September 21, 2015

பேச மாட்டியா

உனக்குப் பேசணும்னே தோணாதா..’
’தோணும்..’
‘இதுவரைக்கும் நாந்தான் கூப்பிட்டிருக்கேன்’
‘ம்ம்’
‘ம்ம்னா என்ன அர்த்தம்’
‘அப்படி இல்லம்மா.. எனக்குப் பேச நேரம் கிடைக்கும்போது நீ ஃப்ரீயா இருப்பியோன்னு தெரியாது’
‘சரி.. ஒரு மெசேஜ்.. கால் பண்ணவான்னு’
‘தப்புதான்.. நீ சொன்னப்புறம் அதைச் செஞ்சிருக்கலாம்னு தோணுது. ஆனா அப்போ உன்கிட்ட பேசணும்னு தா தோணும்.. மெசேஜ்ல முழுமையா ஒரு திருப்தி வரல’
‘நீ ட்விஸ்ட் பண்ற.. பேச முடியல.. அப்போ அட்லீஸ்ட் மெசேஜ்’
’தப்புதான்.. ஸாரி’
‘யாருக்கு வேணும் உன் ஸாரி’
‘......’
‘நான் உன்னை டிஸ்டர்ப் பண்றேன் இல்லியா’
‘இல்லம்மா’
‘நானும் உன்னை மாதிரியே விலகி இருக்க முயற்சி பண்றேன்’
‘அய்யோ.. நான் விலகில்லாம் இல்ல’
‘நீ புத்திசாலி.. யூ நோ யுவர் லிமிட்ஸ்.. என்னை மாதிரி அறிவே இல்லாம அப்பப்ப தொந்திரவு பண்றதில்ல’
‘என்னம்மா இப்படி திடீர்னு’
‘திடீர்னு இல்ல.. யோசிச்சு பார்த்தேன்.. என்னால உனக்குத் தொல்லை..அப்படித்தானே’
‘வேலை மும்முரத்துல..’
‘அப்போ நான் எந்த வேலையும் இல்லாம வெட்டியா இருக்கேன்..’
‘கம்பேர் பண்ணா என்னை விட நீ ஆயிரம் மடங்கு கிரேட்.. அவ்வளவு நெருக்கடியிலும் நீ எப்படியாச்சும் பேசிடற.. நான் தான் சொதப்பறேன்’
‘கட் இட்’
‘ஆயிரம் ஸாரி..’
‘யாருக்கு வேணும் உன் ஸாரி’
‘அபாலஜியும் கேட்கக் கூடாது.. நான் என்னதான் பண்ணட்டும்’
‘ஒரே ஒரு நிமிஷம் டெய்லி என்கிட்ட பேச உனக்கு டைம் இல்ல.. அதானே.. நீயா நினைச்சா ஒரு வாரம் பத்து நாளைக்கு ஒரு தடவை பேசுவ,. நான் கால் பண்ணா கட் பண்ணுவ.. மெசேஜ் பண்ணா ரிப்ளை பண்ணமாட்ட.. கேள்வி கேட்டா பதில் வராது..’
‘செல்லம்..’
‘யாரு.. நானா’
‘அம்மு’
‘லீவ் தட் ஸ்க்ராப்’
‘ப்ளீஸ்’
‘வேணாம்.. எனக்கு அலுத்துப் போச்சு’
‘இனிமே பாரேன்.. டெய்லி நீயே போரடிச்சுப் போற அளவுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பேன்’
‘ஒண்ணும் வேணாம்’
‘ப்ளீஸ்.. இப்ப கூட ஒரு மீட்டிங்.. உன் மேசெஜ் பார்த்து வெளியே வந்து பேசிகிட்டிருக்கேன்’
‘போ.. உன் மீட்டிங்.. உன் வேலை.. என்னைப் பத்தி எப்பவாச்சும் நேரம் கிடைச்சா யோசி’
‘கிளம்பி வந்திரவா’
‘ஒண்ணும் வேணாம்’
‘செல்லம்.. என்னதான் செய்யறது’
‘சரி .. போ’
‘கோபம் இல்லியே’
‘இல்ல’
‘நிஜமா’
‘ம்’
‘போகட்டுமா.. நீ சொன்னாத்தான்’
‘போடா’
‘மீட்டிங் முடிச்சு வந்ததும் உனக்குக் கால் பண்றேன்.. ப்ராமிஸா’
‘இப்படித்தான் சொல்லுவ.. ஆனா பண்ணமாட்ட’
‘சத்தியமா’
‘சரி.. சரி.. போ’
’குட் கேர்ல்’

ஒரு வாரம் கழித்து..  இதன் முதல் வரியில் இருந்து மீண்டும் படிக்கவும்.

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமை!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு.

பல சமயங்களில் நானும் இப்படித்தான் இருக்கிறேன்! :)

கோமதி அரசு said...

நேரம் ஒதுக்கி பேசுங்க

நிலாமகள் said...

எப்படிங்க...?!

அச்சு அசலா...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு வாரம் கழித்து.. இதன் முதல் வரியில் இருந்து மீண்டும் படிக்கவும்.//

மூன்று வாரமாக தினமும் இதையே தான் படித்து ரஸித்து மகிழ்ந்து வருகிறேன். :)

’போடா’ என்று உரிமையுடன் சொன்னவள் நிச்சயமாக ‘குட் கேர்ல்’ ஆகத்தான் இருக்க முடியும். :)

அழகான படைப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள்.