சட்டென்று
மனதில் வரும் பெயரை
சொல்லச் சொன்னாய்..
'சிலகா' என்றேன் உடனே..'எப்போதும் என் பெயர்தானா '
என்கிற உன் செல்ல சிணுங்கலை
ரசித்தபடி !கண் மூடி சப்தங்கள் பற்றி
யோசித்துக் கொண்டிருந்தேன்
சப்தமே இல்லாமல்
வந்து விட்டு போனது
ஒரு கவிதை
எனக்கு வெளியே !
.
நள்ளிரவில் கண் விழித்துசட்டென்று வெளியே வந்தால்
மரங்களுடன் பேசுவதை நிறுத்தி
மௌனமாகிறது காற்று !
13 comments:
சிலகா.....
கிளிபோன்ற அழகான பெயர்.
கவிதையும் அது போலவே அழகு!
வாசித்தேன்..ரசித்தேன்.
மென்மையான தென்றலாய் வருடிப் போனது. உங்கள் கவிதை சார்.
கவிதை நன்றாக இருக்கிறது.
நள்ளிரவில் கண்விழித்தது மின் தடையால் தானே...?!:(
சிலகா... இதமா...
நழுவிப் போகும் கவிதையை தாவிப் பிடிப்பதில் தானிருக்கிறது நம் பாடு...
சிலகா! வாவ் நல்ல பெயர். நல்ல கவிதை பகிர்வு. ரசித்தேன்.
நள்ளிரவில் கண்விழித்து...
காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் 'உயங்' சட்'டென நிற்பது போல உணர்வு!
அட, காற்றும் நம்மைக் கண்டதும் உஷாராகி விடுகிறது!
ரசித்தேன்.
நிலாமகள் கமெந்ட் ஹஹ்ஹா!
கவிதைகள் அழகு! கவிதைக்கு வைத்திருககும் ‘சிலகா’வின் படமும் அழகு! மிக ரசித்தேன்..!
என் மூத்த மறுமகளுக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் சிலகா.ஒரு வாரத்துக்குப் பிறகு வலையில் கண்ட தலைப்பு முதல் பின்னூட்டம் எழுத வைத்தது. கவிதை அழகு. ரசித்தேன்.
மூன்றும் அழகா வந்திருக்கே.’சிலகா’சிணுங்குவது கேட்கிறது !
Post a Comment