August 26, 2011

குறுஞ்செய்திகள்

தினசரி கைபேசியில் பீப் ஒலி கேட்டதும் .. ஆர்வமாய் எடுத்துப் பார்ப்பேன்.

குறுஞ்செய்திகள்.. எத்தனை சுவாரசியமாய்.. புதுமையாய்..

சாம்பிளுக்கு இதோ சில..

வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயம்..

டிபன்
லஞ்ச்
டின்னர்

நமக்கு சாப்பாடுதான் முக்கியம். நீங்க சாப்டிங்களா..

கைபேசியில் வந்த குறுஞ்செய்தி!

5 வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும்.

கடவுள் ஒரு நாள் என் ஞாபக சக்தி முழுவதையும் அழித்துவிட்டார்.
அப்புறம் கேட்டார். ‘இப்ப ஏதாச்சும் நினைப்புல இருக்கா’
நான் உன் பெயரைச் சொன்னேன்.
கடவுள் சிரித்தார். ‘பார்மேட் பண்ணியும் வைரஸ் போகல போல’

நீ ஒரு பென்சிலா இருந்து யாரோட சந்தோஷத்தையாவது எழுதமுடியாட்டியும், ரப்பரா இருந்து அவங்க சோகத்தை அழிக்க முயற்சி பண்ணு..

செத்தப்புறம் சொர்க்கத்துக்கு போகறது இருக்கட்டும்.. இருக்கறப்ப அடுத்தவங்க மனசுல சொர்க்கத்தைக் காட்டு.. அதான் முக்கியம்.

நட்பைப் பத்தி ஒரு சைனீஸ் கவிஞர் சொல்லி இருக்கார்..
ழின் சுவ் சியோனா சங்
மோ யூன சங்
பினாகொ சே
ச்சே.. என்னமா சொல்லி இருக்கார்.. நான் அப்படியே கண் கலங்கிட்டேன்.. படிச்சுட்டு.
வாட் அபவுட் யூ?

இந்த உலகத்துல உண்மையான உறவு எப்படி இருக்கும் தெரியுமா..
அடுத்தவர் கையைப் பிடிச்சுகிட்டு நீ நடக்கும்போது, ‘எங்கே’ ‘எதுக்கு’ன்னு கேட்காம கூட வராங்க பாரு.. அதுதான்!

புது நட்பு கவிதையா இருக்கலாம்.. ஆனா பழைய நட்பு ‘உயிர் மெய் எழுத்துக்கள்’ மாதிரி.. அதை மறந்துராதே.. ஏன்னா கவிதையைப் படிக்க எழுத்துக்கள் அவசியம் தேவை!

குழந்தைக் கொசு அதோட முதல் பறத்தல் முடிஞ்சு திரும்பி வந்திச்சாம்.
அம்மா கேட்டாங்க.. ‘எப்படிரா செல்லம் இருந்துச்சு..’
‘சூப்பர்மா.. எல்லாரும் கை தட்டினாங்க.. நான் பறக்கறப்ப..’


ம்ம்.. நட்பு வட்டம் எப்படியாவது நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.. எப்போதும்.







21 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர்...!!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான வரிகள்:

//நீ ஒரு பென்சிலா இருந்து யாரோட சந்தோஷத்தையாவது எழுதமுடியாட்டியும், ரப்பரா இருந்து அவங்க சோகத்தை அழிக்க முயற்சி பண்ணு..

அருமையான வரிகள்:

செத்தப்புறம் சொர்க்கத்துக்கு போகறது இருக்கட்டும்.. இருக்கறப்ப அடுத்தவங்க மனசுல சொர்க்கத்தைக் காட்டு.. அதான் முக்கியம்.//


மிகவும் ரசித்தது:

//குழந்தைக் கொசு அதோட முதல் பறத்தல் முடிஞ்சு திரும்பி வந்திச்சாம். அம்மா கேட்டாங்க.. ‘எப்படிரா செல்லம் இருந்துச்சு..’‘சூப்பர்மா.. எல்லாரும் கை தட்டினாங்க.. நான் பறக்கறப்ப..’ //

பகிர்வுக்கு நன்றிகள். vgk

manichudar blogspot.com said...

பகிர்வு, நல்ல பதிவும் கூட.

பத்மநாபன் said...

அஹா அருமை... நகலெடுத்து வைத்து ஒவ்வொன்றாய் விடலாம் என்றிருக்கிறேன்...

Chitra said...

கடவுள் ஒரு நாள் என் ஞாபக சக்தி முழுவதையும் அழித்துவிட்டார்.
அப்புறம் கேட்டார். ‘இப்ப ஏதாச்சும் நினைப்புல இருக்கா’
நான் உன் பெயரைச் சொன்னேன்.
கடவுள் சிரித்தார். ‘பார்மேட் பண்ணியும் வைரஸ் போகல போல’


..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

raji said...

ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்தில ரசிக்கும்படியான குறுஞ்செய்திகள்.அருமை

settaikkaran said...

//ழின் சுவ் சியோனா சங்
மோ யூன சங்
பினாகொ சே//

இது நான் சொன்னதாச்சே? எந்த சைனீஸ் கவிஞர் ஆட்டையைப் போட்டாரு? :-)

middleclassmadhavi said...

அத்தனை கைதட்டலுக்கும் உயிர் தப்பிடிச்சே அந்தக் கொசு! :-))

எல்லாமே அருமை!

இராஜராஜேஸ்வரி said...

ம்ம்.. நட்பு வட்டம் எப்படியாவது நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.. எப்போதும்//

ஆம். எப்போதும் உற்சாகப் - படுத்தும் தான் நட்பு வட்டம்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

சூப்பர் பாஸ்! அதுவும் அந்த சைனீஸ் கவிதை செம்ம! :-)

ஸ்வர்ணரேக்கா said...

வைரஸ் மேட்டர் சூப்பர்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கலக்கிட்டீங்க. சிரிச்சதுல கண்ணு கலங்கிடுச்சு.

கதம்ப உணர்வுகள் said...

ஹே ரிஷபன் நீங்க எழுதினதை படிச்சிட்டு நான் மட்டும் அல்ல அம்மாவும் சிரிச்சாங்க. அம்மாக்கிட்ட முதல்ல வாசிச்சு காமிச்சது எது தெரியுமா?

புரியாத மொழியில் நட்பை பத்தி அதாம்பா சீன மொழி... வாட் அபவுட் யூ? இதை அம்மாக்கிட்ட படிச்சிட்டு அம்மா முகத்தை பார்த்தேன்.... எனக்கு புரியலையேன்னு.. அம்மா சிரிச்சிட்டாங்க... அம்மா சொன்னாங்க ... இது போல ஜோக்குகள் எல்லாம் அர்த்தம் தேடாதே சிரிக்க தான் அப்டின்னு... கொஞ்சம் லேட்டா சிரிச்சேன் ட்யூப் லைட் போல....

ரசிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த இருக்கும்போது அடுத்தவர் மனதில் சொர்க்கம் காட்டச்சொன்ன வரிகள் பென்சிலா சந்தோஷம் ட்ரா பண்ண முடியலன்னாலும் ரப்பரா சோகம் ரப் பண்ண சொன்ன விஷயம் அசத்தல்பா...


ரசிக்க வைத்த குறுஞ்செய்திகள்...

இனி அடிக்கடி போடுங்க ரிஷபன்..

அன்புவாழ்த்துகள்பா...

Anonymous said...

///குழந்தைக் கொசு அதோட முதல் பறத்தல் முடிஞ்சு திரும்பி வந்திச்சாம்.
அம்மா கேட்டாங்க.. ‘எப்படிரா செல்லம் இருந்துச்சு..’
‘சூப்பர்மா.. எல்லாரும் கை தட்டினாங்க.. நான் பறக்கறப்ப..’///


என்னமா சிந்திச்சிருக்கான்யா..

உலகில் அடையாளம் தெரியாத மிக மிக அற்புதமான கவிஞர்கள் எத்தனை யோ பேர் இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக புரிகிறது...

குறையொன்றுமில்லை. said...

எல்லாமே நல்லா இருக்கு.

Anonymous said...

பொன் மொழி போல எஸ் .எம்.எஸ் மொழி நல்லாயிருக்கே!..எப்படி எப்படி உலகு மாறுது !...இல்லையா!
வேதா. இலங்காதிலகம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறுஞ்செய்திகள்... பல சமயங்களில் நல்ல விஷயங்களும் வருகிறது என்பதும் சந்தோஷம்...

உங்களுக்கு வந்த குறுஞ்செய்திகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ரொம்ப பிசியா? நம்ம பக்கம் காணோமே....

ஷைலஜா said...

குறுஞ்செய்திகள் அளிப்பதிலும் வித்தியாசமாக நிஜமாகவே ரசிக்கும்படியாய் அளிக்கும் எங்க ஊர்க்காரருக்கு ஜே!!

ADHI VENKAT said...

அருமையான குறுஞ்செய்திகள். அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி சார்.

சமுத்ரா said...

ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்தில ரசிக்கும்படியான குறுஞ்செய்திகள்.அருமை

கீதமஞ்சரி said...

இதமான, இனிமையான குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றும் உள்ளடக்கியிருக்கும் கருத்துகள் மிகப்பெரியவை. பகிர்வுக்கு நன்றி.