September 08, 2013

கொஞ்சம் கவிதைகள்

என்னைச் சிலுவையில் 
அறைந்தால்
உயிர்க்கத் தெரியாது..
விட்டு விடு !அவர்களாக அறைக்குள்
வருகிறார்கள்..
வெளியேறுகிறார்கள்..
வாசம் சுமந்த
சுவர்கள்
ததும்புகின்றன
விம்மல்களில்..
நுழைவதற்கு முன்
இருந்த
சுயம் தொலைத்த
அறை
இப்போது ஏங்குகிறது
வரவிற்காக!


உன் மழை பற்றி நீயும்
என் மழை பற்றி நானும்
கவிதைகள் எழுதி
கை மாற்றிக் கொண்டோம்..
சேர்ந்து
வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது !அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் !

17 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

மூன்றாவது சாரல்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

//உன் மழை பற்றி நீயும், என் மழை பற்றி நானும் கவிதைகள் எழுதி கை மாற்றிக் கொண்டோம்.. சேர்ந்து
வாசிக்கும் போது அது நமக்கான மழையாய் இருந்தது !//

கை மாற்றிக்கொண்டது தான் சூப்பர் !

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

Ramani S said...

அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் !/

/சிறப்பான கவிதை
குறிப்பாக இறுதி வரிகள்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

//அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் ! //
பிடித்தது!

கே. பி. ஜனா... said...

//அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் ! //
பிடித்தது!

கே. பி. ஜனா... said...

//அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் ! //
பிடித்தது!

G.M Balasubramaniam said...

“அவர்களாக அறைக்குள்.......வரவிற்காக”.இது ஏதோ அப்ஸ்ட்ராக்ட் எண்ண வெளிப்பாடாகத் தோன்றுகிறது எனக்கு.நீங்கள் எண்ணாத ஒன்றை நான் கற்பனை செய்யக் கூடாது என்று எண்ணுகிறேன்

ப. தியாகு said...


உன் மழை பற்றி நீயும்
என் மழை பற்றி நானும்
கவிதைகள் எழுதி
கை மாற்றிக் கொண்டோம்..
சேர்ந்து
வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது ! // கவிதை, நனைந்து லயிக்க வைக்கிறது ரிஷபன் ஜி! :)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

sury Siva said...

//வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது ! //


அந்த மழையில் நனைஞ்ச
மனசு இன்னும் காய வில்லை.

எதிலும்
பாய வில்லை.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

priyadontics Deepapriya said...

superb sir....
மிகச் சிறிய விஷயங்களையும் கூட மிகக் கவித்துமாய் பார்க்கும் வரம் உங்களுக்கே சாத்தியம்! ஒரு பறவையின் சிறிய அசைவும் கூட ஒரு கவிதையாகிற நேர்த்தி --- அபாரம்!

Manjubashini Sampathkumar said...

tha.ma.3

//அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் !//

மனிதனுக்கு ஆசான் பறவைகள்... உழைத்து சுறுசுறுப்பாய் திரிந்து தனக்கென கூடு அமைத்து.. சந்ததிகள் பெருக்கி.. அதற்கு உணவு கொடுத்து.. வளரந்ததும் சிறகு விரிந்ததும் இலக்கின்றி பறக்க ஆரம்பித்து தன் பெற்றோர் செய்ததை குஞ்சுகள் வளர்ந்து தான் செய்கின்றன பெற்றோரின் கடமைகளை... அற்புதம் ரிஷபா.. அலுவலகத்தில் கூடு கட்டி அது நாள் முச்சூடும் கூக்க்கூ என்று கூவிக்கொண்டு இங்கும் அங்கும் பறந்துக்கொண்டு.. சிறகு வளர்ந்ததும் பறந்து செல்வதும்..... கூட்டின் அவசியம் அதற்கில்லை... மனிதன் அப்படி இருக்கிறானா? தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் தன் பெற்றோரை காக்கும் பொறுப்பை மறந்துவிடுகிறான்.. சுயநலமாய் சிந்திக்க ஆரம்பித்து அப்படியே செயல்படுத்தவும் செய்கிறான்... குழந்தைகளும் அப்படியே பார்த்து வளர்வதால் வினை விதைத்து வினையே அறுப்பது போல் தான் செய்ததை தன் மக்கள் தனக்கு செய்கிறது என்பதை உணரும் முன்பே போய் சேர்கிறான்.. நம் மூதாதையர் இயற்கையை காக்க சொல்லிக்கொடுத்தனர்... மழையை காக்க மரம் நட்டுச்சென்றனர்... நாம் அதன் கனிகளை புசித்து அதன் நிழலிலே ஓய்வெடுத்து ... மரத்தினால் பிரச்சனை என்றாலோ அல்லது நம் பயனுக்காகவோ மரத்தையே வெட்ட தயங்குவதே இல்லை நாம... ஆழ்ந்த யோசிப்புள்ளாக்கிய வரிகள் ரிஷபா....

Manjubashini Sampathkumar said...

//என்னைச் சிலுவையில்
அறைந்தால்
உயிர்க்கத் தெரியாது..
விட்டு விடு !//

ஆமாம் ஏசு கூட உடலில் தான் வலி தாங்கினார்.. இப்போது இருக்கும் மக்களின் மனங்களில் ஏற்படும் சந்தேகமும் பொறாமையும் பொறுமையின்மையும் சிலுவையில் அறையத்தான் செய்கிறது...நம்பிக்கை மனதில் இருந்துவிட்டால் அன்பில் களங்கம் ஏற்படுவதில்லை.. புரிதல் இருந்துவிட்டாலோ வாழ்க்கை சௌந்தர்யமாகிவிடுகிறது.. புரிதல் இல்லாதபோது அன்பு விலகி விரிசல் விடுகிறது... வார்த்தைகளை சாட்டையாக்கி மனதில் அறைந்தால் பொறுத்துக்கொள்ள நாம் ஏசு இல்லையே..மனம் துடிக்கும்போது கண்கள் கண்ணீரை கொட்டத்தான் செய்கிறது... உயிர்க்க விரும்பாத மனம் சிலுவையில் அறையும்போது உயிரை விடவே விரும்புகிறது.... சிந்திக்க வைத்த வரிகள் ரிஷபா...

Manjubashini Sampathkumar said...

//அவர்களாக அறைக்குள்
வருகிறார்கள்..
வெளியேறுகிறார்கள்..
வாசம் சுமந்த
சுவர்கள்
ததும்புகின்றன
விம்மல்களில்..
நுழைவதற்கு முன்
இருந்த
சுயம் தொலைத்த
அறை
இப்போது ஏங்குகிறது
வரவிற்காக!//

அன்பும் கனிவும் நேசமும் சந்தோஷமும் நிரம்பிய இடத்தில் சுயம் உயிர்த்தே இருக்கிறது.... சிதைக்க வருவோரிடம் தன் சுயம் தொலைக்க வைப்போரிடம் சொல்லி அழ முடியாமல் மீண்டிட ஏங்குகிறது.. நம்பிக்கையோடு..... அன்பின் வரவிற்காக..... யோசிக்க வைத்த நச் வரிகள்பா ரிஷபா....

Manjubashini Sampathkumar said...

//உன் மழை பற்றி நீயும்
என் மழை பற்றி நானும்
கவிதைகள் எழுதி
கை மாற்றிக் கொண்டோம்..
சேர்ந்து
வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது !//

எனது உனது என்று இருந்தபோது இரண்டாக இருந்தது.. நமது என்றானபோது ஒன்றாகிவிடுகிறது.. அது மழையானாலும் சரி, மனமானாலும் சரி.... அற்புதம் ரிஷபா.. ரசித்து வாசித்தேன்.....