February 16, 2011

என் டி ஆர் பார்க்

போகும் போதே ரயிலில் ஒரு சுட்டிக் குழந்தை .. சுந்தரத் தெலுங்கில் மழலை பேசி எங்களைக் கவர்ந்து விட்டது.
என்ன கொடுமை என்றால் எங்களுக்கு அந்தக் குழந்தை பேசியது புரியவில்லை. நாங்கள் பேசிய தமிழ் அதற்குப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் வந்து எங்களை சீண்டிக் கொண்டிருந்தது. பூமிகா சின்ன வயசில் இப்படித்தான் இருந்திருப்பார் என்று சினிமா ஞானம்இல்லாத நண்பரிடம் சொல்ல .. 'உங்க சிஸ்டரா ' என்றார் அப்பாவியாய்.
எல்லா யுனிட்டிலிருந்தும் வந்த அலுவலர்கள் ஏதோ பேய் பிடித்த மாதிரி கணக்கு போட .. நான் மட்டும் எப்போது சுற்றிப் பார்க்க போகலாம் என்று அரித்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் ஹோட்டல் திரும்பியதே இரவு ஏழரைக்கு .
அதனால் எங்கும் போக முடியவில்லை. அலுப்பு வேறு.

மறுநாள் மாலை பிர்லா மந்திர் போனோம் . தமிழகக் கோவில்கள் பார்த்த கண்களுக்கு அது ஏதோ எக்சிபிஷன் பார்த்த பீலிங் .

அதற்கு அடுத்த நாள் ஹுசைன் சாகர்.. லும்பினி பார்க் .. என் டி ஆர் பார்க்..

அந்த ஏரியில் நடுவே மிகப் பெரிய புத்தர் சிலை. ஸ்பீட் போட்டிங் போனோம்.

அதற்கு முன் லைப் ஜாக்கட் கொடுத்து போட்டுக் கொள்ள சொன்னதும் சற்றே மிரண்டேன். சாக்கடை போல தண்ணீர் .. அதில் யார் விழறது?

நிலாவில் இறங்கிய மனிதன் போல மஞ்சள் ஜாக்கட்டுடன் மூன்று பேரும் அடுத்தவரைப் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

உண்மையிலேயே த்ரில்லிங். சும்மா சர்ர்ரென்று போட் கிளம்பி புத்தரை ஒரு சுற்று சுற்றி திரும்பியதும் .. அந்த ஐடியா கொடுத்த நண்பருக்கு கை கொடுத்தேன்..

என் டி ஆர் பார்க்கில் சம்பத் என்கிற சுவாரசியமான இளைஞன் .. தாவரவியல் நிபுணன் ..








பாலைவனப் பகுதிகளில் வளரும் தாவரங்களுக்காக ஒரு பகுதி அவன் மேற்பார்வையில். ஒவ்வொரு செடி.. கொடியை விலாவரியாய் விவரித்து அடுத்த பகுதியான போன்சாய் தொட்டிகளையும் காட்டினான்.

'இது பன்னண்டு வருஷம்.. இது இருபத்தஞ்சு வருஷம் .. ' என்று அவன் சொன்னது எல்லாம் என் இடுப்பு உயரம் கூட இல்லை.

'பிடிச்சிருக்கா ' என்றான். நான் ' கஷ்டமா இருக்கு மனசுக்கு ' என்றேன். அதற்கு பின்..

பூக்கள் .. பூக்கள்.. ஹப்பா.. எத்தனை அழகு..




அப்படியே சுற்றி வந்தோம் அலுப்பு போன இடம் தெரியவில்லை.. நுழை வாசலில் மிகப் பெரிய நந்தி.. 'அட நம்ம ஆளு.. '





நடந்து நடந்து கால் வலி .. இப்பதான் தெரியுது.. கொஞ்சம் ரெஸ்ட் .. ஓக்கேவா .. சார்மினார் பத்தி அடுத்த பதிவுல..

11 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

போன்ஸாய் மரங்களைப் பார்த்தால் எல்லாருக்குமே மனது வலிக்கும். அதைக் காட்சிப் பொருளாய் ஏன் தான் காட்டுகிறார்களோ?
இடுகை அருமை...உங்களுடன் பயணித்தது போன்ற உணர்வில்....

கே. பி. ஜனா... said...

//பூமிகா சின்ன வயசில் இப்படித்தான் இருந்திருப்பார் என்று சினிமா ஞானம்இல்லாத நண்பரிடம் சொல்ல .. 'உங்க சிஸ்டரா ' என்றார் அப்பாவியாய். //
அப்பாவியா புத்திசாலியா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நுழை வாசலில் மிகப் பெரிய நந்தி.. 'அட நம்ம ஆளு.. '//

நல்லதொரு நகைச்சுவை.

//சார்மினார் பத்தி அடுத்த பதிவுல..//

சிகரெட் பற்றியா?

[நானும் அவர் போலவே அப்பாவியாய்]

ஹேமா said...

போன்சாய் மரங்களைப் பார்த்தால் எனக்கும் பாவமா இருக்கும்.பூக்களோ பூக்கள் அழகுப் பூக்கள் !

Chitra said...

பயணக் கட்டுரையிலும், உங்கள் எழுத்து நடை முத்திரை. சூப்பர்! நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, தொடருங்கள்! :-)

வெங்கட் நாகராஜ் said...

//மறுநாள் மாலை பிர்லா மந்திர் போனோம் . தமிழகக் கோவில்கள் பார்த்த கண்களுக்கு அது ஏதோ எக்சிபிஷன் பார்த்த பீலிங் .//

பெரும்பாலான வட இந்திய கோவில்களிலும் இப்படித்தான். கிருஷ்ண ஜன்மபூமியான மதுரா சென்றாலும் ஏதோ மனதிற்கு கோவில் ஒப்புதல் இல்லை! கண்காட்சி பார்த்துவிட்டு வந்து விடுவேன் :)

Pranavam Ravikumar said...

மிகவும் அருமை.. !

ஸ்வர்ணரேக்கா said...

ஐயோ பாவம் போன்சாய் மரங்கள்.... கொடுமைபடுத்தறாங்க....

ADHI VENKAT said...

சார்மினார்க்கு செல்ல தயாராயிட்டோம் சார் !

மோகன்ஜி said...

ரிஷபன்! எங்க ஹைதராபாதுக்கு வந்திருக்கீங்க.. நாம் சந்தித்திருக்கலாம். இன்னும் இங்கே தான் இருக்கிறீர்களா?

டக்கால்டி said...

அடுத்த பதிவுக்கு ஐ ஆம் வெயிட்டிங்...குயிக்கு யா