September 11, 2010

காற்று

என் முதல் மூச்சுக் காற்று

எப்போது துவங்கியது?

கர்ப்பத்தில் சுவாசித்த நாட்கள்...

வெளிப்பட்டு வெளியுலகின்

பிரபஞ்சக் காற்றின் ஸ்பரிசம்...

வாழ்வின் புரிபடாத

பல ரகசியங்களில்மூச்சுக் காற்றும்..

தெரியாமலே சுவாசிக்கிற என்னை

தெரியாமலே நேசிக்கிற ஜீவனாய்

என் மூச்சுக் காற்று...

எந்த கனமான வஸ்துவையும்

நகர்த்துமுன்

காற்றைப் பற்றியே யோசிக்கிறேன்.

'பார்த்து.. பார்த்து' என்று

மற்றவர்கள் என்னைப் பற்றியே

கவலை கொள்கிறார்கள்.

தவழும் குழந்தையாய்

என்னைச் சுற்றும் காற்று

எந்தப் பக்கம் வருகிறது

என்றே புரிபடாமல்

எல்லாப் பக்கமும் அதன் சிணுங்கல்.

'காற்று என் குழந்தையா'எனில்

அதன் முக அடையாளம் சொல்

என்று கேட்பவர்கள்

ஒரே ஒரு நிமிஷம்

அதன் குரலைக் கேட்கட்டும்.

வசப் படுகிறார்களா.. இல்லையா

என்று பார்த்து விடலாம்!

18 comments:

பத்மா said...

காற்றின் மொழி ஒலியா இசையா ?
காற்றுக்கு ஒரு கவிதை

Madumitha said...

காற்றின் விசிறி நீங்கள் ரிஷபன்.
காதல் போல் காற்றும் நம்மை
வாழவைக்கிறது.

சுந்தர்ஜி said...

அற்புதம் ரிஷபன் இதோ என்னைத் தொட்டுக்கொண்டிருக்கும் காற்றைப் போல உங்கள் கவிதை போல.காற்றே வா!எங்களுக்கு அமுதம் புகட்டு.எங்களை உன்மத்தனாக்கு.கவிதை பெருகட்டும்.

அ.முத்து பிரகாஷ் said...

பாரதியின் வசன கவிதைகளை ஞாபகப்படுத்துகின்றது உங்களின் வரிகள் ... மகிழ்ச்சி தோழர் !

க ரா said...

அற்புதம் ரிஷபன்

கே. பி. ஜனா... said...

தென்றல்!

பத்மநாபன் said...

காற்று நம் உயிர்ப்பின் ஒரே அடையாளம் .கடவுளுக்கு அடுத்து நம்மோடு இருக்கும் இரண்டாம் வளையம்..கேட்கும் ஒலியெல்லாம் காற்றுதானே..காற்றை போற்றிய கவி அருமை.

// பாரதியின் வசன கவிதைகளை ஞாபகப்படுத்துகின்றது உங்களின் வரிகள் // பாரதியின் நினவு நாளில் பாரதியை நினவு படுத்தியது அருமை நியோ தோழர்..

vasu balaji said...

காற்றின் எல்லாப் பரிமாணமும் உணரமுடிகிறது:)

velji said...

/'காற்று என் குழந்தையா'எனில்

அதன் முக அடையாளம் சொல்

என்று கேட்பவர்கள்

ஒரே ஒரு நிமிஷம்

அதன் குரலைக் கேட்கட்டும்.

வசப் படுகிறார்களா.. இல்லையா

என்று பார்த்து விடலாம்!/

அருமை!

ADHI VENKAT said...

காற்றுக்காக ஒரு கவிதை ! அருமை சார்.

ஹேமா said...

எம்மோடு கூடப்பிறந்து எம்மோடு சாவது காற்றுத்தானே !
அற்புதமான சிந்தனைக்கவிதை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காற்று..ம் அருமை

Chitra said...

இதமாய் வருடி செல்லும் கவிதை.

நிலாமகள் said...

கண்ணுக்குத் தெரியாத கனமற்ற இந்தக் காற்று தானே நம்மை எல்லாம் உயிர்ப்பித்து உயர்திணை ஆக்குவது...! சடுதியில் வெளியேறி சவமும் ஆக்குவது...!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தென்றலென சுகமாக வருடிச் சென்றது.

ஜெயந்தி said...

தென்றலாய் கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

காற்று கவிதை தென்றலாய் தழுவிச் சென்றது. சுகமான அனுபவம்.

R. Gopi said...

Gmail has priority inbox for mails. If they ever introduce priority dashboard, I will make sure your posts always go there.

Very well written.

I am cursing myself for not visiting this blog so far. But as per the age old saying, "better late than never"