளில் பதிந்து
தொடர்பு எல்லைக்கு அப்பால்
நம் உறவுகள்
பின்னப் பட்டிருக்கிறது
எலக்ட் ரானிக் இழைகளால்..
மாயக் குரல் வலையில்
அமிழ்ந்து கிடக்கும்
மனிதர்களைக்
கரை சேர்க்கும்
காகிதக் கப்பல்..
வார்த்தைத் துடுப்புகளால்
இயக்கப் பெற்று
மசியாத மனசையும்
'மசி'ய வைக்கும் வண்ணங்கள்..
காகிதங்களைச் சேமிப்போம்..
நட்பின் எண்ணங்களைச்
சுமந்து வரும்
கடிதங்களாய்!


28 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கவிதை.

//மசியாத மனசையும்
'மசி'ய வைக்கும்
வண்ணங்கள்..//

’மசி’ யை மறக்காமல் நினைவு படுத்தி என் நெஞ்சை பழைய ஞாபகங்களில் மசிய வைத்து விட்டீர்கள்.

பாராட்டுக்கள், சார்.

Voted 2 to 3

பத்மநாபன் said...

காலம் தொலைத்த கடிதத்தை கவிதை அடையாளம் காட்டுகிறது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் ஆணின் படம் மங்கலாக பழைய காகிதம் போலவும் மசி போலவும்.....

பெண்ணின் படம் நவீன கைபேசி போல ரொம்பவும் அழகாக, கட்டிப்பிடித்து, மெய்மறந்து, மற்றவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதோ?

A.R.ராஜகோபாலன் said...

கடிதங்கள் அற்றவாழ்க்கை
முகவரியற்றுப் போகும்
எண்களால் அறியப்பட்டு
கைபேசிகளில் பதிந்து
தொடர்பு எல்லைக்கு அப்பால்
நம் உறவுகள்
பின்னப் பட்டிருக்கிறது


கடிதங்கள் நம்
உறவினர்களின்
உணர்வுகளை
சுமந்து வரும்
தகவல்
வாகனம்

பழைய
கடிதங்களை
மீண்டும் மீண்டும்
படிக்கும் போது
அந்த அனுபவம்
சுகானுபவம்

அற்புதமாய்
அதை சொல்லிய விதம்
அருமை

மதுரை சரவணன் said...

நல்ல கவிதை தந்து எங்களை மசிய வைத்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்

RVS said...

கையொடிய கசிந்துருகி கடிதம் எழுதியது வழக்கொழிந்து விட்டது..
விரலொடிய சுருக்கு எழுத்தாக எஸ்.எம்.எஸ் அடிக்கிறார்கள்...
கல்லையும் கசிய வைக்கும் கவிதை... ;-))

ராமலக்ஷ்மி said...

கடிதங்கள் எழுதிக் களித்த காலத்தை ஏக்கத்துடன் நினைக்க வைத்த கவிதை.

எல் கே said...

கடைசியாய் மேல்நிலை பள்ளியில் படிக்கும் பொழுது ஒரு நண்பனுக்கு எழுதியது. அதன் பிறகு ஹ்ம்ம் .. பழைய நியாபகங்கள் .. படமும் அருமை

சமுத்ரா said...

உண்மை தான்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பேசும் போது நாம் யோசிப்பதில்லை.ஆனால் நினைக்காததை எழுதுவதில்லை.

எழுத்து உறவுகளைக் காத்தது. சேர்த்தது.

பேச்சு உறவுகளை அழிக்கிறது.பிரிக்கிறது.

அற்புதங்களை இழந்துவருகிறோம் ரிஷபன் ஒவ்வொன்றாக.இனிமேல் அவை கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தும் தொலைப்பவன் மனிதன் மட்டும்தான்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

எழுத்துகளுக்கு உயிர்ப்பு இருப்பதை உணர்ந்ததால்தானே எனக்கு வந்த எத்தனையோ கடிதங்களை இன்னமும் கிழிக்காமலும், எரிக்காமலும், எடைக்கு இடாமலும் பாதுகாத்துவருகிறேன்.(தங்களது கடிதங்களும் என் பொக்கிஷத்தில்)

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்கள் சார். கடிதம் எழுதுவது ஒரு சுகானுபவம். பழைய கடிதங்களை படிப்பதும் சந்தோஷத்தை தரும்.

vasu balaji said...

Nice one!

பாலா said...

அருமையான வார்த்தைகள்... சிறிது நாட்கள் முன்பு கடிதங்களைப் என் பதிவில் பற்றி நீட்டி முழக்கியிருந்தேன்... நிறைவான வார்த்தைளில் சாரத்தை கொடுத்துவிட்டீர்கள்...

http://nanganallurnerangal.blogspot.com/2011/04/blog-post_21.html

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அற்புதமான கடிதங்கள் இலக்கியங்களே!

நிரூபன் said...

மசியாத மனசையும்
'மசி'ய வைக்கும் வண்ணங்கள்.//

மனசை டச்சிங் பண்ணிட்டீங்க சகோ.

கடிதங்கள் எழுதி எவ்ளோ நாளாச்சு,

கடிதங்கள் பற்றிய பல நினைவுகளை உங்கள் கவிதை மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறது, அத்தோடு கடிதங்கள் பற்றிப் பரந்து பட்ட பார்வையில் நோக்கியிருக்கிறீங்க.

நிலாமகள் said...

ந‌ம் சேக‌ரிப்பிலிருக்கும் க‌டித‌ங்க‌ள் எழுதிய‌வ‌ரின் ம‌று உரு. விர‌ல்க‌ளும் க‌ண்க‌ளும் ப‌ட்டு ப‌ட்டு அவ‌ற்றில் ஏறியுள்ள‌ ப‌ழுப்பு... ம‌றுப‌டி ப‌த்திர‌ப்ப‌டுத்துகையில் ம‌ன‌சில் எழும் எழுதிய‌வ‌ருக்கான‌ வாஞ்சை... எத்த‌னை த‌க‌வ‌ல் தொட‌ர்பு சாத‌ன‌ங்க‌ள் வ‌ந்தாலும் க‌டித‌மெழுதும் ப‌ழ‌க்க‌த்தை அருக‌ம்புல் வேர் போல‌ உயிர்த்திருக்க‌ வைக்க‌ வேண்டும்.வேருக்கு நீராய் உங்க‌ள் ப‌திவு.

vidivelli said...

நண்பா உங்க பக்கம் இதுதான் முதல் வருகை..
அருமையான கவிதை.


நல்ல பதிவு தொடர்ந்து வருவேன்
!!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க வரவுக்காக!!

வெங்கட் நாகராஜ் said...

மறக்க முடியா கடிதங்கள் போல இதுவும் நெஞ்சில் வைக்க வேண்டிய நல்ல கவிதை...

சற்றே தாமதமாய் வந்தமைக்கு வருத்தங்கள்...

arasan said...

வரலாற்றில் புதைக்கபடும் நிலை தான கடிதத்துக்கு ...
உங்களின் வெளிப்பாடு அருமை ...

kowsy said...

கைப்பட எழுதும் கடிதம் போல் கணனிக் கடிதம் அமைவதில்லை. காலம் மாறிப் போனாலும் சில விடயங்கள் பழைமையில் இருக்கும் சுகம்போல் வருவதில்லை. கைத்தொலைபேசி வந்தபின் யார்தான் தொலைபேசி இலக்கங்களை மனனம் செய்து வைத்திருக்கின்றார்கள். மனனம் செய்வதையே மறக்க வைக்கிறதே கணனி உலகம். நவீன உலகம். கவிக்கும், இக்கவி தந்த சிந்தனைக்கும் வாழ்த்துகள்

Unknown said...

மசியை மைய மாக்கி-கவிதை
பசியை நீர் போக்கி-நல்
ருசியை உரு வாக்கி-இன்பம்
கசியச் செய்தது கடிதம்-இந்த
கவிதை அதனின் வடிவம்

புலவர் சா இராமாநுசம்




புலவர் சா இராமாநுசம்


புலவர் சா இராமாநுசம்

கே. பி. ஜனா... said...

அன்புள்ள ரிஷபன், நலம்.நலமறிய ஆவல். உங்கள் கவிதை படித்து பரவசமானேன். உடனே இந்தக் கடிதம் எழுதுகிறேன் உங்களுக்கு. அற்புதம்! அன்புடன், கே.பி.ஜனார்த்தனன்.

கதம்ப உணர்வுகள் said...

கடிதம் கொண்டுச்சென்ற மன உணர்வுகளை, காதலை, அன்பை சமனாக்கும் பிரிவை... ஆறுதல் தரும் வரிகள் கடிதம் சொல்லும் மகிழ்வை....

என் பழைய காலத்துக்கே கொண்டுச்சென்ற கவிதை இது.

பிரிவை கொஞ்சமே கொஞ்சம் மறக்கச்செய்யும் சக்தி கடிதம் தாங்கிச்செல்லும் அன்புக்கு மட்டுமே..

மிக அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள் ரிஷபன்.

மோகன்ஜி said...

நான் இட்ட பின்னூட்டத்தைக் காணலியே ரிஷபன் சார்!

லயிக்க வைத்த கவிதை..

கிருஷ்ணப்ரியா said...

கடிதம் எழுதிய நாட்களின் இனிமையை அசை போட வைத்துவிட்டது உங்கள் கவிதை.... தபால் காரர் வரும் நேரம் பார்த்து காத்திருந்ததும், நமக்கான கடிதம் கையில் கிடைத்ததும் மகிழ்ந்ததும்...... எல்லாம் கனவாகி விட்டது ரிஷபன்....

ரிஷபன் said...

மோகன் ஜி.. அந்த பின்னூட்டம் என்ன ஆச்சோ.. போட்டால் உடனே வருகிற அமைப்பில்தான் என் பிளாக். எதுக்கும் எதிர் வீட்டுல கேட்டுப் பார்க்கிறேன்..

kannan said...

ஐயாவின் பதிவுக்கு எனது வருகை இதுவே முதல் முறை.... கடிதங்கள் குறைந்து போனதால், சேர்த்து வைக்க உறவுகளின் நினைவுச்சின்னங்கள் மிகவும் குறைந்துவிட்டன.... பலரது வேலைவைப்புக்களும் தான்.


மரம் வளர்ப்பு பற்றி....குறும்பை
குதர்க்கமாக பார்காததர்க்கு நன்றி. மனதில் ஏற்படும் தாக்கம் வெறும் தாக்கமாகவே இல்லாமல், பயனுள்ள வெளிப்பாடாக இருக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட சின்ன சின்ன வார்த்தைகள் தாம் அவை. எங்கேயாவது மரம் வளர்க்க ஏற்பாடு செய்யுங்கள். நான் வளர்த்ததில்லை இதுவரை, அதனால்தான் இத்துனை அறிவுரைகளும்