அந்தப் பாதைக்குத்
தெரிந்தே இருக்கிறது..
உருவாகக் காரணமாய் இருந்த
முதல் காலடி!
துளிர்த்த முதல் இலைக்குப்
புரிகிறது..
நீரூற்றிப் போன கை!
வெட்டிய குளத்தில்
வந்து விழுந்த
முதல் மழைத் துளியை
இன்னமும் ஞாபகம்
வைத்திருக்கிறது ஊருணி !
பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !
தெரிந்தே இருக்கிறது..
உருவாகக் காரணமாய் இருந்த
முதல் காலடி!
துளிர்த்த முதல் இலைக்குப்
புரிகிறது..
நீரூற்றிப் போன கை!
வெட்டிய குளத்தில்
வந்து விழுந்த
முதல் மழைத் துளியை
இன்னமும் ஞாபகம்
வைத்திருக்கிறது ஊருணி !
பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !
19 comments:
//பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !//
ஏனெனில் ’அவன் தான் ஆறறிவு படைத்த மனிதன் !
எதையும் மறப்பது அவன் குணம்.
மறப்போம், மன்னிப்போம் பாலிஸியாக இருக்கலாம்.
நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.
துளிர்த்த முதல் இலைக்குப்
புரிகிறது..
நீரூற்றிப் போன கை!
நன்றிகள் துளிர்க்கும் இயற்கை..!
உண்மையான நிலை இப்படித்தான்.
அருமை ஐயா...
வாழ்த்துக்கள்...
பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே
ஆமாம்.நிச்சயமாகவும்,சத்தியமாகவும்/
மிக மிக அருமை
ஆழமான சிந்தனையுடன் கூடிய
அற்புதமான கவிதைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !//
உண்மை. நீங்கள் சொல்வது.
கவிதை அருமை.
அழகான கவிதைக்கு கடைசி வரிகள் அருமையா அமைஞ்சிருக்கு.. :)
கடைசியில் பஞ்ச்!
Superb!
எளிமையில் தொடங்கி வலிமையில் முடிகிறது கவிதை. மனிதர்கள் மட்டுமே மனக் கிடங்கில் அமிழ்ந்தவர்களை அடிக்கடி வெளிக்கொணர பிரயாசைப் படுவதில்லை.
பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !
unmayana varikal
அற்புதமாகச் சொல்லியுள்ளீர்கள்.
அற்புதம்!
ரசனையான வரிகள் அண்ணா! மிக ரஸித்தேன்!
அருமை.....
வணக்கம்...
http://tamilmayil.blogspot.com/2014/01/blog-post_22.html
நேரமிருப்பின் வாசித்து உதவ முடியுமா என்று பாருங்கள்...! மிக்க நன்றி!
வணக்கம்
ரிஷபன்(அண்ணா)
கவிதையின் வரிகள் மனதை நெருடியது...
நல்ல கருத்தாடல் மிக்க வரிகள் தொடர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment