ஏர்போர்ட் வரை போக வேண்டி இருந்தது. அட.. அந்த ஏரியால குடி இருக்கிற நண்பரைப் பார்க்கத்தான்.
பஸ்ஸுல ஏறி கொஞ்ச தூரம் போயாச்சு. என் பக்கத்துல இருந்தவர் ஏதோ ஒரு ஸ்டாப் பேரைச் சொல்லி டிக்கட் கேட்டார். கண்டக்டர் முரட்டு உருவம்.. முகத்தில் பாதி மீசை.
‘இந்த வண்டி அங்கே போகாது’ என்றார்.
பயணி உடனே “கூட்டு ரோட்டுல இறங்கிக்கறேன்.. அதுக்கு டிக்கட் கொடுங்க’என்றார்.
அங்கே இறங்கி ஒரு கிமீ நடக்க வேண்டும் !
நடத்துனர் டிக்கட் தராமல்.. நோட்டையும் திருப்பித் தராமல் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரம்.
“கூட்டு ரோட்டுக்கு டிக்கட் கொடுங்க” என்றார் பயணி பொறுமை இழந்து.
நடத்துனர் நிதானமாய் “இறங்கி பின்னால ரெண்டு பஸ்ஸு வருது.. அதுல ரெண்டாவதா வர பஸ்ஸுல போய் ஏறிக்குங்க.. அதுதான் நீங்க போக வேண்டியது”
ரூபாயையையும் திருப்பிக் கொடுத்தார் !
“பாவம் எதுக்கு நடக்கணும்” என்றார் அவர் இறங்கிப் போனதும்.
கையைப் பற்றி குலுக்கினேன்!
அதே பஸ்ஸில் ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபோது..
ஒரு அம்மா.. அவங்களோட (முப்பதுக்குள் இருக்கும்) மகள்.. மகள் கையில் குழந்தை.. அவர்கள் தலையில் பாதி பின்னிய ஒயர் கூடை.. அதற்கான பொருட்கள்..
அவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.
கோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..
மனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..

21 comments:
என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.
கோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..
மனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..
மலர்ச்சி மலர்ந்த பயணப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
மனிதர்களையும் மனிதத்தையும் சிறிய பதிவிலேயே பகிர்ந்தது அழகு.
இந்த மாதிரி கண்டக்டர்களை நாம் கதைகளில் தான் பார்க்க முடியும்!
உண்மையாக பயணப்பட்டிருப்பது
மகிழ்ச்சியளிக்கிறது
பெரும்பாலோர் உடலால் மட்டும்தானே
பயணத்தில் இருக்கிறோம்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
//அவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.
கோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..
மனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..//
அதே உற்சாகம் எனக்கும் இப்போது ஏற்பட்டது, தங்களின் இந்தப் பதிவினைப் படித்ததும்.
ஆங்காங்கே எவ்வளவோ தங்கமான மனிதர்கள் [தங்களைப்போலவே] இருக்கத்தான் இருக்கிறார்கள்.
நாம் நம் அவசரத்தில் அவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ளாமலும், நட்பு பாராட்டாமலும் உதாசீனப்படுத்தி விடுகிறோம்.
அழகான மனதை மலர வைக்கும் படைப்பு சார், இது. பாராட்டுக்கள்.
அன்புடன் தங்கள்
[வீ....ஜீ] vgk
பயணத்தில் சந்திக்கும் மனிதர்களைப் பார்த்தே பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கூடை பின்னி விற்று வாழ்க்கை நடத்தும் அவர்கள் முகத்தில் சந்தோஷம் நமக்கு ஒரு பெரிய பாடத்தினையல்லவா சொல்லித் தருகிறது....
சிறப்பான பகிர்வுக்கு நன்றி.
Mikavum arththmulla padhivu!
பெங்களூரில் அநேக பஸ் கண்டக்டர்கள் குறைந்த தூரப் பயணத்துக்கு டிக்கட் தருவதில்லை. டிக்கெட்டுக்கான முழுத் தொகையை எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.கண்டக்டருக்கும் லாபம். பயணிக்கும் லாபம். இது எப்படி இருக்கு.?
ரிஷபன்..
எப்போதுமே பயணம் அற்புதமான விஷயம். அனுபவிக்கவேண்டும். எல்லோரும் எல்லா சமயங்களிலும் பயணித்துக்கொண்டேயிருக்கிறோம். உடலால். மனதால். உணர்வுகளால்.
மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்பவாவது தான் பார்க்கிறோம் நாம். நீங்கள் அடிக்கடி பார்க்கிறவர்.
மனதை தொட்டது.சில நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
மனிதர்களை தரிசிப்பதில் இருக்கிற மகிழ்ச்சி தனிதான்.
நடக்கும்
யதார்த்தம்
நெஞ்சை தொட்டுவிட்டது சார்
எப்போதோ படித்தது நினவில் வருகிறது....’நல்ல மனிதர்களால்தான் இந்த உலகம் வாழ்கிறது....ஆனால், அந்த நல்ல மனிதர்களை இந்த உலகம் வாழ விடுவதில்லை’.....
Nalla manam padaiththavargal engum irukkiraargal
மனதுக்கு இதமாக இருக்கிறது பகிர்வு.
அதிசய கண்டக்டர்.
இப்படி பட்டவர்களும் எங்கோ ஒரு மூலையில் இருக்கவே செய்கிறார்கள்
பயணம் இனிது என்றால் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களைக் கவனிப்பது இன்னும் இனிது!
படத்தைப் பார்த்தால் எங்கூருன்னு தோணுதே!
பயணத்தின் போது படித்தவர்களில் பாதி பேர் நெருப்புக் கோழி மண்ணில் தலையை புதைத்துக் கொள்வது போல, படிப்பதில் மூழ்கி விடுகிறார்கள். பயணத்தில் வரும் காட்சிகள், மனிதர்கள், எதிர்பாராத நிகழ்ச்சிகள் போன்றவற்றை ரசிப்பதில்லை. நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் ரசித்து அருமையான பதிவையும் தந்து விட்டீர்கள். நானும் பயணங்களின் போது ஒரு ரசிகன்தான்.
அன்புடையீர்,
வணக்கம்.
என்னுடைய கீழ்க்கண்ட பதிவுக்கு
தயவுசெய்து வருகை தாருங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html
தங்களுக்கான விருது ஒன்று காத்துள்ள்து.
அன்புடன்
vgk
'தெய்வம் மனுஷ்ய ரூபேனா' எல்லா இடத்திலும்! சில தருணங்களில் நம் பார்வையில் படுமளவு.
கூடை பின்னுபவர் தலைமுறை தலைமுறையாக சுமையற்று மகிழ்வுற்றிருக்கக் கற்பிக்கிறார். வாழையடி வாழையாக (ஆர்.ஆர்.ஆர். சார் பதிவுக்கு போய் வந்தது தெரிந்ததா) அவர்களின் சந்ததியினரும் பழகிவிடுகின்றனர்!
Post a Comment