சொற்களைக்
கவிதைக்காக
அளவுக்கதிகமாய்ப்
பிசைந்து விட்டேனோ..
குழைந்து கிடக்கிறது
இப்போது !
மறுபடி
நீ பேசக் கூடும்
என்பதால்
இந்த நிமிடக் கோபத்தை
இரு கை நீட்டி
ஏந்திக் கொள்கிறேன் !
இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !
கவிதைக்காக
அளவுக்கதிகமாய்ப்
பிசைந்து விட்டேனோ..
குழைந்து கிடக்கிறது
இப்போது !
மறுபடி
நீ பேசக் கூடும்
என்பதால்
இந்த நிமிடக் கோபத்தை
இரு கை நீட்டி
ஏந்திக் கொள்கிறேன் !
இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !
20 comments:
குழைந்து போனாலும் கவிதையை சுலபமாக ஜீரணிக்க முடிகிறது.
>>>>>
எப்படியோ [அவள்] பேசினால் சரியே .... கோபத்தை ஏந்திக்கொண்டு .... காலில்கூட சாஷ்டாங்கமாக விழுந்து விடலாம், இல்லையோ ;)
டோட்டல் சரணாகதியே பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கக்கூடும்
>>>>>
தூங்கினாலே வர முடியாத அந்த மீதிக்கனவு ... கொட்டக்கொட்ட விழித்திருந்தால் எப்படி வரும்?
>>>>>
மூன்றாவதைப் படித்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.
அதைச் சொல்கிறேன் இப்போது:
-=-=-=-
”நான் விழித்திருப்பதுபோல ஒருநாள் கனவு கண்டேன்.
டக்குனு கண் விழித்துப்பார்த்தேன்.
ஆனால் நான் அப்போது தூங்கிக்கொண்டிருந்தேன்.”
-=-=-=-
இது எப்படி இருக்கு ;)))))
அன்புடன் கோபு
அருமை... ஏந்திக் கொள்ள வேண்டும்...
மூன்று கவிதைகளும்
மிக மிக அற்புதம்
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்
முத்தான மூன்று கவிதைகள் அழகு!
மூன்றுமே உங்கள் ஸ்பெஷல் ட்ச்சுடன் நச்!
சொல்லவந்த கருத்தும் சொற்கோர் வையும்-இனிக்கும்
வெல்லமெனல் பொருத்தம்
விரும்பிட இவையும்!
மூன்றுமே பிடித்திருந்தது. அதிலும் இரண்டாவது!
கொட்டக் கொட்டவிழித்திருந்து..!!??
மீதிக்கனவுக்காய் காத்திருப்பது..
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..!
மூன்றும் அருமை.
உங்கள் கதைகளை கல்கியில் பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். இந்த கவிதைகள் மனதுக்கு நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளன. நீங்கள் இன்னமும் ஸ்ரீரங்கவாசியா ?
அருமை!அருமை!
இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !
very nice
இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !
very nice
நன்று :)
அருமை !
http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_23.html
இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
அன்புள்ள திரு.ரிஷபன் அய்யா,
கவிதை அருமை.
குழைந்து போவது...
குழைந்து பேசுவது...
எல்லாம் நல்லதற்கே...நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment