பதிவர்கள் என்பது ஒரு அடையாளம் தான்..
அந்த விசிட்டிங் கார்டை கையில் வைத்துக் கொண்டு எந்த வீட்டுக்கும் போக முடியும்.. என்கிற ஆனந்தம் இந்த ஞாயிறு அன்று கிட்டியது.
வை.கோ. ஸார் என்கிற இளைஞர் திருச்சியில் இருக்கும் வரை இரண்டு பெருமைகள் திருச்சிக்கு உண்டு..
ஒன்று மலைக் கோட்டை.. இன்னொன்று அவர் !
சுறுசுறுப்பில் அவரை விஞ்ச ஆளில்லை !
4.59 க்குள் குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து விடுங்கள் என்று அன்புக் கட்டளை கொஞ்சம் மிரட்டலாக மெயிலில் அனுப்பி இருந்தார்.
அப்படியா சங்கதி என்று 4.30 க்கே போய் விட்டேன்.
அந்த குடியிருப்பு வாசலில் ஒருவர் விடாப்பிடியாய் என்னைப் பிடித்துக் கொண்டு ‘ஆட்டோகிராப் போட்டால்தான் ஆச்சு என்று அடம் பிடித்தார்.
அப்படியே உங்க மொபைல் நம்பரும் என்றார் இன்னும் பிடிவாதமாய்.
கடைசியாய் ஒரு கேள்வி,, ‘யாரைப் பார்க்க.. இப்ப என்ன நேரம்.. எப்ப போவீங்க.. எல்லாம் எழுதுங்க’ என்றார்.
ஹி..ஹி.. அன்னியர் வருகையைப் பதிவேட்டில் குறித்து தீவிர பரிசோதனைக்குப் பின் உள்ளே அனுப்பினார். ஏர்போர்ட்டில் கூட சுலபமாய்ப் போக முடிந்தது.
கொஞ்சம் பயபக்தியாய் படியேறினேன்.
இதே வீடுதான்.. ரெண்டாவது மாடி.. எல்லாம் சரி.. ஆனா உள்ளே ஆள் இருக்கிற சுவடே காணோமே.. தப்பா வந்தாச்சா..
நல்ல வேளையாய் செல் நம்பர் இருந்தது.
அந்த வீட்டு வாசலில் நின்று .. கண்ணுக்குத் தெரிகிற ஹாலுக்கு.. போன் செய்த சூப்பர்மேன் நானாகத்தான் இருக்கும்..
ரிங் போனது எனக்கே கேட்டது.. உள்ளிருந்து ஒரு பெண்மணி வந்து அந்த மொபைலை எடுத்து..
கதவைத் தட்டினேன். ‘நான் தான்’ என்று சைகை செய்தேன் அழைப்பைத் துண்டித்து விட்டு.
ஏற்பாடுகள் பலமாய் இருந்தன, முன்பே தகவல் கிடைத்திருந்ததால் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து ‘சாப்பாடு உண்டு’ என்று உறுதி செய்து கொண்டேன். பக்கத்திலேயே பெரிய சைஸ் பாக்கு மட்டைத் தட்டுகள்.
ருக்மிணி சேஷசாயி மேடம் மெல்ல வந்தார்.
வணக்கம் சொல்லிவிட்டு ரொம்ப சகஜமாய்.. ரொம்ப நாளாய்ப் பழகுகிற தோரணையில்.. ‘எதுக்கு சிரமம்.. சும்மா பேசிண்டு இருக்கலாமே.. டிபனெல்லாம் எதுக்கு’ என்று பேச்சை ஆரம்பித்தேன்.
‘இருக்கட்டுமே அது பாட்டுக்கு அது.. பேச்சு பாட்டுக்கு பேச்சு’ என்று பெருந்தன்மையாய்ச் சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார்.
(நிஜமாகவே பால் தான் கடைசியில் எனக்கு.. காப்பி வேண்டாம் என்றதும்)
அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொன்னதும்
என் காலர் தானாகவே மடங்கிக் கொண்டது.
மேன்மக்கள் மேன்மக்களே..
ஹால் கண்ணாடி ஷெல்பில் உரத்த சிந்தனை ஷீல்ட்களைப் பார்த்ததும்
கப்சிப் ஆனேன்.
இதற்குள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்..
ஆதி வெங்கட்.. குட்டி தேவதை ரோஷிணி சகிதம்..
வைகோ ஸார்.. தமிழ் இளங்கோ அவர்கள்.. கீதா சாம்பசிவம் மேடம்.. ராதா பாலு மேடம்..
கொஞ்ச நேரத்தில் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஸார்.. பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)
அப்புறம் விழா நாயகி.. இந்த சந்திப்பின் காரணகர்த்தா.. ரஞ்சனி மேடம்..அவர் கணவர் திரு. நாராயணன் வருகை தந்தனர்..
முதலில் போட்டோசெஷன்.. வைகோ ஸாரின் கேமிராவுக்கு சரியான வேட்டை.. தமிழ் இளங்கோ ‘நான் ஒரு புரபஷனல் போட்டோகிராபராக்கும்’ என்று இன்னொரு பக்கம் பிளாஷ் அடித்துக் கொண்டிருந்தார்.
நடுவே புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது போல ரோஷ்ணியின் அட்டகாச போட்டோ ஷாட்கள்..
‘அப்பாகிட்ட கத்துகிட்டியாம்மா’என்று தெரியாத்தனமாய் என் துடுக்கு வாயை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்கப் போக.. ரோஷ்ணி அடித்தாள் ஒரு சிக்ஸர்.. ‘அவருக்கே நான் சொல்லிக் கொடுப்பேனாக்கும்’
இந்த அமர்க்களம் ஓய்ந்ததும்.. வைகோ ஸாரின் பரிசளிப்பு.. புத்தக அன்பளிப்புகள்.. அரட்டைக் கச்சேரி..
ஒன்று சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அறிமுகமான உணர்வே இல்லை எவரிடமும். பல நாட்கள் பழகிய நெருக்கம்.. சகஜமாய்.. இயல்பாய் சம்பாஷணை..
பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்க.. எனர்ஜிக்கு உடன் டிபன்.. ஸ்வீட்டுடன்.. அப்புறம் காபி.. பால் (எனக்கு) !
விடை பெற்றுக் கிளம்பும்போது.. என் சொந்தக் காரர்கள் லிஸ்ட்டில் இன்னும் சிலர் சேர்ந்த ஆனந்தம் என்னிடம்..
அப்படித்தான் மற்றவர்களும் உணர்ந்திருப்பார்கள் !
தேங்க்ஸ் ரஞ்சனி மேடம்.. உங்களால் தான் இது சாத்தியமானது..
தேங்க்ஸ் ருக்மணி சேஷசாயி மேடம்.. உங்கள் இல்லம் தந்த உபசரிப்பை மறக்க முடியாது !
வைகோ ஸார்.. அடுத்த சந்திப்பு எப்போ.. எங்கே ??? !!!
(படம் : நன்றி திருமதி ஆதி வெங்கட்)
26 comments:
இனியதோர் சந்திப்பு.....
சந்திப்பு பற்றி நான் படிக்கும் மூன்றாம் பதிவரின் பதிவு! :)
உங்கள் மொழியில் சந்திப்பு பற்றி படித்து ரசித்தேன்.....
வணக்கம்
பதிவர்களை சந்திப்பது மகிழ்ச்சிதான் அதிலும் இப்படியான பதிவர்களை சந்திப்பது மிக மிக மகிழ்ச்சிதான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நேற்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பினை உங்களுக்கே உரிய நகைச்சுவை நடையில் அருமையாகச் சொன்னீர்கள். பகிர்வுக்கு நன்றி.நானும் சந்திப்பு குறித்த ஒரு பதிவை அந்த காலத்து வியாசம் போன்று எழுதி இருக்கிறேன். உங்களது இந்த பதிவினையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன். நன்றி.
த.ம.1
சுவாரசியமான விவரங்கள். கலந்து கொள்ள முடியவில்லை என்ற சிறு ஏக்கம்...
தங்களுக்கே உரித்தான பாணியில் [நிறைகுடம் தளும்பாது என்பது போல] மிக அருமையாக அனைத்தையும் எழுதியுள்ளீர்கள். படிக்கப்படிக்கப் பரமானந்தமாக இருந்தது எனக்கு.
>>>>>
உண்மையிலேயே இதுபோன்ற சந்திப்புக்களில் நாம் இடைஇடையே இழக்கும் சோர்வுகள் மறைந்து ஓர் புத்துணர்வு ஏற்படத்தான் செய்கிறது.
>>>>>
தங்களின் ஆட்டோகிராப் நகைச்சுவை மிக அருமை.
நாங்கள் செக்யூரிட்டி கேட்டிலெல்லாம் நிற்காமல் எங்கள் காரினை சர்ரென்று உள்ளே விடச்சொல்லி விட்டேன். ஒரு பயலும் எங்களை ஒன்றுமே கேட்கவில்லை.
ரெயில்வே கேட் போல குறுக்கே இருந்த குழாயும் ஓரளவு மேலே தூக்கிக்கொண்டு இருந்த சமயம் எங்களின் குட்டியூண்டு கார் உள்ளே பாய்ந்து சென்றுவிட்டது.
பிறகு கீதா மாமி ஆட்டோகிராபில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்ததை தூரத்திலிருந்து கண்டு களித்தோம்.
>>>>>
//வை.கோ. ஸார் என்கிற இளைஞர் திருச்சியில் இருக்கும் வரை இரண்டு பெருமைகள் திருச்சிக்கு உண்டு..
ஒன்று மலைக் கோட்டை.. இன்னொன்று அவர் !
சுறுசுறுப்பில் அவரை விஞ்ச ஆளில்லை !//
இது நம்பக்கூடியதே இல்லை. என் சுறுசுறுப்பு எங்காத்து மாமிக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியம்.
//4.59 க்குள் குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து விடுங்கள் என்று அன்புக் கட்டளை கொஞ்சம் மிரட்டலாக மெயிலில் அனுப்பி இருந்தார். அப்படியா சங்கதி என்று 4.30 க்கே போய் விட்டேன்.//
இந்த அன்பு மிரட்டல் மிக மிக அவசியம் என்பது உங்களுக்கே தெரியும். இது நான் உங்களிடமிருந்து கற்றது என்றுகூடச் சொல்லலாம். அதனால் தான் நான் சொன்ன 9 க்கு 7 பேர்களாவது பேரெழுச்சியுடன் 4.35 மணிக்குள் வந்து சேர்ந்தோம். 5 மணிக்கு மேல் வருகை தந்தவர்கள் நம் ஆரண்ய நிவாஸ் + ரஞ்ஜனி மேடம் ஆகிய இருவரும்தான். அவர்களிடமும் நான் ”நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்கள்” எனச் சொல்லியும் விட்டேன்.
>>>>>
//ஒன்று சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அறிமுகமான உணர்வே இல்லை எவரிடமும். பல நாட்கள் பழகிய நெருக்கம்.. சகஜமாய்.. இயல்பாய் சம்பாஷணை..//
இதை... இதை... இதைத்தான் நானும் உணர்ந்தேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
முதல் ஆளாக எங்களைப்போலவே 4.30க்கே வருகை தந்து உதவிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களை நிறைய பேசச்சொல்லி கேட்கணும் என ஆசைப்பட்டேன்.
ஒவ்வொருவரையும் ஓர் 5 நிமிடமாவது தனியாகப் பேசச்சொல்லணும் எனவும் விரும்பினேன்.
சரி, ஏதோ நடந்ததெல்லாம் நாராயணன் செயல். வெற்றிகரமாக முடிந்தவரை சந்தோஷமே.
100% ATTENDANCE எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது.
அன்புடன்
வீ.....ஜீ
அடுத்த சந்திப்பு ஆரண்ய நிவாஸில் என அறிவிப்புச் செய்யப்பட்டதே! மறந்து போச்சா? அருமையாக எழுதி இருக்கிறீர்கள். :)
// அவருக்கே நான் சொல்லிக் கொடுப்பேனாக்கும் // அதானே...?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இனிமையானதொரு சந்திப்பை இனிக்க இனிக்க எழுதியுள்ளீர்கள்
அடுத்த சந்திப்பு ஆரண்ய நிவாஸிலா-
மகிழ்ச்சி ஐயா
நன்றி
ஆஹா..... சுடச்சுட! அருமை!
சுவாரசியமான பதிவு.மற்ற பதிவுகளைபடித்து விவரம் தெரிந்து கொண்ட பின்னும் படிக்க அலுக்கவில்லை. அப்படி ஒரு சந்திப்பு.
அருமையான சந்திப்பு! ஒவ்வொருவரும் அவரவரவர் நடையில் அழகாக எழுதியுள்ளீர்கள்!
உங்கள் எழுத்து நடையில் வெகு ஜோராக உள்ளது.
நானும் ரோஷ்ணியும் ஆட்டோகிராஃபில் மாட்டவில்லை... எங்கே அந்த காவலர் அழைத்தாரோ என்னமோ தெரியாது. எல்லோரும் அப்போது தான் உள்ளே போவதை பார்த்து பின்னாடியே ஓட்டமும் நடையுமாக வந்துவிட்டேனே...:))
//அப்போதுதான் அறிமுகமான உணர்வே இல்லை எவரிடமும். பல நாட்கள் பழகிய நெருக்கம்.. சகஜமாய்.. இயல்பாய் சம்பாஷணை..//
வாஸ்தவம் தான். மறக்க முடியாத சந்திப்பு. மனதிற்கு ஒரு உற்சாகம் கிடைத்தது.
அடுத்தது, அடுத்த மாதம் ஆரண்யநிவாஸில் தானே???
உங்கள் பதிவின் இணைப்பையும் என்னுடைய பதிவில் சேர்த்து விடுகிறேன்.
Conversation opened. 1 unread message.
Skip to content
Using Gmail with screen readers
You’re out of storage space and will soon be unable to send or receive emails until you free up space or purchase additional storage.
Click here to enable desktop notifications for Gmail. Learn more Hide
Move to Inbox
More
1 of 1,729
Web Clip
" பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)" தங்களின்
இந்த அறிமுகம் தான், பதிவர்கள் சந்திப்பில் என்னுடைய முகமைக்கு ஒரு அங்கீகாரம் ...மேலும் இந்த
சந்திப்பிற்கு வருகை தரும் சில பதிவர்களை நான் அறிவேன் என்றதால் -( மாதங்கி -சென்னை சென்றிருந்ததால்-வர இயலாததால் ) நான் மட்டும் கூட 'ஆர்வத்துடன் ' (?) ஆஜராகிவிட்டேன் !
மற்றும் பொதுவாகவே ' பதிவர்கள் ' யாவரும் முதற்கண் ஏழுத்தாளர்கள் என்றகாரணத்தினால்
அவர்களுடைய உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் ஆர்வத்திற்கு ஒரு முக்கிய காரணம் ; நான் சிறிதும் ஏமாறவில்லை !
புகைப்பட session -க்கு பிறகு சில பதிவர்களின் சுய அறிமுகம் அதன் பிறகு திருமிகு.ருக்மணி சேஷசயீ அவர்களின் அன்பான உபசரிப்போடு , மிகவும் ருசியாான இட்லி-சட்னி,சாம்பார் ...ஆஹா நல்ல புஷ்டியான ஞாயிறு மாலை பொழுது ..இந்தாவாய்ப்புக்காக எல்லா பதிவர்களுக்கும் நன்றி..நன்றி ..
மாலி.
சந்திப்புகள் மகிழ்வூட்டும்
மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்
சந்திப்புகள் பயன்தருமே!
அடுத்தமுறை திருச்சி வரும்போது நான் கூடியவரை எல்லோரையும் சந்திக்க வேண்டும்.
சுவாரஸ்யமான சந்திப்பு! பகிர்வுக்கு நன்றி!
//பதிவர்கள் என்பது ஒரு அடையாளம் தான்.. //
ஆரம்பித்தவிதமே அலாதி தான்!
முடிக்க மனமில்லாது முடித்து, அடுத்த
சந்திப்பு எங்கே, எப்போ? என்று அதே சடுதியில் கேட்டதும் நேர்த்தி!
இந்தமாதிரி ஸந்திப்புகள் உறவைவிடஉயர்வானவை. அழகான உங்கள் விவரிப்பு.. இந்த ஸந்திப்புக்குக் காரணமானனவர்கள் யாவரையும் வலைப்பூக்களின் மூலம்
எனக்குத் தெரியும். முதன்முதலில் யூத் விகடன்மூலம், உங்களின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.
சந்திப்புகள் அழகாகவும்,இனிமையாகவும் இருந்தது. அன்புடன்
சுவாரசியமான சந்திப்பை மிகவும் சுவாரசியமாக பதிவிட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்
அப்பாகிட்ட கத்துகிட்டியாம்மா’என்று தெரியாத்தனமாய் என் துடுக்கு வாயை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்கப் போக.. ரோஷ்ணி அடித்தாள் ஒரு சிக்ஸர்.. ‘அவருக்கே நான் சொல்லிக் கொடுப்பேனாக்கும்’//
ரோஷ்ணி சொல்வது உண்மைதான்.
குழந்தைகளிடம் தான் அலைபேசி, காமிரா மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் கற்று கொள்ள வேண்டும்.
அருமையான பதிவர் சந்திப்பு பதிவு.
பதிவர் சந்திப்பை சுருங்கச் சொல்லி சுவை குறையாமல் தாங்கள் எழுதிய பதிவு....சக பதிவர்களையும் தங்கள் உறவாக நினைத்த தங்களின் மனம்....இனிமையான அந்த சந்திப்பை எண்ணும்போதே மகிழ்ச்சி கொள்கிறது என் மனம் அடுத்த பதிவர் சந்திப்பை எதிர்பார்த்து!
வணக்கம் ரிஷபன் ஸார்.
உங்களை இந்த சந்திப்பில் பார்த்ததுதான் ஹைலைட். அம்மாவிடமும், என் அக்காவிடமும் உங்களச் சந்தித்ததைப் பற்றிச் சொல்லி மகிழ்ந்தேன். உங்களிடம் ஒரு ஆட்டோக்ராப் வாங்கியிருக்கலாம், மறந்துவிட்டேன். அடுத்த முறை நிச்சயம் வாங்கிவிடுவேன்.
இனிமையான நினைவுகளுடன்
ரஞ்சனி
Post a Comment