February 04, 2013

நிலாவை உடைத்த கல் - கவிதைத் தொகுப்பு




நிலாவை உடைத்த கல் - கவிதைத் தொகுப்பு



கடவுளின் நிழல் தரையில் படர
வருகிறாள் அம்மா !

சட்டென்று பக்கம் பிரித்ததும் கண்ணில் பட்ட முதல் கவிதை.

ஒற்றை வரியில் சொல்ல முடிகிற வித்தை வைகறைக்கு வாய்த்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியுடன் 'நிலாவை உடைத்த கல்'  தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன்.

ஏதோவொரு கவிதையினை
வாசிக்காத அவசரத்தில்
புரட்டும்போது கேட்கும்
காகிதத்தின் சரசரப்பினூடே
விசுப்பிக் கொண்டிருக்கிறது
அக்கவிதை !

நிஜமாகவே கவிதையின் விசும்பல் கேட்ட பிரமை.  (அது "விசும்பிக்" இல்லையோ .. )

காக்கையின் கூட்டில்
கிடக்கும் இலைகள்
யார் எழுதிய கடிதம் ?

இனி கூட்டில் பார்க்கும் இலைகள் கடிதமாய்த் தெரியும் நமக்கும்.

ஏதோவொரு
மௌனத்தின் குரலுக்கு நான் காது கொடுக்கிறேன்..
அது எழுதப்படுவதற்கு கரம் கொடுக்கிறேன்..
அவ்வளவுதான்!

என்கிறார் வைகறை..

நாம் அவரை  வாழ்த்த கை கொடுக்கலாம்..

www.nanthalaalaa.com

(தகிதா  பதிப்பகம். கோவை.  விலை ரூ 60. )



15 comments:

கோமதி அரசு said...

கடவுளின் நிழல் தரையில் படர
வருகிறாள் அம்மா !//

அருமை.

திரு. வைகறை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

விசும்பிக் - அழுவது...?
விசுப்பிக் - தென்றலோ...?

வைகறை அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றி...

ராமலக்ஷ்மி said...

பகிர்ந்த கவிதைகள் அருமை. வாசிக்கத் தூண்டுகிறது பகிர்வு. நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

//கடவுளின் நிழல் தரையில் படர
வருகிறாள் அம்மா !//

மிக அருமை.

சுவாரசியமான கவிதைப்புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

ஜீவி said...

//ஏதோவொரு கவிதையினை
வாசிக்காத அவசரத்தில்
புரட்டும்போது கேட்கும்
காகிதத்தின் சரசரப்பினூடே
விசுப்பிக் கொண்டிருக்கிறது
அக்கவிதை ! //

கவிதை வரிகள் மனத்தில் படிந்த தருணத்திலேயே அந்த சரசரப்பு ஒலியாய் உணர்வில் தைத்து விசும்பலும் நெஞ்சில் உரைத்தது, ரிஷபன் சார்!

கவிதையின் பின்புலத்தில் ஒளிந்திருந்த கவிஞரின் ஏக்கமும் தட்டுப்பட்டது தான் அவரின் வெற்றியாய் புலப்பட்டது. எல்லாப் படைப்பாளிக்கும் சொந்தமான நெகிழ்ச்சி இது!

அற்புதம், கவிஞர் வைகறை. வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

கடவுளின் நிழல் தரையில் படர
வருகிறாள் அம்மா !

முழுநிலாவாய் முகிழ்த்து
மகிழ்ச்சியளித்த வரிகள்
முத்தாய் மிளிகின்றன ..

மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்..

கவியாழி said...

கவிதை தொகுப்பு எல்லோருக்கும் சென்று பயனைடைய வேண்டியும்
வைகறை அவர்களின் முயற்சிக்கு பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறேன்

G.M Balasubramaniam said...


வைகறையின் கவிதைகளை அவர் பதிவில் வாசித்ததுண்டு. தேர்ந்தெடுத்த கவிதைகளுக்கு உங்களுக்கும் , கவிதைத் தொகுப்புக்கு வைகறைக்கும் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இப்பகிர்வில் சொன்ன கவிதைகள் அருமை... புத்தகத்தின் அருமையினைச் சொல்லிச் சென்ற கவிதைகள்....

படிக்க முயற்சிக்கிறேன்....

Unknown said...

வாழ்த்திய அத்தனை அன்புள்ளங்களுக்கும், பாசமிகு ரிஷபன் அய்யாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

கே. பி. ஜனா... said...

வைகறைத் தென்றலாக கவிதைகள்! 'வைகறை'க்கு வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

நிலவை உடைத்த கல் - அபாரமான வரி.
'.. இலைகள் யார் எழுதிய கடிதம் ?' - இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மி்கச்சிரந்த நூல் அறிமுகம்.
பாராட்டுக்கள்.


//இலைகள் யார் எழுதிய கடிதம்?//

ரஸிக்கும் படியாக உள்ளது.

//கடவுளின் நிழல் தரையில் படர
வருகிறாள் அம்மா !//

அழகோ அழகு.

ADHI VENKAT said...

கவிதைகள் அருமை. வைகறை அவர்களுக்கு வாழ்த்துகள். புத்தகத்தை அறிமுகப்படுத்திய தங்களுக்கு பாராட்டுகள்.

vasan said...

இரா.எட்வின்னும் அவ்து வ‌லையில், இந்த‌ வைக‌றையின் க‌விதை(தொகுப்பு)க‌ளைப் பற்றி மிக‌வும் சிலாகித்திருந்தார். எழுத்தாள‌ரின் ஒருமித்த‌ எண்ண‌ங்க‌ளும் ப‌ர‌ந்த‌ ம‌ன‌ங்க‌ளும் பார‌ட்டுத‌லுக்குரியது.