September 01, 2011

பூஜாவும் பவனும்


அவர் ரொம்ப நேரமாய் தயங்கித் தயங்கி நின்றிருந்தார்.

‘போம்மா.. அந்த தாத்தாக்கு என்ன வேணும்னு கேளு’ என்றேன் இரண்டரை வயது பூஜாவிடம்.

கையில் வைத்திருந்த விளையாட்டு பொம்மையுடன் (பெயர் பவன்) போனாள்.

‘தாத்தா என்ன வேணும்..’

அவருக்கு இவளிடம் கேட்கலாமா, வேண்டாமா என்ற யோசனை.

‘சொல்லுங்க.. என்கிட்டே சொல்ல வேண்டாம்னா பவன் கிட்ட கேளுங்க’

அது யாரு பவன் என்று விழித்தார்.

‘பவன் தெரியாதா.. ’

கையில் வைத்திருந்த பொம்மையை உயர்த்திக் காட்டினாள்.

‘இவன் தான்.. அவனுக்கு எல்லாரும் ப்ரெண்ட்ஸ்’

வந்தவர் ஏதோ கேட்க, அந்த வீட்டுச் சிறுமியின் பேரைத் தற்செயலாகச்

சொன்னதும் பூஜாவே கொண்டு போய் விட்டாள்.

அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிற யாரைப் பற்றி கேட்டாலும் அவளுக்குத்

தெரிகிறது.

புவனாவிடம் சொன்னேன்.

‘பாரேன்.. இந்த வாலு அத்தனை பேரையும் தெரிஞ்சு வச்சிருக்கு..’

புவனா கொடுத்த நோஸ்கட்..

‘உங்களையே பூஜா அப்பான்னாதான் தெரியும்.. இங்கே.. பேங்க் மேனேஜர்னு

அலட்டல் செல்லாது.. ‘

திரும்பிப் பார்த்தேன்.

சாயம் போன ‘பவனுடன்’ பூஜா ரொம்ப சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் உலகம் இனிமையானது..


(எதிர் வீட்டு குழந்தையை கவனித்ததில் கிடைத்த கதை)



17 comments:

மதுரை சரவணன் said...

vaalththukkal..

வை.கோபாலகிருஷ்ணன் said...

சின்னக்கதை, சிறப்பான கதை, குழந்தைகள் உலகமே தனி தான்.
மிகவும் சுகமானது தான். vgk [1 to 2]

Rekha raghavan said...

அருமை.

கே. பி. ஜனா... said...

இனிமையானது மட்டுமல்ல சுவாரசியமானதும் கூட!

KParthasarathi said...

சிறிதானாலும் சுவையாக இருக்கிறது. நன்றி

rajamelaiyur said...

//குழந்தைகளின் உலகம் இனிமையானது..//
உண்மை

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உண்மைதான். குழந்தைகள் அற்புதமானவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.

குழந்தைகளின் உலகம்தான் எத்தனை அற்புதமானது... ம்ம்ம்....

Unknown said...

குறுங்கதை இதுவே ஆனாலும்-நல்
குறையில் இன்பத் தேனாகும்
வெறுங்கதை யல்நல் கருத்தோடு-இது
விளங்கிட மிகமிக சிறப்போடு
அருங்கதை தந்தீர் அன்போடு-என்
இதயம் மகிழ இன்போடு
வரும் உங்கள் வரவுக்கு-காத்து
வலையும் நோக்குது உறவுக்கு

புலவர் சா இராமாநுசம்

கவி அழகன் said...

தெய்வ திரு மகளோ

மாதேவி said...

இனிய உலகம்.

கீதமஞ்சரி said...

மனிதர்களை நேசித்தது போக பொம்மைகளுக்கும் பொங்கப் பொங்க தம் அன்பையும் பரிவையும் பரிசளிக்கும் குழந்தைகள், உண்மையில் நமக்கு நிறையவே கற்றுத்தருகிறார்கள். நல்ல பதிவு.

நிலாமகள் said...

கீதாவை வ‌ழிமொழிகிறேன்.

middleclassmadhavi said...

கரெக்ட்!

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
குழந்தைகள் உலகுக்குள்
போக மட்டும் தெரிந்துகொண்டால்
நாம் சொர்க்கத்துக்குள் போகத்
தெரிந்து கொண்டமாதிரிதான்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்க

குறையொன்றுமில்லை. said...

நல்ல கதை. ஆமா குழந்தைகளின் உலக்மே தனிதான்.

ADHI VENKAT said...

நல்ல கதை.குழந்தைகளின் உலகம் அலாதியானது.