June 18, 2012

நிஜம்

மிக அழகான கனவு.
கண் விழித்து விடக் கூடாதென்று
கனவிலும் நினைத்துக்
கொண்டிருந்தேன்.
ஐந்து வயதுக்குட்பட்ட
குழந்தைகள் 
என்னைச் சூழ்ந்து
கொண்டிருந்தார்கள்.
அவர்களின் ஸ்பரிசம்
என்னை ஒரு விதமாய் 
மிரட்டியது..
என்னிடம் அவர்கள்
எதையுமே 
எதிர்பார்க்கவில்லை..
என்னை விட்டு 
போய் விடுவார்களோ
என்று
பயத்தில் கண்ணை இறுக்க மூடினேன்..
கனவு கலைந்து 
விழித்துத் தொலைத்தேன்..

19 comments:

ராமலக்ஷ்மி said...

/கண் விழித்து விடக் கூடாதென்றுகனவிலும் நினைத்துக்கொண்டிருந்தேன்./

நல்ல கனவுகளில் இது எல்லோருக்கும் நடக்கும்!

கவிதை அருமை!

நிலாமகள் said...

விழித்துத் 'தொலைத்தேன்'..

mmmmmm.....!

இராஜராஜேஸ்வரி said...

விழித்துத் 'தொலைத்த நிஜம் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விழித்துத் தொலைத்தேன்.//

//கண் விழித்து விடக் கூடாதென்றுகனவிலும் நினைத்துக்கொண்டிருந்தேன்.//

நிஜம் அழகான கவிதை நிஜமாலுமே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் முன்பு எப்போதோ எதிலோ படித்ததோர் ஜோக் இதோ:

======

விழித்துக்கொண்டிருப்பது போலக் கனவு கண்டேன்......

உடனே விழித்துப்பார்த்தேன்.......

ஆனால் நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

=====

அந்த ஜோக் ஞாபகம் வந்தது, இதைப் படித்ததும்.

அன்புடன்
vgk

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதை போலவே படமும் மிக அருமை.

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் நிச்சயம் விரும்பும் அருமையான கனவு இது
யாருக்குத்தான் விழித்து தொலைக்க மனம் வரும்
கவிதையின் கருவும் சொல்லிச் சென்ற விதமும் அருமை
தொட்ர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

அருமை. படமும் கவர்ந்தது!

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!! அசத்தலான கவிதை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

SUPER....RISHABAN SIR!

vasan said...

/ஐந்து வயதுக்குட்பட்டகுழந்தைகள் என்னைச் சூழ்ந்துகொண்டிருந்தார்கள்./
அப்புற‌ம் ப‌ள்ளிக்குப் போய் த‌ன்(மை)னை இழந்து விடுகிறார்க‌ளோ ரிஷப‌ன் ஜி?

கே. பி. ஜனா... said...

கனவு கலைந்து விழித்துப் பார்த்ததும் கனவில் தானே?

வசந்தமுல்லை said...

அருமையான கவிதை!!!!!!!!!!!!!!!!!!!!!

கீதமஞ்சரி said...

தூக்கத்தில் எழுதப்பட்ட கனவுக்கவிதை நிஜத்தின் எழுத்திலும் ரசிக்கிறது. அருமை ரிஷபன் சார்.

சமுத்ரா said...

கவிதை அருமை!

மனோ சாமிநாதன் said...

குழந்தைகள் உலகம் ஒரு இனிமையான, கனவுலகம். அதிலிருந்து எழுந்திருக்க எப்படி மனம் வரும்? அருமையான கவிதை!

மாதேவி said...

அருமை.

ஹ ர ணி said...

ரிஷபன்..

நான் இதுபோல நிறைய குழந்தைகளுடன் கனவுலகில் எத்தனை அனுபவித்திருக்கிறேன். அவைக் காணக் கிடைக்காதவை.. அனுபவிக்கக் கிடைக்காதவை.. அருமை..இன்னும் இதுபோன்ற பகிர்வுகளைக் கனவு காணுங்கள்.. உங்கள் கனவு கலையாதிருக்க நான் உத்தரவிட்டிருக்கிறேன்...