September 17, 2011

அன்பின் மொழி




ஒரு நீண்ட முனகலுக்குப் பின்
வெளியே வந்தோம்.
மனப் பறவை கூடு விட்டு
வெளியே பறந்திருந்தது..
இருட்டி, இடி மின்னல் என
குமுறி விட்டுப் போயிருந்தது வானம்.
கால்கள் நனைய
விரல்களின் வழி
ஜில்லிப்பு ஏறத் துவங்கியது..
வெளிறிட்ட வானம்
அதுவரை ஒளிந்திருந்த
மனிதரை
வெளியே அழைத்தது..
குருவிகளின் சிறகடிப்பு
எங்கள் தலைக்கு மேல்..
காதல் பேசிய காலங்களின்
சிறகசைப்பு எங்களுக்குள்ளும்..
குழந்தைகளானோம்..
அவள் கரம் பற்றி எனதும்
உயர்ந்து நிமிர..
அத்தனை பறவைகளும்
போட்டியிட்டு வந்தன..
வெளியே தெரியாமல்
எங்கள் மனப் பறவையும்
இணைந்த கரங்களின் வழியே
அதன் கூட்டுக்குள் நுழைந்து
கேலி செய்தது..
அன்பின் மொழி பேசி!




25 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர் கவிதை சார், இது!

மனோ சாமிநாதன் said...

அருமையான கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//குருவிகளின் சிறகடிப்பு
எங்கள் தலைக்கு மேல்..
காதல் பேசிய காலங்களின்
சிறகசைப்பு எங்களுக்குள்ளும்..//

தேர்ந்தெடுக்கப்பட்ட படமும், அதிலுள்ள பறவைகளும், அவற்றைப்பிடிக்க அன்புடன் இணைந்த இரு கரங்களும் அருமை. அவற்றிலும் கூட அன்பை உணர முடிகிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அழகிய பகிர்வுக்கு நன்றிகள். vgk [ 1to2]

ராமலக்ஷ்மி said...

அன்பின் மொழி என்றும் அழகு.

Yaathoramani.blogspot.com said...

அதுவரை ஒளிந்திருந்த
மனிதரைவெளியே அழைத்தது..

அது மலர்களாலும் பறவைகளாலும்
குழந்தைகளாலும் மட்டுமே ஆகக் கூடியது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்.

raji said...

அன்பின் மொழியும் அதற்கேற்ற புகைப்படமும் அற்புதம்.

மனப் பறவையின் அன்பு வெளிப்பட்ட விதமும் அருமை

settaikkaran said...

படத்தைப் பார்த்து எழுதிய கவிதையா?
கவிதை எழுதிட்டுப் படம் தேடினீர்களா?

பொருத்தமாகவும், எளிதில் புரியும்படியும், அழகாகவும் இருக்கிறது.

மாலதி said...

வெளியே தெரியாமல்
எங்கள் மனப் பறவையும்
இணைந்த கரங்களின் வழியே
அதன் கூட்டுக்குள் நுழைந்து
கேலி செய்தது..
அன்பின் மொழி பேசி!//
ஒரு சிறந்த ஆக்கம் பாரட்டுகள் கூடு விட்டு வெளியேறும் பொது சுமைகல்தனே உள்ளத்தில் இருக்க உங்கள் ஆக்கம்ன் நன்மொழிபேசி வீழ்த்துகிறது நல்லிதயங்களை

கவி அழகன் said...

அருமை கவியை படித்தேன்
அன்பு மலையில் நனைத்ந்தேன்

பத்மநாபன் said...

படத்திலும் கவிதையிலும் அன்பு பளிச்சென வெளிப்படுகிறது....

vasu balaji said...

சிட்டுக்குருவி மாதிரியே அபூர்வமான கவிதை இது:)

குறையொன்றுமில்லை. said...

அழகான கவிதை, மிக சுவாரசியம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

படமும் கவிதையும் அருமை.

கீதமஞ்சரி said...

அழகிய வர்ணனையும் வார்த்தையாடல்களும்.அன்பின் மொழி பேசும் மனப்பறவையின் சிறகசைப்பு எனக்குள்ளும்.மிகவும் ரசித்தேன்.

சென்னை பித்தன் said...

கவிதைக்காகப் படமா?படத்துக்காகக் கவிதையா?எப்படியிருப்பினும் அருமை!

KParthasarathi said...

படிக்க இனிமையாக இருந்தது

இராஜராஜேஸ்வரி said...

எங்கள் மனப் பறவையும்
இணைந்த கரங்களின் வழியே
அதன் கூட்டுக்குள் நுழைந்து
கேலி செய்தது..
அன்பின் மொழி பேசி!//

அன்பே உலக மொழி அல்லவா?
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

vimalanperali said...

நல்ல கவிதை.அருமையான நினைவுகள். வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

அருமையான வரியும் அர்த்தமான படமும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

கே. பி. ஜனா... said...

அன்பின் மொழி வழி காதல் பேசுவது அற்புதமானது தான்!

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை. படத்திற்கு ஏற்ற கவிதை....

கதம்ப உணர்வுகள் said...

மனப்பறவை என்னவெல்லாம் நினைத்துவிடுகிறது செய்துவிடுகிறது.. அன்பினை பகிர்ந்துவிடுகிறது.... இணைத்துவிடுகிறது....

மொழியினை கூட அன்பாய் மாற்றிவிட்டதே....

அன்பு இருந்தால் எதுவும் சாத்தியம்னு நிரூபிச்சிருக்கீங்க ரிஷபன்...

அழகு அழகு... அம்புட்டு வரிகளும் அழகு.... மனதில் நிலைத்து நிற்கிறது...

அன்பு வாழ்த்துகள்..

vasan said...

அருகி வ‌ரும் சிட்டுக்குருவியாய்..
ஒரு அருவிக் க‌விதை இய‌ல்பாய் .

vetha (kovaikkavi) said...

''...எங்கள் மனப் பறவையும்
இணைந்த கரங்களின் வழியே
அதன் கூட்டுக்குள் நுழைந்து
கேலி செய்தது..
அன்பின் மொழி பேசி!....
mmmmm.....good... vaalthukal..
Vetha.
http://www.kovaikkavi.wordpress.com