பொருத்திப் பார்த்ததில்
ஒரு முகம் மட்டும்
எனக்கானதாய் ....
அது
இப்போதைய
என் முகமே!
ஒவ்வொருவராய்
நிராகரித்துப் போனதும்
தனித்து விடப் பட்டேன்..
என் நினைவுகளுடன்.
பாதங்களின் மீதான
கவனம்
வெடிக்கும் போதுதான்
நேர்கிறது ...
உணர்வுகளிலும் அப்படியே ..
ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது.
19 comments:
//ஒவ்வொருவராய் நிராகரித்துப் போனதும் தனித்து விடப் பட்டேன்..என் நினைவுகளுடன்.//
மிக உருக்கமான கவிதை ரிஷபன் அந்தப் பிஞ்சின் முகம் போலவே.
இரண்டும் நாலும் சொல்லுக்குறுதி:). ஒன்னும் மூணும் மட்டும் சோடையா என்ன?
பிஞ்சுப் பையனின் புகைப்படமும் கவிதைகளும் அருமை.
நல்ல கவிதை.
//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது//
அருமை.
//அது
இப்போதைய
என் முகமே!//
நல்லா இருக்குங்க.
/ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது./
ஒற்றையடிப் பாதை உருவாகிறது
ஒற்றையாளாய் போகும் போதும்.
பிஞ்சு முகத்தின் படமும், கவிதையும் மனதை உலுக்குவதாக உள்ளது.
ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது.
.....அருமையாக எழுதி இருக்கீங்க....
அருமை..
கவிதை அருமை..
படமும் அருமை.....
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
ரொம்ப நல்லாயிருக்கு ரிஷபன்
அருமையான கவிதை.
ரிஷபன்..
பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்
போதுதான் நேர்கிறது...உணர்வுகளிலும்
அப்படியே..
உணர்வின் அணுக்கள்தோறம் அதிரவைக்கும்
வரிகள். உங்கள் கவிதைகளை அதிகபட்சம் நான் படித்திருந்தாலும் இந்த வரிகள் காலத்திற்கும் என்னை அசைப்பவை. மேற்கண்ட வரிகளைக் கொண்டு மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரையே எழுதலாம் கவிதைகயின் மீதான வேறு பார்வை குறித்து.
வாழ்த்துக்கள்.
//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது//
'சுரீர்' என்றொரு படமும் நறுக்குத் தெறித்த கவிதை வரிகளும் !
பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்
போதுதான் நேர்கிறது...உணர்வுகளிலும்
அப்படியே..
வரிகளில் சிக்கிச் சுழலுகிறது மனசு.
//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது.//
அருமை..மிக உண்மையும் கூட..
கவிதை !
ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது.
அருமை
//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது//
தேர்ந்த கற்பனை.
//////பாதங்களின் மீதான
கவனம்
வெடிக்கும் போதுதான்
நேர்கிறது ...
உணர்வுகளிலும் அப்படியே ../////
அசத்தல் நண்பா வார்த்தைகளில் வலி ஏற்படுத்த எல்லோராலும் இயலாது . உணர்வுகளின் உச்சங்களில் தெறிக்கிறது கவிதையின் வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி
Post a Comment