June 29, 2012

முன் ஜென்ம நினைவு



ஒற்றை ஆளாய்


என் பயணம்..

காலடித் தடங்களில்

புலனாகாது என் எண்ணங்கள்..

நீரில் நனைந்து

உலரும் பாதங்கள்..

என் விம்மல்கள்

நீர்ப்பரப்பில் உண்டாக்கும்

சுழல்கள்..

முன் ஜென்ம நினைவுகளில்

அவ்வப்போது

உன்னையும் இணைத்து வரும்

புன் சிரிப்பில்

பூத்து விடுகின்றன

அதோ..

கண்ணுக்கெட்டிய தூரத்தில்

சில மஞ்சள் கொன்றைகளும்..

பவழ மல்லிகளும்.

12 comments:

நிலாமகள் said...

முன் ஜென்ம நினைவுகளில்

அவ்வப்போது

உன்னையும் இணைத்து வரும்//

அப்ப‌ அருவுருவாய் த‌னித்தில்லை... எனும்போதே பூக்கும் ம‌ஞ்ச‌ள் கொன்றைக‌ளும் ப‌வ‌ழ‌ம‌ல்லிக‌ளும் அதீத‌மாய் ம‌ண‌க்கின்ற‌ன‌.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சில மஞ்சள் கொன்றைகளும்..
பவழ மல்லிகளும் ......

புன்சிரிப்புடன் பூத்துக்குலுங்குகின்றன இந்தக் கவிதையிலும்.......

பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

HEARTY CONGRATULATIONS, TO YOU, SIR.

THIS IS YOUR VERY FIRST RELEASE, AFTER ACHIEVING THE EXPECTED & RESPECTED PROMOTION & THE RESPONSIBLE POST OF MANAGER/FINANCE OF A VERY BIG ORGANISATION w.e.f 25th June, 2012.

ALL THE BEST & I WANT TO SEE YOU IN STILL MORE GREATER POSTS IN THE IMMEDIATE FUTURE.

WITH LOVE & AFFECTION ....

vgk [வீ ..... ஜீ]

vasan said...

முன் ஜென்ம‌ நினைவாயினும்..,
பெண் இண‌ந்த‌தும், வ‌ண்ணமும்
ம‌ல‌ர்க‌ளும், மின்ன‌ல‌டித்துவிடுகிற‌து.

//என் விம்மல்கள்
நீர்ப்பரப்பில் உண்டாக்கும்
சுழல்கள்.//
அழ‌கான க‌ன்ன‌க்குமிழ் க‌ற்ப‌னை.

Admin said...

முன் ஜென்ம நினைவுகள் நயமாய் இருந்தன.

G.M Balasubramaniam said...

அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி கவிதைகள் புரிந்து கொள்ளப்படும்.

சாந்தி மாரியப்பன் said...

எங்களையும் புன்னகைக்க வைத்த கவிதை. அசத்தல்.

ஸ்ரீராம். said...

தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத ஒற்றை மனிதனின் சந்தோஷம் எதில் இருக்கும்?!

இராஜராஜேஸ்வரி said...

புன் சிரிப்பில்
பூத்து விடுகின்றன

அதோ..கண்ணுக்கெட்டிய தூரத்தில்

சில மஞ்சள் கொன்றைகளும்..

பவழ மல்லிகளும். அழகான வரிகள் வாழ்விலும் ஜொலிக்கட்டும்.. வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

அழகான கவிதை....

பாராட்டுகள்....

பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

Super!

கவி அழகன் said...

Rasithen