October 06, 2012

வாழ்வெனும் அற்புதம்



படுத்தால் தூக்கம் வருகிறது.. அடுத்த நிமிடமே.

பகலில் வருகிற கோப தாபங்கள் கூட மறந்து நன்றி சொல்லி தூங்கிப் போகிற  மனதைக்  கொடுத்த இறைவனுக்கு அவன் கொடுத்த மனதாலேயே நன்றியும்.

இன்னமும் கடக்க வேண்டிய தூரம் பாக்கி நிற்கிறது..

துணைக்கு எங்கெங்கோ இருக்கிற நட்பின் வாழ்த்துகளும்..

வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில்.  



24 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனதைத் தொடுகின்றன வார்த்தைகள்.

படமோ மனதைப் பிசைகின்றன.

Miles to go before I sleep நினைவில் அசைகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

தினமும் இறந்து தானே பிறக்கிறோம்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன ‘miles to go before I sleep'ஞாபகம் வருகிறது தங்கள் கவிதையில்!

settaikkaran said...

படுத்தவுடன் தூக்கம் என்பது சொர்க்கத்தின் திறவுகோல்!

Yaathoramani.blogspot.com said...

அற்புதம் குறித்து அறிந்தும்
அறியச் செய்தும் போகும்
தங்கள் கவிதை அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

ஸ்ரீராம். said...

போதுமென்ற மனமே......!

நிலாமகள் said...

வாஸ்த‌வ‌மான‌ பேச்சு!

ராமலக்ஷ்மி said...

/எங்கெங்கோ இருக்கிற நட்பின் வாழ்த்துகளும்..

வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது../

உண்மைதான். உலகம் அழகானதுதான்..

தி.தமிழ் இளங்கோ said...

// வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில். //

அனுபவமான வரிகள். நம் போக்கில் இழுக்கும்போதுதான் எல்லாமே மாறுபடுகிறது.

cheena (சீனா) said...

அன்பின் ரிஷபன் - எவ்வளவு பிரசனை இருப்பினும் தூக்கம் வருவது இறைவன் கொடுத்த வரம். வாழ்க்கை சுவாரசியம் தான் - அதன் போக்கில் - அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

G.M Balasubramaniam said...


வாழ வேண் வேண்டிய விதத்தை அதன் போக்கில் அனுபவிப்பது எல்லோருக்கும் கை கூடுவதில்லை. YOU HAVE BUT ONE LIFE TO LIVE. AND MILES TO GO BEFORE YOU SLEEP. இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தூங்கினாய், கனாக் கண்டாய், வாழ்வு இன்பமயம். விழித்தெழுந்தாய், வாழ்வு கடமைக் கடல் என உணர்ந்தாய்.
( எப்போதோ படித்தது.)

KParthasarathi said...

ரொம்ப பிடித்தது

மாதேவி said...

அருமையான வரிகள்.
படம் கவலை கொள்ள வைக்கின்றது.

செய்தாலி said...

மனதை வருடும் சிறந்த வார்த்தைகள்
வாழ்வின் யதார்த்தம்

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வெனும் அற்புதம் !!!

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட வார்த்தைகள்.... படம் ஏதோ செய்கிறது மனதை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனதைப்பிசையும் படம்.

கவலையை மறக்கச்செய்யும் தூக்கம் இறைவன் கொடுத்த வரம் தான்.

//வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில். //

வாழ்வெனும் அற்புதம் !!!

;)))))

vgk

RAMA RAVI (RAMVI) said...

//வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில்.//

ஆம்..அருமை..

பால கணேஷ் said...

வாழ்க்கை சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது-அதன் போக்கில். அருமையான, உண்மை பொதிந்த வரிகள்.

ADHI VENKAT said...

அருமையான வரிகள். படம் மனதை பிசைகிறது.

சாந்தி மாரியப்பன் said...

//வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில். //

உண்மைதான்.

ஷைலஜா said...

ரிஷபன் டச் ஒவ்வொரு வரியிலும்!
ரசித்தேன் மிகவே!!

கதம்ப உணர்வுகள் said...

வாழ்க்கையும் அற்புதம்.... மனிதனும் அற்புதம்.... சிந்தனையும் அற்புதம் அதனால் விளைந்த கவிதை வரிகளும் அற்புதம்....தலைப்பு அட்டகாசம்...

ஏழையோ பணக்காரனோ பகலெல்லாம் உழைத்து வீடு திரும்பும்போது அன்பும் ஆதரவுமாக மனைவி கையால் கிடைக்கும் ஒரு டம்ளர் நீர் கூட தேவாமிர்தம் தான்….

களைத்து சோர்வாக வீடு திரும்பும்போது மனைவியின் அன்பும் கரிசனையும் அன்னமாக உள் இறங்கியப்பின்னர் தூக்கம் பற்றி சொல்லவா வேண்டும்??

நிம்மதியான உறக்கம் கிடைக்க நேர்மையாக உழைத்து நல்லமுறையில் வாழ்பவருக்கு தான் கிடைக்கும்..

பிளாட்பாரத்தில் உறங்குவோர் கூட அத்தனை இரைச்சலில் ஒளிக்கற்றையில் நிம்மதியாக உறங்குகின்றனர்..

மனதில் எந்த பயமும் இல்லை சம்பாதித்த பணத்தை பத்திரமாய் காக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லை. கறுப்புப்பணத்தை மறைக்கவேண்டிய அவஸ்தை இல்லை… புழுதியும் தெரிவதில்லை…. புழுக்கமும் அறிவதில்லை…. படுத்த அடுத்தநொடி உறக்கம் தழுவிய இந்தக்குழந்தையின் முகத்தில் தான் எத்தனை நிம்மதி…. பொருத்தமான படம் ரிஷபா…

நிம்மதி மனதில் இருந்தால் சந்தோஷம் தானாகவே மலரும். சந்தோஷம் மலர்ந்துவிட்டால் உறக்கத்தைத்தேடி நாம் போகவேண்டாம். உறக்கம் இமைத்தழுவி தாலாட்டி உறங்கவைக்கும்….

இறைவன் தந்த வரம் இப்படி ஒரு உறக்கம் கிடைக்க…. அருமையான வரிகள் ரசித்தேன் ரிஷபா…..எப்போதும் போல் கடைசிவரியின் சுகந்தம்…..

வாழ்க்கை சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது அதன் போக்கில்… மனதில் சந்தோஷமும் நிம்மதியும் இருந்தால் இருக்கும் இடமும் சொர்க்கமே…. சுட்டெரிக்கும் வெயிலும் குலுமணாலியே….

உண்மையே இன்னும் கடக்கவேண்டிய தூரம் பாக்கி இருக்கிறது… நாளை என்பது நம் கையில் இல்லை.. நேற்று என்பது முடிந்த ஒன்று… இப்போதைய இந்த நிமிடம் மட்டுமே சாஸ்வதம்… இந்த நிமிடம் நாம் சௌக்கியமாக இருக்கிறோம் என்பதே நமக்கு சந்தோஷம்..

இந்த சந்தோஷமே நிலைத்தால் பாக்கி தூரமும் சிரமமில்லை…. அப்பப்பா எத்தனை யோசனைகளோ இந்தப்பிள்ளையின் மனதில்….

ரிஷபா…. ஒவ்வொரு வரியும் சிந்தனையின் தெறிப்பாகத்தான் இருக்கிறது…. அன்புவாழ்த்துகள் ரிஷபா….