November 23, 2010

பின் தொடர..


மழை பெய்து ஓய்ந்து விட்டது.
நீர் வடிந்தும் வடியாமலும் ..
செருப்பைத் தவிர்த்து
பூமியில் பதிந்த கால்கள் ..
ஸ்பரிசம் சொல்கிறது
'பூமிக்கானவன்' என்று.
நனைந்த தரை உலர்ந்து
சாலையின் முகம் புலப்படுமுன்
முடிந்தவரை நடந்து விட வேண்டும்..
ஜில்லிப்பு மனசுக்குள் ஏறி
இதயம் தொட்டு விடும் வரை ..
இன்னொரு மழை
வரும் நாள் எதுவென
தெரியாதபோது ..
இன்றைய தினம்
கை நழுவிப் போகாமல்!

17 comments:

VELU.G said...

//
உண்மை பூமியில் பதிந்த கால்களின் இன்னொரு மழை வரும் நாள் எதுவென தெரியாதபோது ..இன்றைய தினம் கை நழுவிப் போகாமல்

//

உண்மை இப்போதே அனுபவித்து விட வேண்டியது தான்

அழகான கவிதை

கே. பி. ஜனா... said...

சற்று முன் தான் மழையில் நனைந்த மண் தரையில் நடந்த போது பாதங்களின் ஒவ்வொரு அணுவிலும் மண் படும் சிலிர்ப்பை உணர்ந்து, முன்பெல்லாம் எப்போதும் இப்படித்தானே வெறும் காலோடு நடப்போம், இப்ப அதெல்லாம் போச்சே என்று நினைத்தேன் . உங்கள் கவிதையை அடுத்த அரை மணியில் படிக்க நேர்ந்து... அடடா! மறுபடியும் அதே சிலிர்ப்பு!

ராமலக்ஷ்மி said...

//நனைந்த தரை உலர்ந்து
சாலையின் முகம் புலப்படுமுன்
முடிந்தவரை நடந்து விட வேண்டும்..//

ஆகா.

இராமசாமி கண்ணண் said...

பிரமாதம் ரிஷபன் :)

சுந்தர்ஜி said...

சீஸனுக்கேத்த கவிதையை எழுதி ஜமாய்ச்சுட்டேள் ரிஷபன்.ஏற்கெனவே காலெல்லாம் ஜில்லுங்றது.

VAI. GOPALAKRISHNAN said...

கவிதையைப் படிக்கும்போதே மழை நீர் கால்களில் பட்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி, அதன் ஜில்லிப்பு மனசுக்குள் ஏறி இதயம் தொட்டு மனம் குளிர வைத்தது.

வெங்கட் நாகராஜ் said...

மழை பெய்து ஒரு மண் வாசம் வருமே, அந்த மண் வாசனையே நுகர்ந்தபடியே ஒரு நடை நடந்தது போல இருந்தது உங்கள் கவிதையை படித்தவுடன். நல்ல கவிதை.

மோகன்ஜி said...

ரிஷபன் நலமா?
/சாலையின் முகம் புலப்படுமுன்/
கவிதை வரி ஊஞ்சலாடுகிறது!

நிலா மகள் said...

சுத்தம் சுகாதாரம் என்றெல்லாம் பார்த்துப் பார்த்து வெறுங்காலில் நடக்கும் சுகமெல்லாம் பறிகொடுத்து விட்டோமோ... கதவு திறந்து ஓடி நடந்து பார்க்கும் விழைவைத் தூண்டியது கவிதை.

ஹேமா said...

ஜில்லென்று ஒரு கவிதை காலடித் தடத்தோடு !

Balaji saravana said...

மழை ஈரம் மனதுக்குள் உங்கள் கவிதையால்.. :)

Chitra said...

இன்னொரு மழை
வரும் நாள் எதுவென
தெரியாதபோது ..
இன்றைய தினம்
கை நழுவிப் போகாமல்!


....Living for the moment! very nice. :-)

naanhabi said...

கை நழுவிப்போகாமல்...
கால் நனைக்கும் கவிதை ...
முகம் தெரியா மனிதனின் அகத்திணை சொல்லும் அழகு கவிதை...!
-மு.ஹபி

Lakshminarayanan said...

ஓர் அருமையான கவிதை....எழுத்து மயிலிறகாய் மனதை வருடுகிறது....

Harani said...

அன்பின் ரிஷபன்...

மனதை சுகப்படுத்தும் கவிதை. மனம் எங்கெங்கோ சென்றுவிட்டது. ஈரம் பதிந்த..மழையின் ஈரம் பதிந்த விரிப்பில் வெற்றுக்கால்களைப் பரத்தி நடப்பது கவிதையில் சொல்லமுடியாத சுகம். அனுபவித்து சொன்னீர்கள் ஒரு நிலையில். அருமை. பின்வரும் மழையின் ஈரம் பட்ட பரப்புகளில் கால்களைப் பதிக்க ஒவ்வொன்றும் ஒரு சுகமான கவிதை.

1. மனித தடங்களால் ஒற்றையடி பாதை விழுந்துவிட்ட புல்தரை.
2. விளையாட்டுத் திடலின் புல்தரை.
3. லேசாக கற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட படிக்கட்டுக்களில்.
4. களிமண் தரையில்.
5. லேசாக பாசி படர்ந்த தரையில்.
6. சிதிலமடைந்த வீட்டின் முன் வராண்டாவின் வெடிப்புகள் விழுந்த தரையில்.
7. நாலைந்து நாட்கள் தேங்கிக் கிடக்கும் தரையில்.
8. பொடிக்கற்கள் இறைந்து கிடக்கும் தரையில்.
9. வயலின் வரப்புகளில்.
10. மொட்டை மாடித்தரையில்.
11. வீடுகட்ட கொட்டி கரைந்த மணல் தரையில்
12. தெருக்களில் குட்டை குட்டை யாய்த் தேங்கிக்கிடக்கும் தரையில்.

இப்படி மழையின் ஈரத்தை அனுபவிக்கலாம். அத்தனையும் சுகம்.
கிராமத்தில் ஒரு பழமொழ உண்டு. வானத்திலே பறந்தாலும் மண்ணில்தான் அழுந்தக் கால்களை ஊன்ற முடியும் என்று. நம்முடைய குழந்தைகளுக்கு மண்ணின் மணமும் அணுக்கமும் ஒட்டுதலும் உறவாடுதலும் இல்லாமல் செய்துவிட்ட சமூகத்தின் குற்றவாளிகள் கூட்டத்தில் நாமும்தாம் நிற்கிறோம் ரிஷபன். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உச்சி மீது
வான் இடிந்து
(மழையாய்)
வீழுகின்ற போதிலும்..
(மழை மீதான மையலுக்கு)
மிச்சமில்லை..
மிச்சமில்லை...
மிச்சமென்பதில்லையே!!

கோவை2தில்லி said...

ஜில்லென்ற மழையில் நனைந்தது போன்ற உணர்வு.