October 15, 2012

மழை








வருமென்றுதான் நினைத்தேன்..

வானம் இருட்டிக் காட்டியது..

இடி மின்னலும் கூட பதில் சொன்னது..

தொலை பேசி அழைப்புகளில் சொன்னார்கள்..

வானிலை அறிக்கையுங்கூட..

மண்வாசனை என்னைத் தொட்டுப் போனது.

தன்னிச்சையாய் உடம்பு சிலிர்த்து அடங்கியது..

உபரியாய் ஒரு முறை பவர் கட் ஆனது.

மொட்டைமாடியில் நின்று

எத்தனை நேரம் காத்திருந்தும்..

வரவேயில்லை..

என்னை நனைக்குமென எதிர்பார்த்த

அந்த மழை !





18 comments:

Unknown said...

மின் பற்றாக்குறை போல் மழை பற்றாக்குறை! (மரங்கள விட்டாத்தான மழை ரிஷபன் ஜி..)

ராமலக்ஷ்மி said...

ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது:(!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் கவிதை.

ஸ்ரீராம். said...

மழையில் நனைய முடியாததால் கவிதை. நாங்கள் நனைந்து விட்டோம்.

இந்திரா said...

மழையைவிட சிலநேரம்
மண்வாசனையும் அழகு தான்..

vasan said...

ம‌ழையாய் வ‌ர‌ குவிந்த‌ என் குழ‌ந்தை மேக‌த்தை
2ஜி கொள்ளையின் கோர‌ப்ப‌ற் கோபுர‌ங்க‌ள்
தீய‌லை வீசி சிட்டுக்குருவி, தேனீக்க‌ளை
விர‌ட்டிய‌து போல்
மிர‌ட்டி விர‌ட்டிவிட்ட‌ன‌ வேறு திசைக்கு.

மீண்டு(ம்) நான் பூமிக்கு வ‌ர‌
ம‌ர‌த்தோர‌ண‌ம் ம‌ட்டும் ந‌ட‌வுங்க‌ள்
க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ காட்டை அழித்தும்,
நில‌க்க‌ரி தோண்டி,க‌ருப்புக் கொடியும் காட்டாதீர்க‌ள்.

ஏழைக‌ள் இங்கே ஓட்டு எண்ணிக்கைக்கு மாத்திர‌மில்ல‌து
ஒட்டு மொத்த‌ இந்தியானாக‌ அர‌சு அங்கீக‌ரிக்கும் வ‌ரை
இங்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை மாம‌ழையாகிய‌ எம‌க்கு!!

செரியாத‌ வ‌யிற்றோனுக்கு பாலும் தேனும்
சொரிவ‌தை தடுத்து, ஓட்டிய‌ வ‌யிறோடலையும்
வ‌றிய‌வ‌ருக்கு ஊட்டும் உண‌வுக்கு நீராய் வ‌ர‌வே ஆசை.

காடு, க‌ழ‌னி, வயல், வாய்க்கால்,
க‌ண்மாய் அழித்து விவ‌சாய‌ம் கொன்று,
பூமித் தாயை வெட்டி, துளைத்து, கீறி, கிழித்து
கிர‌ணைட் விற்கும் ப‌ண‌வெறிய‌ர்க‌ளுக்கு
நான் ஒரு "நச்சு". என்னைத் துர‌த்த‌
எண்ணில‌ட‌ங‌க‌ வெடிம‌ருந்து கிட‌ங்குக‌ள் ஆங்காங்கே.
கால‌னுக்கு காத்திருக்கும் இந்த‌ தேச‌த்திற்கு
எங்க‌ண‌ம் நான் கால நேர‌ம் பார்த்து வ‌ருவ‌து?

என்னை வ‌ண‌ங்கும் ஏழை விவ‌சாயின்
க‌ண்ணீர் துடைக்கும் க‌ர‌ங்க‌ளை த‌ரிசிக்க‌
ச‌டுதில் வ‌ருவேன் இடி மின்ன‌லோடு.

கே. பி. ஜனா... said...

எடுக்கும் குடை கைவசம் இருக்கட்டும்!

தி.தமிழ் இளங்கோ said...

மழைக்காக மாடியில் தவமிருந்த
கவிஞருக்கு வரவில்லை மழை!
வந்ததோ கவிதை மழை!
பெய்யெனப் பெய்யும்
மழைக் காலம் இன்று இல்லை!

செய்தாலி said...

நம்பிக்கையோடு
இருங்க சார்
கண்டிப்பா உங்களை நனைக்கும்
மழை

வெங்கட் நாகராஜ் said...

மழைக்கான காத்திருப்பு.....

மழை வந்திருந்தால் நிச்சயம் ஆனந்தம் தான்....

நல்ல கவிதை.

நிலாமகள் said...

உபரியாய் ஒரு முறை பவர் கட் ஆனது.//

இத‌ற்க‌ப்புற‌மும்...

தானே வ‌ந்து போய்க்கொண்டிருந்த‌ அது 'தானே'வுக்கு அப்புற‌ம் ஏங்க‌ வைக்கிற‌தே...

த‌ரிச‌ன‌த்துக்குத் த‌வ‌மிருக்கும் ந‌ம்மை சில‌ ச‌ம‌ய‌ம் உற‌க்க‌த்தின் பிடியிலிருக்கும் போது எழுப்பாம‌ல் வ‌ந்து பார்த்துச் செல்கிற‌து.தாயின் க‌ரிச‌ன‌த்துட‌ன்...


ADHI VENKAT said...

அது தான் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறதே.....:)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை...

இங்கே (அதிசயமாக) மழை வந்து விட்டது...!

இராஜராஜேஸ்வரி said...

என்னை நனைக்குமென எதிர்பார்த்த

அந்த மழை !

இப்போது கொட்டிக்கொண்டிருக்கிறது !

cheena (சீனா) said...

இயற்கையைப் போற்றாத வரை - காக்காத வரை - மழை பொழியாது - உபரியாக ஒரு மின் தடை - அருமை கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

RAMA RAVI (RAMVI) said...

நீங்கள் நனையாவிட்டாலும் எங்களை அருமையான கவிதை மழையில் நனைய வைத்து விட்டீர்கள்

கதம்ப உணர்வுகள் said...

தென்றலாய் தீண்டும் மெல்லிய வரிகளில் சோகம் இழையோடுவதை கவிதை வரிகள் படிக்கும்போதே உணரமுடிகிறது….

சில சமயம் சிந்தனை வரிகள் கவிதையாக முத்துப்போல் பிரகாசிக்கும்.

சில சமயம் எண்ணங்களின் ஓட்டம் கவிதையில் பிரவாகமாய் ஓடிக்கொண்டிருக்கும்..

சில சமயமோ மனதின் உணர்வுகள் கவிதையில் என்னென்னவோ சொல்லிப்போகும்…

சில சமயம் கற்பனைக்கோலங்கள் அழகாய் கவிதையில் உலாவரும்..

மழையே இல்லாத சமயத்தில் மழையை எதிர்ப்பார்க்கும் விவசாயிக்கு தன் வயல் மழையால் குளிரப்பட்டு அன்னம் கிடைக்க வழி பிறக்கவேண்டி பிரார்த்திப்பான்..

ப்ளாட்பாரக்கடை வைத்து அன்றாடங்காய்ச்சியாக பிழைப்பவனோ மழை வந்துவிடக்கூடாதே என்று வேண்டுவான் தினம் தினம்..தன் பிழைப்பு கெட்டுவிடும் என்ற பயத்தில்…

ஆனால் கவிஞனோ மழையை நின்று ரசிப்பான்.. மழைத்துளியில் தன் கவிதைக்கான கருவைத்தேடுவான்…. கருவுக்கான பொருளை உட்புகுத்துவான்… மழையின் சிலாகிப்பை உணர்வான்… சிலுசிலுக்கும் சாரலை முழுமையாய் அனுபவிப்பான்… மழை பெய்யும் வெளியே ”சோ” வென்று…

கவிஞனின் மனதிலும் மழைப்பன்னீராய் தூவி வளப்படுத்தும் கவிதை வரிகளை கோர்க்க முயற்சிக்கும்…

அழகு காட்டி கையில் அகப்படாமல் இங்கும் அங்கும் ஆட்டம் காண்பிக்கும்… குழந்தையாய் தானும் மழையில் நனைந்து மழையின் அத்தனை சேஷ்டைகளையும் ரசித்து எழுதுவான்..

கற்பனையை உதவிக்கு அழைக்கும் அவசியமே இன்றி மழை கவிஞனின் முன் நின்று நடனமாடும் சங்கீதம் இசைக்கும் அருகே வா என்று சமிக்ஞை செய்யும்.. மழையில் மெல்ல நனைய கால் எடுத்து வைக்கும்போது ஹோ வென்ற பேரிரைச்சலோடு அணைத்து நனைத்துவிடும் கவிஞனை….

இப்போ ரிஷபன் எழுதி இருக்கும் கவிதை வரிகளை படிக்கும்போது இப்படி எல்லாம் தான் எனக்கு மனதில் தோன்றியது….

மழையை ரசிக்காதவர் உண்டோ? மழையை நேசிக்காதவர் உண்டோ? மழையில் நனையாதவர் உண்டோ? தான் ரசிக்கும் மழை தன்னை உரிமையாய் கைப்பிடித்து இழுத்து ஆர்ப்பரிக்கும் சப்தத்துடன் நனைக்கவேண்டும் என்று பிடிவாதமாய் கைக்கட்டி நிற்கும் கவிஞனின் சோகமும் கோபமும் பிடிவாதமும் கவிதை வரிகள் மிக அழகாய் எளிமையாய் சொல்லி செல்கிறது….

மழை ஒரு சிலருக்கு அவஸ்தை..
ஒரு சிலருக்கோ கொண்டாட்டம்…
குழந்தைக்கோ குதூகலம்…
காதலர்களுக்கோ வரம்….

இப்படி எல்லாம் வேண்டி அழைக்கும் மழை….

ஆசையாய் காத்திருக்கவைக்கும் மழை…

காத்திருப்பு ஒரு அவஸ்தையாய்..

இத்தனை எதிர்ப்பார்ப்புடன் ஆர்ப்பாட்டமுடன்
சத்தமில்லாமல் பவர் கட்டாகி, இடிமின்னல் செய்தி அனுப்பி,
வானமும் இருட்டி…
ஈர மண்வாசனை மனதை சிலிர்க்கவைத்து
மொட்டை மாடி வரை அழைத்து வந்த மழை
நனைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன்
கவிஞனும் தன் கவிதையுடன்…

ஆஹா என்ன ஒரு ரசனை ரிஷபா….ரசிக்கவைத்த கவிதை வரிகள் பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா…

வை.கோபாலகிருஷ்ணன் said...

”பெய்யெனப்பெய்யும் மழை”ன்னு இன்று அடித்துச் சொல்லும் தகுதி யாருக்கும் இல்லையோ!

நல்ல கவிதை. பாராட்டுக்கள். vgk