February 18, 2011

சார்மினார் சலோ

முன்பெல்லாம் ஊர் போவதென்றால் உற்சாகமாய் இருக்கும். இப்போது சரியான துணை கிடைத்தால் தான் சுவாரசியம் என்றாகி விட்டது.
தனியாக ஊர் சுற்றி இருக்கிறேன். பேனா நட்பைத் தேடி. அத்தனை நாட்கள் கடிதங்கள் மூலம் பழகிய நண்பர்களை நேரில் பார்க்கும்போது விட்டுப் பிரியவே மனசு வராது.
இப்போது கடிதம் இல்லாத .. அலைபேசியில் ஒப்புக்கு பேசும் மன நிலையில் (ஏதேனும் ஒரு அலுவலை கையில் வைத்துக் கொண்டு சட்டென்று பேசி முடித்து விடும் மனநிலையை சொன்னேன் ) இப்படி அலுவலக நிமித்தம் நண்பர்களுடன் போவதில் பழைய உற்சாகம் திரும்பி விட்டது.
நாம் சோர்ந்தால் கூட அவர்கள் நம்மை பிடித்து இழுத்து போகும் போது என்னமாய் ஒரு துள்ளல் மனசுக்குள் !
சுகுமார், மகேஸ்வரன் இருவரும் என்னுடன் வந்திருந்தார்கள். அவர்களுடன் தான் இந்தப் பயணம்.
மூன்று நாட்கள் அலுவலக வேலை முடிந்து நாலாம் நாள் மாலை ரெயிலை பிடிக்க வேண்டும். காலையில் சார்மினார் போனோம்.
அதற்கு முன் வரை சார்மினாரை ஏதோ தாஜ்மகால் ரேஞ்சுக்கு நினைத்திருந்தேன். வெறும் நான்கு பெரிய தூண்கள் போல ஒரு கட்டிடம்! அவ்வளவுதான். அதுவும் படு அழுக்கு. ஒருத்தர் மட்டும் மேலேறி செல்லும் அளவு மாடிப்படி போல படிக்கட்டுகள். மேலே போனால் வட்டமாய் சுற்றி வரும் அளவுக்கு வராண்டா ..

சார்மினாரின் உட் புறத் தோற்றம் ..




மேலே நின்று பக்கவாட்டில் சார்மினார் தோற்றம்.




சார்மினார் உள்ளே நின்று கீழே சாலையை படம் பிடித்த போது..




சார்மினாருக்கு எதிரே அழகான மசூதி !




பின்னர் சாலர்ஜங் மியூசியம் போனோம். மஸ்லின் துணி அணிந்த பெண் சிலை கொள்ளை அழகு. தலையை சுற்றி முக்காடு போட்ட தோற்றம். அந்த சிலை வடித்த சிற்பி நிஜமாகவே ரசனைக் காரர். எப்படித்தான் சாத்தியமாயிற்றோ. அந்த பெண்.. அவளுடலைத் தழுவி மஸ்லின் துணி.. எல்லாம் அதே சிலையில். சொன்னால் புரியாது. பார்த்து ரசிக்க வேண்டும் அந்த அழகை.
இன்னொரு சிலை முன் புறம் ஒரு வயதான வீரர்.. பின்புறம் அதே சிலையில் அழகான பெண்.. பின் பக்கம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். பெண்ணின் உருவம் அதில் தெரிகிறது கிபி ஒன்று .. இரண்டாம் நூற்றாண்டு சிற்பங்கள் எல்லாம் காட்சியில். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.. பழைய காலக் கடிகாரம் ஒன்று.. பனிரண்டு மணிக்கு அதனுள் இருந்து ஒருவர் வெளியே வந்து மணி அடிக்கும் காட்சிக்கு அந்த ஹால் முழுவதும் கூட்டம் காத்திருந்தது.. வேடிக்கை பார்க்க. இன்று வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அதிசயம்.
பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..
எங்களை நன்றாக வைத்திருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு ஸ்பெஷல் நன்றி!



22 comments:

சக்தி கல்வி மையம் said...

ஒரு சுற்றுலா போனமாதிரியே இருக்கு... நன்றி...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்னை மிகவும் கவர்ந்த இரு ஹைதராபாத் ஸ்தலங்கள் கோல்கொண்டா கோட்டையும் ஸாலார்ஜங் அருங்காட்சியகமும்தான்.

காலம் அங்கேதான் உறைந்திருப்பதைக் காண முடிந்தது.

கோல்கொண்டா கோட்டைக்குப் போனீர்களா ரிஷபன்?

ரிஷபன் said...

போக முடியவில்லை.. சுந்தர்ஜி. அதனால் என்ன அடுத்த முறை ஹைதராபாத் போனால் போச்சு ..

sridhar said...

பயணத்தை விட பயணக் கட்டுரை அருமையாக உள்ளது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பயணக் கட்டுரை. உங்கள் மூலம் நானும் ஸாலார்ஜங் போனது போல உணர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

Chitra said...

பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..


....... well-said! :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

சார்,

(1)கோல்கொண்டா கோட்டைக்கு இரவு 7 மணிக்குள் போய் டிக்கெட் வாங்கி 7 மணி முதல் 7.30 வரை காட்டப்படும் ஒலி, ஒளி கண்காட்சியைக் காணத்தவறி விட்டீர்கள். தாங்கள் அதைப்பற்றியே 10 பதிவுகள் இட முடியும்.

(2) அது போல ராமோஜி ராவ் ஃபிலிம் ஸிடிக்குப் போகாமல் வந்து விட்டீர்களே! காலை 8 மணிக்குள் உள்ளே ரூபாய் 1000 கொடுத்து நுழைந்து விட்டால் போதும். இரவு 8 மணி ஆனாலும் வெளியே வரவே பிடிக்காது. அவ்வளவு சுவையான விஷயங்கள் அதற்குள். உலகமே அதற்குள் அடக்கம். சினிமா உலகம் எவ்வளவு மாயை ஆனது என்பதை அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து கொள்ளலாம். தங்களால் ஒரு 100 பதிவுகள் தர முடியும் இதைப்பற்றி.

அடுத்த முறை கட்டாயம் இந்த இரண்டு இடங்களையும் மிஸ் பண்ணாதீங்க, சார், ப்ளீஸ்.

நீங்கள் கூறி வரும் இடங்களைப் பார்த்த மகிழ்ச்சி என் நினைவுகளில் வந்து போகிறது.

2008 ஜூலையில் என்னை ஒரு 15 நாட்கள் தங்கி டிரைனிங் எடுத்துவர அனுமதித்தது, நம் நிர்வாகம்.

நமது நிர்வாகத்திற்கும், அதை நினைவு கூறும் தங்களின் இந்தப் பதிவுக்கும் நன்றி.

மோகன்ஜி said...

போங்க ரிஷபன்! எங்கூருக்கு வந்துட்டு என்னை சந்திக்காம போயிட்டீங்க. உங்களோடு டூ.காய்!

அன்புடன் நான் said...

என்னங்க ரிஷபன்.... எப்படியிருக்கிங்க.... நலந்தானே...

உங்க பகிர்வு சிறப்பா இருக்கு....

// சார்மினாரை ஏதோ தாஜ்மகால் ரேஞ்சுக்கு நினைத்திருந்தேன். வெறும் நான்கு பெரிய தூண்கள் போல ஒரு கட்டிடம்! அவ்வளவுதான். அதுவும் படு அழுக்கு.//

ஆனா அதுவும் ஒரு பழைய கலை வடிவம் தானே... இனி அப்படியெல்லாம் கட்டுவார்களா தெரியாதுங்க

நன்றி.

RVS said...

கையைப் பிடிச்சு கூட்டிகிட்டு போனா மாதிரி இருக்கு. நன்றி ;-)

vasu balaji said...

ஒரு ஆறு வருஷம் வருஷத்துக்கு ரெண்டு மூணு வாட்டி போய்ட்டு வருவேன். சார்மினார் வெளிய இருந்து பார்த்ததோட சரி:(.

Anonymous said...

//முன்பெல்லாம் ஊர் போவதென்றால் உற்சாகமாய் இருக்கும். இப்போது சரியான துணை கிடைத்தால் தான் சுவாரசியம் என்றாகி விட்டது.
தனியாக ஊர் சுற்றி இருக்கிறேன். பேனா நட்பைத் தேடி. அத்தனை நாட்கள் கடிதங்கள் மூலம் பழகிய நண்பர்களை நேரில் பார்க்கும்போது விட்டுப் பிரியவே மனசு வராது.
இப்போது கடிதம் இல்லாத .. அலைபேசியில் ஒப்புக்கு பேசும் மன நிலையில் (ஏதேனும் ஒரு அலுவலை கையில் வைத்துக் கொண்டு சட்டென்று பேசி முடித்து விடும் மனநிலையை சொன்னேன் ) //

படங்களோடு பதிவில் சொன்ன நிஜம் ரொம்ப பிடிச்சிருக்கு ரிஷபன்..

ஷர்புதீன் said...

i spend 6 months in hyderabad and office near charminaar!

மனோ சாமிநாதன் said...

"பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது.."
அருமையான, யதார்த்தமான‌ வரிகள்!
பயண‌ அனுபவங்களும் புகைப்படங்களும் மிக அழகு!!

கோமதி அரசு said...

//பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..//

மிகவும் உண்மை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பார்க்க ..பார்க்க அலுக்காத நகரம் ஹைதை! படிக்க படிக்க திகட்டாத எழுத்து ரிஷபன்!

சிவகுமாரன் said...

\\பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன///

உண்மை ரிசபன் சார். நீங்கள் கொடுத்து வைத்தவர். நான் பயணப் பிரியன். என் வேலை இடைஞ்சலாய் இருக்கிறது. எல்லோரும் வயதானால் கவலைப்படுவார்கள். எனக்கு எப்போது ரிட்டையர்டு ஆவோம் என்றிருக்கிறது. எல்லாவாற்றையும் உதறிப் போட்டுவிட்டு ஊர் சுற்ற வேண்டும்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சார்மினார் பதிவு, நேரில் பார்த்ததைப் போல் எண்ண வைக்கிறது...(ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ‘லப்..டப்’ காதில் கேட்க சார்மினாரைப் பார்த்த அந்த நாள் நினைவு மனதில் வர...)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சார்மினார் பதிவு, நேரில் பார்த்ததைப் போல் எண்ண வைக்கிறது...(ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ‘லப்..டப்’ காதில் கேட்க சார்மினாரைப் பார்த்த அந்த நாள் நினைவு மனதில் வர...)

pudugaithendral said...

அடடா!! ஹைதை வந்திருக்கீங்க. ஒரு மெயில் தட்டியிருந்தா பதிவர் சந்திப்பு நடத்திருக்கலாமே!!

ஆமாம் அந்த குறுகிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கியதில் முழங்கால் வலி வரலை!! (என்னோட அனுபவத்துல கேட்கிறேன்)

மதுரை சரவணன் said...

பயணம் அசத்தல்... பகிர்வுக்கு நன்றீ .வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

பயணக் கட்டுரை சூப்பரா இருக்கு சார் !