March 07, 2010

கரைகளை உடைத்து..

என் கரைகளை

உடைத்துக் கொண்டிருக்கிறேன்

எதையும் அழிப்பதற்கல்ல ...

வறண்ட இதயங்களை

நனைப்பதே என் லட்சியமாய்..

ஆனாலும்

மீண்டும் எழும்புகின்றன

எனக்கான கரைகள்

இருபுறமும் இயல்பாகவே..


என்னதான் ஒளித்து

வைத்தாலும்

விதையை

செடியாய் கிளம்பி

இடம் காட்டி விடும்

நிஜமான நேசமும்

அப்படித்தான் !

இருட்டத் துவங்கியதும்

அம்மாக்களின் அழைப்பு

முழுதாய் இருட்டியதும்

வீடு திரும்பிய பிள்ளைகள்

எங்கே போவது

என்று புரியாமல்

நகரும் குட்டி நாய் !

ஒரு தடவையேனும்

சொல்லத்தான் வேண்டும்

கடவுளிடம் நன்றி

மனிதரிடம் நம் நேசிப்பு!

19 comments:

Anonymous said...

நாய்க்குட்டி மனசை எவ்வளவு அழகா படம் பிடிச்சி இருக்கீங்க ரிஷபன் .....

Madumitha said...

கரை உடைப்புக்
குறித்த மாற்று
சிந்தனை நன்று.

Chitra said...

ஒரு தடவையேனும்

சொல்லத்தான் வேண்டும்

கடவுளிடம் நன்றி

மனிதரிடம் நம் நேசிப்பு!


..............அனைத்து கவிதைகளும் அருமை. கவிதை கருவும் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே அருமை.. நாய்க்குட்டி மனசு பரிதாபம்.

கே. பி. ஜனா... said...

//எங்கே போவது
என்று புரியாமல்
நகரும் குட்டி நாய் !...//
படித்துவிட்டு மனதை எந்தப் பக்கம் நகர்த்துவது என்று புரியாமல் தவித்து நின்ற கணங்கள்...

பத்மா said...

/எங்கே போவது
என்று புரியாமல்
நகரும் குட்டி நாய் !...//

நாய் குட்டி போல சில மனசும் தான் !

பத்மா said...

மீண்டும் எழும்புகின்றன

எனக்கான கரைகள்

இருபுறமும் இயல்பாகவே..

கரைகள் எழும்புவதே தகர்ந்து விடத்தான்

பத்மா said...

என் கவிதைகள் அனைத்தும் படித்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
am touched

வை.கோபாலகிருஷ்ணன் said...

என்னதான் ஒளித்துவைத்தாலும் விதையை
செடியாய் கிளம்பி இடம் காட்டி விடும்
நிஜமான நேசமும் அப்படித்தான் !


அருமை

ஸ்ரீராம். said...

உண்மைப் பிரியத்தை ஒளித்து வைக்க முடியாது. அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எப்படி இருந்தாலும் நேசம் தன் இருப்பைக் காட்டி விடும், விதையிலிருந்து பீறிட்டு வரும் செடி போல !! கருத்தும் அருமை! கவிதைகளும் அருமை!!

மாதவராஜ் said...

மூன்றாவது கவிதை மிக இயல்பாய், காட்சிகளோடு பதிகிறது எனக்கு. வாழ்த்துக்கள் ரிஷபன்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{ ஒரு தடவையேனும்
சொல்லத்தான் வேண்டும்
கடவுளிடம் நன்றி
மனிதரிடம் நம் நேசிப்பு! }}}}}}}}

அனைத்து கவிதைகளும் அருமை வாழ்த்துக்கள் !

திவ்யாஹரி said...

//ஒரு தடவையேனும்
சொல்லத்தான் வேண்டும்
கடவுளிடம் நன்றி
மனிதரிடம் நம் நேசிப்பு!//

வழமைபோல் அனைத்தும் அருமை நண்பா..

Santhini said...

ஆம் ! ஒரு தடவையேனும் சொல்லத்தான் வேண்டும்....
உங்கள் கவிதைகளில் இருக்கும் அன்பின் ஈரம், என் மனதை தொட்டு நிரப்பி கனமாக்குவதை.
ஒவ்வொரு முறையும், ஓரிரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாமல் ஓடிப்போகுமளவு ...
கனம் ஏறி விடுகிறது. ஆனாலும் மீண்டும் மீண்டும் வருகிறேன் கொஞ்சம் பாரம் ஏற்றிக்கொள்ள...
கரைகளில்லாத ....மழையாக ....

Thenammai Lakshmanan said...

அன்பும் விதை போல முளைக்கும் அற்புதம் மிக அருமை ரிஷபன்

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை கருவும் அருமை.

vidivelli said...

நல்ல கவிதை..........
ரசித்தேன்........


நம்ம பக்கமும் வாங்க........

kavya said...

அருமையான கவிதைகள்...