February 20, 2011

ஜீவிதம்


பாதைகளைச் செப்பனிட்டு

பல காலம் ஆகிவிட்டது ..

முட்களும் புதர்களுமாய்

வழி நெடுக

போகும் வழி அடைத்து ..

எவரும்

கண்டறிந்து வரக் கூடுமென

எதிர்பார்க்க முடியவில்லை..

இப்போதெல்லாம்

கண்ணில் படுவதைக் கூட

நிராகரித்துச் செல்லும்

மனிதர்களே அதிகம்..

என்றோ ஒரு நாள்

யாரேனும்

வரக் கூடுமென

தனக்குள் முனகலுடன்

புற்றெழுப்பிக்

காத்திருக்கிறது

என் அன்பெனும்

ஜீவிதம்.


(வடக்கு வாசல் - பிரசுரம்)

12 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை ரசிக்குபடி இருந்தது வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. வடக்குவாசலில் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நிலாமகள் said...

//என்றோ ஒரு நாள்
யாரேனும்
வரக் கூடுமென
தனக்குள் முனகலுடன்
புற்றெழுப்பிக்
காத்திருக்கிறது
என் அன்பெனும்
ஜீவிதம்//

தேர்ந்தெடுத்த சொற்களின் வீரியம்... கவிதையின் பொருளழகு சுழன்றாடுகிறது மனசெங்கும்.

மோகன்ஜி said...

சுகமான கவிதானுபவம்... கவிதையில் இழையோடும் சோகத்தையும் மீறி.....

சிவகுமாரன் said...

அன்பெனும் ஜீவிதம் ஆக்கிரமித்துக் கொண்டது மனதை. அருமை ரிஷபன் சார்.
தேர்ந்தெடுத்த சொற்கள் சொக்க வைக்கும் கவிதை

vasu balaji said...

அழகு:)

Madumitha said...

எந்தக் காத்திருத்தலும்
வீண் போவதில்லை ரிஷபன்.
ரசித்தேன்.

ADHI VENKAT said...

கவிதை நன்று சார். வடக்கு வாசலில் வாசித்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் அன்பென்னும் ஜீவிதப் புற்றுக்குள் அடைக்கலம் ஆகியவன்
எ(அ)ன்றோ நான் !

Thenammai Lakshmanan said...

அட்டகாசம் அருமை ரிஷபன்..

Pranavam Ravikumar said...

Very Very Nice..! I enjoyed a bit more than usual read!

Anisha Yunus said...

மனதை தொடும்...அல்ல... சுடும் வரிகள்..!!

ரிஷபன்ண்ணா, நானும் ஒரு கதை எழுதிட்டேன்... படிச்சு எப்படியிருக்குன்னு சொல்லுங்க!!.. திருத்த தேவையானதையும் சொல்லுங்க... :)

http://mydeartamilnadu.blogspot.com/2011/02/blog-post_16.html