March 19, 2010

தேஜஸ்


அனேகமாக எல்லோரும்

இடித்து முட்டி

தள்ளிக் கொண்டிருந்தார்கள்..

எவரிடமும் பொறுமை இல்லை..

'வரிசையில் போகலாமே' என்று

இரைச்சலுடன்

இன்னும் சிலர்

முன்னேற பார்த்தார்கள்..

சிலர் கரங்களில்

சிபார்சுக் கடிதங்கள் கூட !

உடல் உபாதைகள் சொல்லி

சிலர் வழி கேட்டார்கள்..

நெரிசலான அந்த பாதையில்

நசுக்குண்டு நின்றாலும்

யாரும் விட்டு தருவதாய் இல்லை..

பார்த்த உடன் என்ன கேட்பது என்று

மனசுக்குள் பிரார்த்தனை மூட்டைகள் ..

வியர்த்துக் கொட்டியதில்

குளிர் வசதிக்கு உள்ளூர

மனசின் ஏக்கம்..

குழந்தைகள் உள்ளே செல்ல மறுத்து

அடம் பிடித்தார்கள்..

'சனியனே .. இங்கேயே நில்லு பத்திரமா'

விட்டு செல்லும்போது

தாடி வைத்த அந்தப் பெரியவர் சொன்னார்..

'கவலைப் படாம போங்க .. நான் பார்த்துக்கறேன்..'

குழந்தைகள் கேட்ட எல்லாமும்

விரல் சொடுக்கில்

வரவழைத்துக் கொடுத்தவரின்

கண்களில் காருண்யம்..

இருட்டில் தீப ஒளியில் பார்த்துத்

திரும்பியவர்களிடம் முனகல்..

'விக்கிரகத்துல பழைய தேஜஸ் இல்லியே '






21 comments:

Madumitha said...

படிக்கும் போதே
'Q'வில் நின்ற
ஞாபகங்களைக்
கிளறியது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சினிமாக் கொட்டகை என்று தான் கற்பனை பண்ணி வைத்திருந்தேன்.இப்படியா ஏமாற்றுவது?

கிருஷ்ணா said...

தேஜஸான வரிகள்

Unknown said...

varisaiyil ninru padithen


nallayirukku boss

பத்மா said...

எப்போது புரியும்?
எனக்கு புரிகிறதா நானே கேட்டுக்கொள்கிறேன் .கேட்க வைத்ததுக்கு நன்றி

வசந்தமுல்லை said...

'Q'வில் நின்ற அனுபவம் நிறைய போலிருக்கு ! அதனால்தான் கடவுளின் தேஜஸ் குறைவாகத் தெரிந்ததோ!!!!

vasu balaji said...

ஆஹா. அபாரம்

Chitra said...

ரிஷபன் சார், மீண்டும் மீண்டும் அசத்துறீங்க....

மதுரை சரவணன் said...

q make u so. but its real all worship like that. good poem

அம்பிகா said...

நல்ல கவிதை.
நல்ல கற்பனை.

DREAMER said...

அழகிய வார்த்தைகளின் வரிசையை, கவிதைகளாக நீங்கள் தொகுத்த விதமும் அதன் ஞாபகங்களும் மிக அழகாக இருக்கிறது.

-
DREAMER

Paleo God said...

அகம் ப்ரம்மாஸ்மி ..:))

Matangi Mawley said...

brilliant! brilliant!

கே. பி. ஜனா... said...

அழகான கவிதை! ஒரு நல்ல சிறு கதையை வாசித்த மாதிரி இருந்தது.....

சுந்தர்ஜி said...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ செல்கின்றார் ஞானத் தங்கமே! தொலைந்த தேஜஸ் தாடிப் பெரியவரிடம். அற்புதம் ரிஷபன்.

Anonymous said...

class kavithai rishaban..

சிநேகிதன் அக்பர் said...

ந‌ச்

முத்து படத்துல ரஜினி சொன்ன வசனம் ஞாபகத்துக்கு வருது.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு ரிஷபன்!

Thenammai Lakshmanan said...

உண்மை ரிஷபன் தெய்வம் கருணையில்தான் இருக்கு எனக்கும் பல கோயில்கள் க்யூக்கள் ஞாபகம் வந்தன

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெரும்பாலான கோவில்களில் கும்பலுக்கு என்றும் குறைவில்லாமல் தான் உள்ளது. க்யூவில் செல்லும் எல்லோருக்குமே இத்தகைய ஒரு விதமான எரிச்சல் உணர்வுகள் தான் ஏற்படுகிறது என்பதும் மறுப்பதற்கு இல்லை. இதப்படித்த எனக்கு, நான் எங்கோ படித்த ஒரு விஷ்யம் ஞாபகம் வருகிறது.

ஒருவர்: இறைவன் எங்கும் வியாபித்திருப்பவர் என்று கூறும் போது, ஏன் கோவிலுக்குச்சென்று வழிபட வேண்டும்?

மற்றொருவர்: காற்று எங்கும் வியாபித்திருக்கும் போது நீ ஏன் FAN & AC போட்டுக்கொள்ள வேண்டும்?

பனித்துளி சங்கர் said...

ஆஹா இது நல்ல யோசனையா இருக்கே