December 27, 2010

தேவதைகள்



அத்தை பையன், அவன் மனைவி, குழந்தை என்று வீட்டில் ஜேஜே ..

நான் கஷ்டப் பட்டு எழுதி .. (படிக்கிறவர்களும் கஷ்டப்பட்டு ) அச்சில் வந்த கதைக்கு புத்தகம் தபாலில் வரும். இவன் அலட்டிக் கொள்ளாமல் வாசகர் கடிதம், ஆசிரியருக்குக் கேள்வி எழுதி வாரா வாரம் காம்ப்ளிமென்டரி காப்பி வாங்கி விடுவான்.

'கதைக்கு வரைந்த ஓவியம் சூப்பர் '

'எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மேட்டர் கிடைச்சிதோ '

கேள்வியில் 'நீங்க ரசிச்ச புத்தகம்.. ' 'உங்க மனசு கஷ்டப்பட்டது எப்போது' ரகத்தில்.

சொல்லி வைத்த மாதிரி பத்து விமர்சனம், பத்து கேள்விகளை மாற்றி மாற்றி கார்டில் எழுதி வந்த பிரதியை ஜம்பமாய் காட்டிக் கொண்டு போகும் போது திரும்பி வந்த கதையை நான் மறைக்க படாத பாடு படுவேன்.

இதையெல்லாம் பேசி சிரித்தோம். அதே தெருவில் குடியிருந்த ஒரு அழகான பெண்ணும் அவள் தம்பி பற்றியும் பேச்சு திசை மாறியது.

'அவளை கவர் பண்ண அவன் தம்பிக்கு பேட்டிங் சான்ஸ் கொடுப்போம். அவுட் ஆனாக் கூட இல்லைன்னு சொல்லிருவேன். எதிர் வீட்டு கண்ணாடியை அவன் உடைச்சப்ப நாங்க காசு கொடுத்து மாத்தினோம். ரன் எடுக்க நடந்து போவான் .. எதுவுமே சொல்ல மாட்டோம்..'

'அவ வீட்டுக்கு பிரசாதம் கொடுக்க போனேன்.. கொஞ்சம் பந்தாவா இருக்கட்டும் .. வேட்டி கட்டிக்கிட்டு போனா அவ கூலா யாரோ மாமா வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு போயிட்டா' - இது என் பங்கிற்கு நான் சொன்னது.

சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதி விட்டார். எழுதாத நிறைய கதைகள் இன்னமும் இருக்கு.

கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் ஜாலி.. கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம் என்று

சித்திரை வீதிகளில் தடம் பதித்த சம்பவங்களில் ஒரு மீள் பயணம் செய்யும் போது இந்த நாளின் அழுத்தம் எல்லாம் மறந்து என்னமாய் ஒரு உல்லாசம்.



21 comments:

Aathira mullai said...

தேவதைகளின் ஊர்வலம் தொடரப்போகுதா ரிஷபன்..
எல்லாம் நல்லாத்தான் போச்சு.. அப்பரம் எப்படி வடை போச்சு?

ஹ ர ணி said...

நல்லாயிருக்கு ரிஷபன். சொல்லும் விதத்தில் சுவையிருப்பதை படிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் உணர்த்துகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதி விட்டார். எழுதாத நிறைய கதைகள் இன்னமும் இருக்கு. //

இந்த வரிகளைப் படித்ததும், நிறைய விஷயங்கள் சொல்லப்போகிறீர்கள் என்று ஆவலுடன் பார்த்தேன். ஆனால் அடுத்த நாலு வரிகளிலேயே அநியாயமாக முடித்து விட்டீர்களே!

இருப்பினும் சொன்ன விஷயங்கள் யாவும் சுவையாகவே இருந்தன.

vasu balaji said...

அதென்ன தனியா மீள்பயணம்:)

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா ஃபிகரைப் பார்க்க வேஷ்டியிலா.. உங்களுக்கான அட்வைசர் சரியில்லை.. ரிஷபன்..:))

ஹேமா said...

மீட்டெடுக்கும் நினைவுகளா !

R. Gopi said...

சூப்பர்

Anonymous said...

:)) Nice

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, இன்னுமோர் ஸ்ரீரங்கத்து தேவதைகள்! நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் ரிஷபன் சார். சிறிய பதிவாய் இருப்பினும் எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விதமாய் இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள், நாங்களும் தொடர்கிறோம் தேவதைகளை :))))

ADHI VENKAT said...

சித்திரை வீதிகளில் தடம் பதித்த சம்பவங்களை தொடருங்கள் சார். நாங்களும் வருகிறோம்.

Unknown said...

//எதிர் வீட்டு கண்ணாடியை அவன் உடைச்சப்ப நாங்க காசு கொடுத்து மாத்தினோம். ரன் எடுக்க நடந்து போவான் .. எதுவுமே சொல்ல மாட்டோம்.//
:-)) super!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

'அவளை கவர் பண்ண அவன் தம்பிக்கு பேட்டிங் சான்ஸ் கொடுப்போம். அவுட் ஆனாக் கூட இல்லைன்னு சொல்லிருவேன். எதிர் வீட்டு கண்ணாடியை அவன் உடைச்சப்ப நாங்க காசு கொடுத்து மாத்தினோம். ரன் எடுக்க நடந்து போவான் .. எதுவுமே சொல்ல மாட்டோம்..'

இத நீங்களும்

'அவ வீட்டுக்கு பிரசாதம் கொடுக்க போனேன்.. கொஞ்சம் பந்தாவா இருக்கட்டும் .. வேட்டி கட்டிக்கிட்டு போனா அவ கூலா யாரோ மாமா வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு போயிட்டா' -

இத ஒங்க அத்தை பையனும் சொல்லியிருப்பீங்களோன்னு ஒரு சந்தேகம் ரிஷபன்.

VELU.G said...

சுவாரஸ்யமாய் இருந்தது ரிஷபன்

பத்மநாபன் said...

தேவதைகள் என்றதும் வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஞாபகம் வந்தது..அதை பின்பகுதியில் பார்த்தவுடன் ஒரு ஆச்சர்யம்...

பதின்மத்தில் தேவதைகள் புதிராகவே இருக்கும் ...தெரிஞ்சே மாமா என்று சொல்லிவிட்டு தள்ளிப்போய் ஒரு வெட்டு பார்வை விட்டிருக்குமே கவனிக்கவில்லையா...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மாமான்னு சொன்னதும் தான் மனசு சந்தோஷமாச்சு!
இப்படித் தான் என்னை ஒரு பொண்ணு அங்க்கிள்ன்னுது. சுற்று,முற்றும் பார்த்தேன் ஒருத்தரும் இல்ல..SINGLE ஆ இருக்கும் போது தான் UNCLE ன்னு சொன்னது, நல்ல வேளை!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சம்பவங்கள் நிகழும்போது ஏற்படுவதை விட நினைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் சுகமே தனிதான்.

சிவகுமாரன் said...

கடந்து போன வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.
விட்டுப் போன தேவதைகள் எப்ப வருவாங்க. காட்டுனீங்கன்னா கன்னத்தில போட்டுக்குவோம்.

சிவகுமாரன் said...

கடந்து போன வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.
விட்டுப் போன தேவதைகள் எப்ப வருவாங்க. காட்டுனீங்கன்னா கன்னத்தில போட்டுக்குவோம்.

கே. பி. ஜனா... said...

அழகாயிருக்கு, நினைவுகளில் தானே வாழ்கிறோம்? தொடருங்கள்!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சித்திரை வீதியா அது.... எம் நித்திரை தொலைந்த வீதி..... மனதில் முத்திரை பதித்த வீதி... .. மீண்டு(ம்) வருமோ அந்த இனிய நாட்கள்?

sundar07 said...

sriranagam kathaigal good write more of this i will also share the ideas
thanks
sundararam