மனவிகாரங் களைந்துயர் நிலையடைய
மதிவிதியாவுமே தன் வசமாக
தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்
திருவருள் குருவருள் இணைந்து பெறவே
மீனெனக் கண்கள் சுழன்று வலை வீச
மீளா என் மனம் நன்னிலை அடைய
தானென வந்து தரணியில் இன்று
துணையாய் நின்ற தூய நற்கொடியே
பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்
வீசும் கதிர்களில் பெருந்தீயாகும்
விந்தையில் மனமே ஞானமயமாகும்
கூசும் உணர்வுகள் விலகிப் போகும்
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
பேசுமென் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடிதானே
மதிவிதியாவுமே தன் வசமாக
தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்
திருவருள் குருவருள் இணைந்து பெறவே
மீனெனக் கண்கள் சுழன்று வலை வீச
மீளா என் மனம் நன்னிலை அடைய
தானென வந்து தரணியில் இன்று
துணையாய் நின்ற தூய நற்கொடியே
பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்
வீசும் கதிர்களில் பெருந்தீயாகும்
விந்தையில் மனமே ஞானமயமாகும்
கூசும் உணர்வுகள் விலகிப் போகும்
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
பேசுமென் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடிதானே
21 comments:
அருமை.
என்னே வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்...
நன்றி...
சபாஷ்!!!நயமான உள்ளம் தொடும் கவிதை
பேசா உணர்வுகள் பேசிய கவிதை அருமை.
பேசா உணர்வுகள் ஒரு கோடிதானே
"தூய அன்பிற்கு சமர்ப்பணமாய் !!"
பேசா உணர்வுகளில் சுடர் விட்டு ஒளிர்கிறது தூய அன்பு! மிக அருமை.
பேசுமென் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடிதானே//
நிச்சயமாக
மனம் தொட்ட அருமையான கவிதை
கருத்தும் வார்த்தை பிரயோகங்களும்
மனத்தைக் கொள்ளை கொண்டது
தொடர வாழ்த்துக்கள்
// பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்//
இது கவிதையில் கண்ட கருத்து முத்தே! ஆய்வில் கண்ட அருமை வித்தே!
ரொம்ப நல்லா இருக்கு!
பேசா உணர்வுகள் ஒரு கோடிதானே?
இல்லை.....
பேசா உணர்வுகள் ஒரு கோடி மட்டும் அல்ல
அவை கோடி கோடியாய் உள்ளன என்பதே உண்மை.
"தூய அன்பிற்கு சமர்ப்பணமாய் !!"
எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு வணக்கம்! வாரா வாரம் ஆனந்த விகடனில் இணைப்பு இதழாக வரும் என் விகடன் இப்போது தனியிதழாக வருவதில்லை. இணைய இதழாக மட்டுமே வருகிறது. இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களைப்பற்றியும் உங்களது வலைப் பதிவினைப் பற்றியும் உங்களது புகைப் படத்துடன் வந்துள்ளது. இப்போதுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி! இனிமேல் நீங்கள் உங்கள் வலைப் பதிவில் PROFILE இல் உங்கள் முகத்தைக் காட்டலாம். என் விகடனில் வந்த உங்களைப் பற்றிய வலையோசையும் அருமை.!
அசத்திட்டீங்க சார், வருங்கால சங்க காலப் புலவர் :-)
இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களைப்பற்றியும் உங்களது வலைப் பதிவினைப் பற்றியும் உங்களது புகைப் படத்துடன் வந்துள்ளது.
இப்போதுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி!
என் விகடனில் வந்த உங்களைப் பற்றிய வலையோசையும் அருமை.!
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
[மெயில் மூலம் எனக்கு முதல் தகவல் அளித்த திருச்சி தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.]
அன்புடன்
VGK
நயமிகு கவிதை நண்பனே
அயர்ந்தொன்றும் போகவில்லை நான்
இயல்புனக்கிது.
அயனென படைப்பதில் மேலும்
உயரங்கள் அடைய மகிழ்ந்து
இமயமலைமகள் வாழ்த்துவேனே!
ரிஷபன் பற்றிய என் விகடன் சுட்டி தர இயலுமா தமிழ் இளங்கோ அவர்களே?
அருமையான வரிகள்.
என் விகடனில் தங்களைப் பற்றி வந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.
அன்பு தூய்மையானது….
மனதை ஒருநிலைப்படுத்தும் தியானமானது….. இனம் பிரிக்க அறியாதது… தன்னில் இருக்கும் நல்லவைகளை முழுமையாக அர்ப்பணிக்கும் சக்தி கொண்டது….
எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாது தூய்மையான அன்பையே பகிரும் ஆற்றல் கொண்டது…. மனதில் உள்ள கசடுகளை நீக்கும் அபார சக்தி கொண்டது….
விதிமதி எதன்வழியும் செல்லாமல் அன்பே தெய்வம்…. அந்த அன்பை உள்ளடக்கி வைத்திருக்கும் ஆத்மாவே இறைவன் இருக்கும் இடமாக தக்கவைத்துக்கொள்வது….
ஒவ்வொரு நாளும் விடியும்பொழுதே சந்தோஷங்களை அள்ளித்தருவது…. தெய்வமாய் தீமையில் இருந்து காத்து கவசமாய் பாதுகாக்கவல்லது….
எத்தனையோ அற்புதங்கள் உலகில் இருந்தாலும் அன்பை விலைகூறவோ அன்பை விலைக்கு வாங்கவோ ஆசைபடாதது… பாசம் என்னும் அக்ஷய பாத்திரத்தில் அன்பெனும் அமுதத்தை தாய்மை உணர்வுடன் ஊட்டக்கூடியது…
பார்க்கும் பார்வையில் கனிவை தரவல்லது…. ஒதுங்கிச்செல்லாது வழி நடத்தும் ஆசான் போன்றது…. இத்தனை சக்தியும் அன்பே தருகிறது என்றால்…..
பார்வையில், பகிரும் வார்த்தையில், பகிரா உணர்வுகளில் என்றும் நிறைந்த அன்பையே தரும் என்று அழுத்தமாக சொல்லிச்சென்ற வரிகள் கொண்ட கவிதை மிக மிக அற்புதம் ரிஷபா…..
அன்பு மனதில் நிறைந்திருக்கும் மனிதனுக்கு கெடுதல் செய்யத் தெரியாது…. அன்பை வழியவிடும் கண்களுக்கு பொறாமையும் தெரியாது….
அன்பையே பகிரும் வார்த்தைகளில் நம்பிக்கையும் நல்மனதுமே புலப்படும் என்று உறுதியாகச்சொன்ன கவிதை வரிகள்பா….
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரிஷபா அன்பினைப்பகிரும் அற்புதமான கவிதை பகிர்வுக்கு….
அட ரிஷபா....
இந்த வாரம் என் விகடன் வலையோசையில் உங்க கதை வந்திருக்கேப்பா... வை. கோ அண்ணா போட்டிருந்ததைப்பார்த்துட்டு சென்று பார்த்தேன்பா...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா....
கருத்தைத் தொட்ட அருமையான பதிவு. விகடன் இதழில் வந்துள்ளமைக்கு வாழ்த்துகள். இணைப்பு குறி தரலாமே.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
அன்பு ரிஷபன்...
அருமை. பேசா உணர்வுகள் ஒரு கோடியுடன் நின்றுவிடுமா என்ன? அது கோடிக்கோடிகோடியாய்..வெகு நாளைக்குப் பின் உங்கள் பதிவிற்கு வந்தேன். நன்றிகள். எப்படியிருக்கிறீர்கள்? என்ன பணி நடக்கிறது?
Post a Comment