July 06, 2010

ஜெய் பத்ரி

பயணங்கள் போல சுவாரசியமான விஷயம் எதுவும் உண்டா?
வீட்டில் அடைந்து கிடக்கும் நமக்கு வெளியூர் போய் வந்தாலே எத்தனை விதமாய் மனமலர்ச்சி.. அதிலும் மழைப் பிரதேசங்கள் .. தப்பு .. தப்பு மலைப்பிரதேசங்கள் என்றாலே படு குஷி!
4 வருடங்களுக்கு முன் ஹரித்வார் , ரிஷிகேஷ் , பத்ரிநாத் போய் வந்தோம்.
பத்ரியில் முதல் நாள் இரவு தரிசனம் முடித்து கோவில் கதவு பூட்டும் வரை வேடிக்கை பார்த்தோம். பூட்டிய கதவுகளுடன் இதோ பத்ரிநாத் கோவில் .




இப்போது நான் சொல்ல வந்தது மறுநாள் காலை .. ஐந்தரை மணிக்கு கண் விழித்து வெளியே வந்தபோது எதிரே நாராயண பர்வதம் 'தக தகவென ' தங்கமாய் மின்னிய அதிசயம்.


நர , நாராயண பர்வதங்கள் (மலைகள்) இடையில்தான் பத்ரிநாத் இருக்கிறது.

அங்கே தான் வியாசர் குகையும் இருக்கிறது. வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் மகாபாரதம் எழுதினார் . அப்போது அருகில் சரஸ்வதி நதி இரைச்சலோடு ஓட , வியாசர் சொன்னதால் நதி மறைந்து வேறு பக்கம் வெளிப்பட்டு ஓடுகிறது.

இந்தியாவின் முதல் டீகடை என்று பெயர்ப் பலகையுடன் ஒரு டீக்கடை மலை உச்சியில் உண்டு. இந்திய எல்லையில் இருப்பதால்!

எத்தனை விவரங்கள்.. எத்தனை விதமாய் மனிதர்கள். பயணங்கள் எப்போதும் சுகமே ..

பத்ரி யாத்திரை பற்றி நிறைய படித்திருப்பீர்கள்.. என் அனுபவமும் கொஞ்சம் சொல்ல ஆசைப்பட்டு இந்த பதிவு.



7 comments:

பத்மா said...

தங்க மலை அழகு அழகு ...
நிறைய பேர் இதெல்லாம் பார்க்காமல் இருக்கிறோம் ..எழுதுங்கள் பகிருங்கள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆரம்பம் படு ஜோர்!!தொடருங்கள்!!

கமலேஷ் said...

அருமையான பகிர்வு நண்பரே..

கே. பி. ஜனா... said...

//எத்தனை விவரங்கள்.. எத்தனை விதமாய் மனிதர்கள். பயணங்கள் எப்போதும் சுகமே ..// உண்மை!

Chitra said...

படங்களும் பகிர்ந்து கொண்ட விதமும் அருமை... நன்றி.

ஹேமா said...

சுவிஸ் ன் பனி மலைகள் ஒரு அழகென்றால் இந்த மலை பேரழகு.

வெங்கட் நாகராஜ் said...

பத்ரி-கேதார் பயணம் ஒரு பரவசமான அனுபவம். மலைகளுக்கிடையே செல்லும் மகிழ்ச்சியை நினைப்பதே ஒரு பரவசம். நல்லதொரு பகிர்வு. புகைப்படங்களும் அருமை.