பாதைகளைச் செப்பனிட்டு
பல காலம் ஆகிவிட்டது..
முட்களும் புதர்களுமாய் வழி நெடுக
போகும் வழி அடைத்து..
எவரும் கண்டறிந்து
வரக் கூடுமென
எதிர்பார்க்க முடியவில்லை..
இப்போதேல்லாம்
கண்ணில் படுவதைக் கூட
நிராகரித்துச் செல்லும்
மனிதர்களே அதிகம்.
என்றோ ஒரு நாள்
யாரேனும் வரக் கூடுமென
தனக்குள் முனகலுடன்
புற்றெழுப்பிக் காத்திருக்கிறது
என் அன்பெனும்
ஜீவிதம் !
16 comments:
//புற்றெழுப்பிக் காத்திருக்கிறது
என் அன்பெனும்
ஜீவிதம் !//
அழகானதொரு எதிர்பார்ப்புக் கவிதை!
அன்பான பாராட்டுக்கள்.
நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமோ
நிராகரித்து செல்லும் அன்புக்காக,எதிர்பாராமலேயே எதிர்பார்க்க வைக்கும் ஜீவிதம் அன்பால் மட்டுமே இருக்க முடியும்.
அன்பெனும் ஜீவிதம்.... அருமை.
இப்போதேல்லாம்
கண்ணில் படுவதைக் கூட
நிராகரித்துச் செல்லும்
மனிதர்களே அதிகம்....
வாஸ்தவமான வார்த்தைகள் ரிஷபன்!
சார் இந்த கவிதை இப்போ எழுதிய மாதிரி தெரிய வில்லை. எத்தனை வருஷம் முன்பு எழுதியது?
அன்பெனும் ஜீவிதம் புறக்கணிக்கமுடியாதது. எதையும் சாத்தியமாக்கும். நிச்சியம் தேடிக்கொண்டு வருவார்கள்.வரவேற்க தயாராக இருங்கள்.
என்றோ ஒரு நாள், யாரேனும் வரலாம்..! சரளமான வரிகள்! அருமையான கவிதை! மிக ரசித்தேன்!
இப்போதேல்லாம்
கண்ணில் படுவதைக் கூட
நிராகரித்துச் செல்லும்
மனிதர்களே அதிகம்.//
ஆஹா! வரிகள்!
காத்திருப்பின் உன்னதம் நிச்சயம் மாயம் நிகழ்த்தும் ரிஷபன்.
நகரத்தின் பரபரப்பில் எழுதமுடிந்த அளவு படிக்கமுடியாது போய்விடுகிறது. உங்களை மிஸ் பண்ணுகிறேன் அடிக்கடி படிக்க முடியாமல்.
'முட்களும் புதர்களுமாய் வழி நெடுக
போகும் வழி அடைத்து...'
இந்த முட்களும் புதர்களும்தான் நம்மை சூழ்நிலைக்கைதிகளாக்குவது,
ஆனாலும் அதையும் தாண்டி நாங்கள் வருவோம் உங்கள் அன்பில் தோய.
மென்மையானதொரு கவிதை ரிஷபன் ஜி. வாழ்த்துகள்!
அருமையான கவிதை.
புற்றெழுப்பிக் காத்திருக்கிறது
என் அன்பெனும்
ஜீவிதம் !
அன்பென்னும் ஜீவிதம் உயிர்த்தெழும்..
''...என்றோ ஒரு நாள்
யாரேனும் வரக் கூடுமென
தனக்குள் முனகலுடன்
புற்றெழுப்பிக் காத்திருக்கிறது
என் அன்பெனும்
ஜீவிதம் !...''
ஆம் பொறுமையின் சிகரமன்றோ! பலன் கிட்டும். வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
Fine Rishaban.
அன்பின் எதிர்பார்ப்போடு கவிதை !
Post a Comment