நிபந்தனைகள் :-உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..?
தொடர் பதிவிற்கு அழைத்த 'காவ்யா' விற்கு நன்றி!
காளியம்மாள் டீச்சர் : என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. வீட்டில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பள்ளிக்குப் போயிருந்தேன். அத்தை உணவுடன் வர வகுப்பறையின் வெளியே அனுப்பி சாப்பிட வைத்து.. 'உனக்குக் கோபம் கூட வருமா' என்னை முதன் முதலில் செல்லம் கொஞ்சிய வெளி மனுஷி. 'கோபம் கூடாது ' என்று சொல்லவே இல்லை! ஆனால் என் கோபம் திசை பற்றி சொல்லாமல் புரிய வைத்தவர்.
எம். எஸ். : பிறர் சங்கீதங்கள் பற்றி புரிதல் அற்று இருந்தபோது தமது தெய்வீக குரலில் என்னையும் வசீகரித்தவர்.
கமலா செல்வராஜ் : 'அம்மா' என்கிற அழைப்புக் குரல் கேட்கத் தவிக்கும் ஜீவன்களுக்கு ஜீவன் தருபவர்.
பி.டி. உஷா : முதன் முதலில் இந்தியாவை ஒலிம்பிக்ஸில் கவனம் ஈர்த்தவர்.
டயானா : அந்த அழகு இன்னும் பல பேர் மனசில் சிதையாமல் தான் இருக்கிறது..
பி சுசீலா : இவர் குரலில் எத்தனை முறை மனசின் அமைதி மீட்கப் பட்டிருக்கிறது..
மெஸ் மாமிகள் : ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஊருக்கு பந்தாடப் படும்போது அடுக்களை வெப்பத்தில் உருக்குலைந்து சூடாய் சமைத்துத் தரும் 'அன்னலட்சுமி'களின் பெயர்கள் கூடத் தெரிவதில்லை. இவர்கள் சாதனைகளும் எவர்க்கும் சளைத்ததில்லை.
செல்லம்மா பாரதி : பாரதி ஒரு ஆச்சர்யம் என்றால்.. அவர் துணைவி இன்னொரு ஆச்சர்யம்! இரண்டு எக்ஸ்ட்ரீம் !
எனக்கு பிடித்த பெண்கள் பதிவில் சராசரி பெண்கள் பெயர்கள் தான் முதலில் மனசில் வந்தது. பிற பிரபலங்கள் ஏதோ ஒரு பின்புலத்தில் தானும் பிரபலம் ஆகி விட்டவர்கள். வாழ்க்கைப் போராட்டத்தில் பூமியில் கால் பதித்து ஒவ்வொரு நாளையும் சுலபமாய் கடந்து போகும் இந்தப் பெண்கள் என்னை சில நேரங்களில் கலங்கடித்து விடுகிறார்கள்.
என் பதிவில் விடுபட்டுப் போன மற்ற பெண்மணிகளுக்கும் சேர்த்து ஒரு சல்யூட் !
16 comments:
பத்துப்பெண்கள் பதிவு, நன்றியுணர்வை நன்றாகவே வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
//*மெஸ் மாமிகள் : ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஊருக்கு பந்தாடப் படும்போது அடுக்களை வெப்பத்தில் உருக்குலைந்து சூடாய் சமைத்துத் தரும் 'அன்னலட்சுமி'களின் பெயர்கள் கூடத் தெரிவதில்லை. இவர்கள் சாதனைகளும் எவர்க்கும் சளைத்ததில்லை. *//
nice thought
பி.சுசீலா! ஆஹா! இவர்கள் குரல் தான் என்னை ஒரு காலத்தில் தாலாட்டியதும், துயிலெழுப்பியதும்! அருமையான பதிவு
மெஸ் மாமிகள்....நெகிழ வைத்தது.
பி. சுசீலா....மகிழ வைத்தது.
தேர்வுகள் அருமை..:)
மெஸ் மாமிகள் : ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஊருக்கு பந்தாடப் படும்போது அடுக்களை வெப்பத்தில் உருக்குலைந்து சூடாய் சமைத்துத் தரும் 'அன்னலட்சுமி'களின் பெயர்கள் கூடத் தெரிவதில்லை. இவர்கள் சாதனைகளும் எவர்க்கும் சளைத்ததில்லை.
..............உண்மைதான். வாழ்க்கையில் ஜெயித்து காட்டும் இவர்கள், பாராட்டுக்குரியவர்கள்.
// வாழ்க்கைப் போராட்டத்தில் பூமியில் கால் பதித்து ஒவ்வொரு நாளையும் சுலபமாய் கடந்து போகும் இந்தப் பெண்கள் சில நேரங்களில் கலங்கடித்து விடுகிறார்கள்//.
உண்மைதான்.சரியாகச்சொன்னீர்கள்.
மெஸ் மாமிகளின் சாதனைகளும் எவருக்கும் சளைத்ததில்லை.
சுவாரசியமான பதிவு! பாராட்டுக்கள்!!
அருமையான தேர்வுகள்
டீச்சர், மெஸ்மாமி, பி. சுசீலா.. எல்லாமே நல்ல தேர்வுகள்.
நல்ல தேர்வுகள்.
பி.டி.உஷா, பி.சுசீலா, டயானா
எனக்கும் மிக பிடித்தவர்கள் இவர்கள்.
நல்ல பதிவுதாங்கோ.
உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!
{{{{{{{ சேட்டைக்காரன் said...
பி.சுசீலா! ஆஹா! இவர்கள் குரல் தான் என்னை ஒரு காலத்தில் தாலாட்டியதும், துயிலெழுப்பியதும்! அருமையான பதிவு }}}}}}}}
யாராலும் மறுக்கமுடியாத உண்மைதான் . நானும் இந்த இவர்களின் குரல்களில் மெய்மறந்து இமை மூடி இருக்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி
நிஜம்தான் மெஸ் மாமிகளையும் சாதாரன்ண் பெண்களையும் இந்த பதிவில் சேர்த்து கலக்கிட்டீங்க ரிஷபன்
Post a Comment