உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !
இரவின் நிசப்தம்
கிழித்த அழுகை
ஒரு குழந்தையின்
பசி என்று
திரும்பிப் படுத்தபோது
அவள் எழுந்து போனாள்
நீர் குடிக்க
என் அறியாமையைக்
கேலி செய்து .
இது வரை
பூக்கத் தெரியாத எனக்கும்
நீர் ஊற்றிப் போகிறது
அந்தப் பெயர் தெரியாத மேகம்..
என் பசுமை அப்படியே
உதிர்ந்த இலைகளுக்குப் பின்னும்.
சொட்டிக் கொண்டிருக்கிறது
மனசு
உன் ஒற்றை விரலுக்காக !
17 comments:
வ்ளர்வது குழந்தைகள்
மட்டுமே
அப்பாக்கள்
அல்ல.
//'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் //
சூப்பரோ சூப்பர். எல்லா கவிதைகளும் அழகான ஓவியங்கள்.
ரேகா ராகவன்.
'ஒரு குழந்தையாகவே
உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !
........ :-) very nice.
Lovely.. :)
சுருங்கச் சொல்லி நிரம்ப விளங்க வைக்கிற கவிதைகள்! அருமை!
great...
முதலும் கடைசியும் ரொம்ப அருமை ரிஷபன்
ரெண்டாவது வலி ..............
மலரின் வாசத்தையும் மென்மையையும் சுமந்து கவிதை வரிகள் அழகோ அழகு ரிஷபன்...
அருமையான கவிதைகள்.
நல்ல கவிதை.......
நல்ல கற்பனை .........
பிடிச்சிருக்குங்க.......
அருமையான கவிதைகள்
ஆழமான உணர்வுகள்
வாழ்த்துக்கள்
//சொட்டிக் கொண்டிருக்கிறது
மனசு
உன் ஒற்றை விரலுக்காக//
ஏங்கிக் கொண்டிருக்கிறது
மனசு
உங்கள் அடுத்த கவிதைக்காக...
உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது,
கவிதைகளுக்கும்,ஓவியங்களுக்கும் உள்ள இடைவெளி குறுகியது போல் என்னுள் ஒரு பிரமிப்பு!!!
//ஒரு குழந்தையாகவே
உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !//
its so nice.. கவிதைகள் அனைத்தும் அருமை நண்பா..
kavithaigal arumai!!!
அழகிய கவிதை!
இது வரை
பூக்கத் தெரியாத எனக்கும்
நீர் ஊற்றிப் போகிறது
அந்தப் பெயர் தெரியாத மேகம்..
அருமை
Post a Comment