October 19, 2013

நேச முகம்

இள மனதின் ஆழத்தில் பதியனிட்ட நேச முகங்கள் நினைவுபாசனத்தின் நித்திய நீரூற்றலில் பச்சென்று மனசெங்கும் பசுமையாய் படர்ந்திருக்கும் எங்கேயோ எப்படியோ நிகழும் சந்திப்பில் ஆரதழுவிகொள்ளும் பிரியமான நினைவுகள்.. 'ம் ' அப்புறம் , என்பதாய் கைகொர்த்துகொள்ளும் புரிதலான பார்வைகள் .. சொட்ட சொட்ட நனைய வைக்கும் நேசத்தின் பொழிதலில் எப்போதும் குளிர்ந்துகிடக்கும் ஈரமான மனசு!

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

பசுமையாய் படர்ந்திருக்கும்
ஆழமாய் பதியமிட்ட நேசமுகம்
மனதில் சிம்மச்னமிட்டது ..

வை.கோபாலகிருஷ்ணன் said...

சொட்ட சொட்ட நனைய வைக்கும் நேசத்தின் பொழிதலான இந்தப் பதிவிலேயே குளிர்ந்து விட்டது என் ஈரமான மனசும்! ;)

அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கீதமஞ்சரி said...

நேசத்தின் புரிதலோடு நெகுநெகுவென்ற விளைச்சலோடு கவிக்களத்தின் வெள்ளாமை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பாராட்டுகள் ரிஷபன் சார்.

Yaathoramani.blogspot.com said...

மனதை குளிர்வித்துப்போகும்
அற்புதமான ஆழமான பொருளுடைய
படைப்புக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

sury siva said...

மனசு நிசமாலே ஈரம்தான்
அதனாலே தான் உடன்
கண்ணுக்குத் தெரியாத வைரஸும் ஒட்டிக்கொண்டு
புண்ணுக்கு ஏதுவாகிறது.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

G.M Balasubramaniam said...

உணர்ந்து எழுதிய பதிவு. பாராட்டுக்கள்.

KParthasarathi said...

அமர்க்களமாய் அமைந்துவிட்டது

Unknown said...

நித்திய நீரூற்று - அமுத சுரபி! அழகான / மென்மையான கவிதை ரிஷபன் ஜி!

ராஜி said...

எப்போதும் குளிர்ந்துகிடக்கும்

ஈரமான மனசு!
>>>
சீக்கிரம் துவட்டிக்கோங்க இல்லாட்டி ஜல்ப் புடிச்சுக்க போகுது!!

ஹ ர ணி said...

அன்புள்ள ரிஷபன்.

இப்படித்தானே ஓடிக்கொண்டிருக்கிறது காலமும் அதன் தடங்களும் எதன் மீதான ஆசையும் புரிதல்களும் விலகல்களும் எனவானபிற்பாடு.

எதார்த்தமான கவிதை.

”தளிர் சுரேஷ்” said...

பசுமை நினைவுகள் அருமை! நன்றி!

கதம்ப உணர்வுகள் said...

த.ம.1

அன்பு இருக்கும் மனதில் நித்திய நேச நீரூற்று இருந்துக்கொண்டே தான்….
பார்க்காமல் பேசாமல் வருடக்கணக்கில் இருந்துவிட்டு…
என்றேனும் ஒரு நாள் திடிர்னு சந்தித்துவிடும்போது ஏற்படும் சந்தோஷப்பூக்களில் அடுத்து நிற்போர் கூட கண்ணுக்கு தெரிவதில்லை.
காணும்வரை மனதில் பதியனிட்டு வைக்கும் அன்பு…
நினைவுகளால் போர்த்திவைக்கும் அற்புதமான கணங்கள்…
ஒவ்வொரு நொடியும் சௌந்தர்யமாக…

புரிதல் இருக்கும் அன்பில் பிரிவுக்கு வழியே இருப்பதில்லை..
அப்படியே பிரிவு ஏற்பட்டாலும் மனங்கள் நம்பிக்கையுடன் நினைவுகளை கைக்கோர்த்துக்கொண்டு காத்திருக்கும் தனக்கான சந்தர்ப்பம் வரும்வரை…

நேசத்தினை காணும் வரை… நேசத்தின் பொழிதல் மனசுக்கு அவசியமாகிறது அவசர யுகத்தில் இதற்கு எல்லாம் டைம் இல்லப்பா என்று சொல்லி யாரும் கடப்பதில்லை என்பது தான் அற்புதமான விஷயம்.. கவிதையின் வரிகளில் அன்பு சொட்டிக்கொண்டே இருக்கிறது அழகாய்…

அன்பின் பொழிதலில் மனம் என்றும் ஈரமாகவே…

அற்புதமான நேசப்பொழிவு வரிகள்… ரசித்து வாசித்தேன்.. ரசனையுள்ள மனம் அமைந்தால் அழகிய கவிதைகள் இப்படியும் மலரும் என்பதற்கு இந்த கவிதை ஒரு உதாரணம்பா…