September 15, 2010

ராதே ஷ்யாம்


கோகுலாஷ்டமி கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணன் பிறந்த நாள்.

ராதாஷ்டமி தெரியுமா? இன்று தான் ராதையின் பிறந்த நாள். கண்ணன் பிறந்த பதினைந்தாம் நாள் வரும் அஷ்டமி ராதாஷ்டமி.

பிரேமைக்கு மறு உருவமே ராதைதான். அவளுக்கு கண்ணன் கூட வேண்டாம். அவன் மீதான காதல் போதும்.

பிருந்தாவனத்தை விட்டு கண்ணன் வெளியேறிப் போனதும் மீண்டும் ராதையைப் பார்த்ததாகத் தெரியவில்லை. இருவரும் சந்திக்கவில்லை மறுபடி.

ஆனால் ராதைக்கு எல்லாமே கண்ணன்தான். அவன் மீதான நேசம் போதும்.

பிருந்தாவன் அருமையான ஊர். பார்க்கத்திகட்டாத கோவில்களும் மக்களும்.

எதற்கெடுத்தாலும் ராதே ராதே தான். 'நகர்ந்து கொள் ' என்று சொல்லக் கூட 'ராதே ராதே ' தான்.

மனிதருக்குள் அன்பு .. எதுவும் எதிர்பார்க்காத அன்பு பிரவகித்து விட்டால்.. ராதையைப் போல நேசிக்க தெரிந்து விட்டால்.. இன்றைய பல சிக்கல்களுக்கு சுலபமாய் தீர்வு கிடைத்து விடும்.

நாம் பல நல்ல விஷயங்களை தொலைத்து விட்டு சடங்குகளை மட்டும் வைத்துக் கொண்டதால் தான் இன்று கேலியும் விமர்சனங்களும் வரும்போது பதில் தரத் தெரியாமல் அவநம்பிக்கையில் ஆட்பட்டு விடுகிறோம்.

பிரியம் .. அதுவே ராதை தத்துவம்!

ராதே ஷ்யாம் !

27 comments:

எல் கே said...

unmai nalla pathivu

Chitra said...

நாம் பல நல்ல விஷயங்களை தொலைத்து விட்டு சடங்குகளை மட்டும் வைத்துக் கொண்டதால் தான் இன்று கேலியும் விமர்சனங்களும் வரும்போது பதில் தரத் தெரியாமல் அவநம்பிக்கையில் ஆட்பட்டு விடுகிறோம்.


.......எவ்வளவு பெரிய விஷயத்தை - எவ்வளவு சாதரணமாக சொல்லி இருக்கிறீர்கள்!

தனி காட்டு ராஜா said...

தலைவா ...நான் பக்கம் பக்கமா எழுதன விசயத்த..இப்படி சிம்பிளா...அழகா சொல்லிட்டிங்களே...
http://thanikaatturaja.blogspot.com/2010/09/blog-post_14.html

சுந்தர்ஜி said...

அருமை ரிஷபன்.

ஒரு விஷயம் உள்ளுணர்வால் நேசிக்கப்படுவதற்கு விளக்கங்கள் எதிர்பார்ப்பதும், விளக்கங்களையும் நிரூபணங்களையும் விலக்கி முழு நம்பிக்கையை ஒன்றின் மேல் செலுத்துவதும் இரு துருவங்கள்.
நம்பிக்கை அற்புதங்களை நிகழச் செய்கிறது.

என்ன மருந்து தருகிறார் என்றே தெரியாது மருத்துவரையும், எதை விற்கிறார் என்றே தெரியாத தங்கநகை வியாபாரியையும் நம்புவதில் பத்து சதம் நேர்மறையான விஷயங்களில் நம்பினால் போதும்.

நாடு உருப்பட்டுவிடும்.நாமும் உருப்படுவோம்.

தனி காட்டு ராஜா said...

//இன்று தான் ராதையின் பிறந்த நாள்.//

இந்த information உங்க மூலம் தெரிஞ்சு கிட்டேன் ...
tank u .........

settaikkaran said...

எனது மேலாளர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்: ராதா கே பினா ஷாம் அதூரா!" பொருள் கேட்டேன்: ராதையின்றி கண்ணன் முழுமையற்றவன் - என்று சொன்னார்.

நல்ல பகிர்வு!

vasu balaji said...

ராதே ஷ்யாம:).

ஹேமா said...

புதுமையான ஒரு செய்தி.
ப்ரியம் என்றால் ராதையா !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நாமும் அப்படியே சொல்லப் பழகுவோமா!!

ராதே ஷ்யாமா..
ராதே க்ருஷ்ணா...
எவ்வளவு மதுரமான வார்த்தைகள்!!
சொல்லும் போதே மனம் குதூகலம்
கொள்கிறதே இப்படி..!!!
ராதே ஷ்யாமா..
ராதே க்ருஷ்ணா...

மோகன்ஜி said...

ராதை அர்ப்பணிப்பின் இலக்கணம். எதிர்பார்ப்பில்லாத தூய அன்பின் உறைவிடம் ராதை. தானே காதலாகி, தானே கண்ணனாகி கரைந்து போனவள்.மதுர பாவத்தின் உதாரணம். நல்லதொரு பதிவிட்டதற்கு என் வாழ்த்துக்களும் நன்றியும் ரிஷபன்.

velji said...

சொன்னவிதம்....அருமை!

velji said...

சொன்னவிதம்....அருமை!

மதுரை சரவணன் said...

புதுமையான விசயம் . பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

ராதைக்கு கண்ணனை விட கண்ணன் மீது காதலை போற்றினாள்.அற்புதமான பதம்.

அவளுக்கு தெரியும்... காயிலே புளிப்பதும், கனியில் இனிப்பதும், நோயில் படுப்பதும், நோன்பில் உயிர்ப்பதும் , காற்றில் குளிர்வதும் , கனலில் சுடுவதும் கண்ணனின்றி வேறில்லை என்பது அவளையும் அறியாமல் அறிந்ததாலே இயல்பான பிரேமை .........

கிருஷ்ணத்தின் மகிமை ராதையின் பிரேமையில் தான் உள்ளது...அந்த நம்பிக்கை இருந்தால் ஒவ்வோருவரும் கிருஷ்ணம் உணரலாம்.

சரியான நினைவூட்டல் பதிவு....

Madumitha said...

மிகவும் அற்புதமான விஷயம்.
எதிர்பார்ப்பில்லாத நேசம்
மிகவும் அற்புதமானது.
கண்ணன் கொடுத்துவைத்தவன்.

சின்னபாரதி said...

நண்பரே ! ராதைக்கு கண்ணன் வேண்டாம் கண்ணன் மீதான காதல் போதும் .

கண்ணனுக்கு ராதை வேண்டாம் அவளின் நேசம் போதும் .

வேண்டாமென சொல்லி வேண்டுமென கேட்கும் உயர்காதலை நல்லபதிவின் மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி .

ADHI VENKAT said...

மிகவும் அற்புதமாக இருக்கிறது உங்கள் பதிவு. ராஜஸ்தானில் எல்லோரும் எதற்கெடுத்தாலும் “ராம் ராம்” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

RAADHE KRISHNAA !
RAADHE SHYAAM !

Anonymous said...

ரிஷபன் சார் அருமையானபதிவு .

அன்பரசன் said...

அருமையான பதிவு சார்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///மனிதருக்குள் அன்பு .. எதுவும் எதிர்பார்க்காத அன்பு பிரவகித்து விட்டால்.. ராதையைப் போல நேசிக்க தெரிந்து விட்டால்.. இன்றைய பல சிக்கல்களுக்கு சுலபமாய் தீர்வு கிடைத்து விடும்////

ரொம்ப கரெக்ட் ஆ சொன்னிங்க..
வாவ்..

ராதாஷ்டமி.. உண்மையில் இது புது தகவல்...
பகிர்வுக்கு நன்றி..

RVS said...

சூப்பர் ரிஷபன். நல்லா இருக்கு.. கண்ணன் ராதையின் காதல் ஸ்ருங்காரத்தின் எல்லை.ராதையின் நெஞ்சமே.. கண்ணனுக்கு தஞ்சமே... என்று ஆரம்பிக்கும் பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Thenammai Lakshmanan said...

பிரியம் .. அதுவே ராதை தத்துவம்!

அருமை ரிஷபன்.. எனக்குப் பிடித்த பதிவு இது

Anisha Yunus said...
This comment has been removed by the author.
Anisha Yunus said...

நல்ல பதிவு. அந்த ஊர் மக்களின் படங்களையும் இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். NCCயில் இருந்த போது ஒரு தடவை மதுரா அழைத்து சென்றிருந்தார்கள். அங்கேயும் இதே போண்ர மனிதர்கள், அமைதி, வயல்வெளிகளிலும் தெரிக்கும் குதூகலம்...மீண்டும் கண் முன் வருகின்றது. ஹ்ம்ம்...அமெரிக்காவின் வாழ்க்கைக்காக இப்படி தொலைத்தது, தொலைக்கப்போவது எத்தனை எத்தனையோ..

வசந்தமுல்லை said...

அருமை !!! மதுராவை நேரில் பார்த்தால்கூட இப்படி தெரியாது!!!!!!!!!!!!!!!

R. Gopi said...

super boss.