தேடிக் கொண்டிருக்கிறேன்
எனக்கே எனக்காக
ஒரு ஸ்பெஷல் புன்னகையுடன்
வளைய வரும் ஆத்மாவை !
கடைசி தினம் வந்தவர்களும்
அப்படித்தான் சொன்னார்கள் ...
மறக்க முடியாமல் செய்து விட்டு
மறைந்து போன ஒரு ஜீவன்
இனி நினைவுகளால் வாழும்
நினைவுகளும் மரணிக்கும் வரை!
அத்தனை மனிதர்கள்
நிறைந்து கிடந்த
வீட்டை வெறுமையாக்கும்
சாதுர்யம் அந்த புன்னகைக்கே
சாத்தியமானது !
எதுவும்
சொல்லாமல் போய்விட்டாய் என்று
குறை சொல்ல முடியாது
வந்து விசாரிக்கும் மனிதர்கள் அத்தனை பேரும்
சொல்கிறார்கள்
நான் கற்றுக் கொள்ள வேண்டியவைகளை!
இருந்தபோது தொலைத்து விட்டேன்
இழந்தபோது தெரிந்து கொண்டேன்
உன் புன்னகையின் பெருமை !
5 comments:
//அத்தனை மனிதர்கள்
நிறைந்து கிடந்த
வீட்டை வெறுமையாக்கும்
சாதுர்யம் அந்த புன்னகைக்கே
சாத்தியமானது ! //
நிஜமான வலி. அதன் நிழலான வரி. --கே.பி.ஜனா
//இருந்தபோது தொலைத்து விட்டேன்
இழந்தபோது தெரிந்து கொண்டேன்
உன் புன்னகையின் பெருமை ! //
அம்மாவை பற்றிய நினைவுக் கவிதை அபாரம்.
ரேகா ராகவன்
Ammavum, nanum 2 thadavai padiththom. Amma rombavum negizhndhuvittal. Your blog tells the pain with maturity. God blesss you.
- Jagannathan
முதல் முறை புரிய வில்லை. இரண்டாம் முறை புரிந்தது. நல்ல கவிதைகளில் சில முறை இப்படி நடக்கும் தான். நெகிழ்வான கவிதை.
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
யாரும் அம்மாவாக முடியுமா?
ஹுஹும் முடியாது.....
அம்மாவைப்போல் தன்னலமில்லா அன்பை செலுத்த இயலுமா?
ஹுஹும் இயலாது.....
அம்மாவின் புன்னகையை யாராலும்
மீட்டுத்தரமுடியுமா?
ஹுஹும் முடியாது.....
அம்மாவின் இடத்தை யாராலும்
நிரப்ப முடியுமா?
ஹுஹும் முடியாது.....
நிறைந்த அன்புடன் முகம்கொள்ளா புன்னகையுடன் எல்லோர் மனதிலும் நிலைத்து இருக்கச்செய்த அம்மாவை....அம்மாவின் அன்பை....அம்மாவின் புன்னகையை... இல்லாது போனப்பின் எல்லோரும் சொல்லி சொல்லி சென்றப்பின்....
அம்மாவின் மனதை..... அம்மா நம்மேல் கொண்டிருந்த நிறைந்த அன்பை..... புரிந்துக்கொண்டு... அம்மாவின் இல்லாத அந்த வெற்றிடத்தைப்பார்த்து மனதின் ஆழத்தில் இருந்து எழுந்த அழுகையின் வலியின் வேதனையின் அம்மாவின் நினைவின் வரிகள் ஒவ்வொன்றும் வைரத்திற்கு ஒப்பானவை....
அம்மாவின் ஆத்மா என்றும் உடன் இருந்து பிள்ளையை கவசமாய் காக்கட்டும் எல்லா நேரமும்.....
Post a Comment