August 10, 2011

ஸ்ரீரங்கம்





ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கட்டி முடிக்கப்படாத 1800 ம் வருடத்தில் எப்படி இருந்தது என்று ஒரு படம் பார்த்தேன்.

இன்று அங்கே சும்மா ஒரு நிமிடம் நிற்க முடியாது..
இடித்துத் தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்..

என் நினைவடுக்குகளில் சோலைகளாய் இருந்த ஸ்ரீரங்கம் இப்போது பன்மாடிக் கட்டிடங்களாய் மாறி அதன் அழகைத் தொலைத்து விட்டது.

ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படாத அப்போது அதன் முன்பே எவ்வளவு விசாலமாய் இடம்..

டைம் மெஷின் இருந்தால் அந்த நாட்களுக்குப் போய்ப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறது..


காவிரியில் நீர் புரண்டோடிய காலம்..

மனிதர்கள் தங்கள் தேவைகளில் அடிமைப்படாமல், இருப்பதில் திருப்தியுற்று எளிமையாய் - நிம்மதியாய் - இருந்த நாட்கள்..

‘நகரு.. நகரு’ என்று யாரும் தள்ளி விடாமல் அரங்கனை ஆசை தீரப் பார்க்கும் வாய்ப்பு..

உண்மையான பசும்பால்.. மறுநாள் நீர் கோர்த்துக் கொள்ளாத, சாப்பிடப் பிடிக்கிற, கெமிக்கல் வாசனை இல்லாத - பழைய சாதம்..

மேக்கப் இல்லாமல் இயற்கையாய், அழகாய் மனிதர்கள்..

நாவினிக்கிற தமிழ்ப் பாசுரங்கள்..


வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீதணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை *
அண்டர்கோன் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை * விலக்கி நாய்க்கு இடுமினீரே

தொண்டரடிப்பொடியாழ்வார் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் !





27 comments:

கதம்ப உணர்வுகள் said...

உங்கள் கட்டுரை படிக்கும்போது நானும் டைம் மெஷின் உதவி இல்லாம ஒரு நொடி அந்த காலத்திற்கே போய் வந்தது போல் இருந்தது எனக்கு ரிஷபன்...

நான் ஸ்ரீரங்கம் கடைசியாக 2002 ல போனது நினைவிருக்கிறது....

தெய்வ தரிசனம் அருமையான துளசி தீர்த்தம் இதெல்லாம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை...

இப்ப கூட்டம் அதிகமாயிடுத்து போல...

அன்பு நன்றிகள் ரிஷபன்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாவற்றிலும் எங்கும் என்றும் எப்போதும் ஒரே மாற்றங்களாகவே உள்ளன.

இருப்பினும் கலர் கலரான மிக உயர்ந்த அந்த இராஜகோபுரம் நல்ல அழகாக கால்த்திற்கேற்ற மேக்-அப்புடன் கம்பீரமாக தோற்றமளிக்கிறது.

அதுபோலவே திருச்சி தாயுமானவர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பு இருந்த உச்சிப்பிள்ளையார் கோயில் மட்டுமே உள்ள ஒரு படம் (திருச்சி கலெக்டர் திரு சவுண்டைய்யா அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில், அவர் கையெழுத்துடன்) என்னிடம் உள்ளது. பார்க்கவே அது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

இந்தப் பழங்கதையெல்லாம் புதிய தலைமுறைக்கு தெரியவே வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று தோன்றுகிறது.

நல்லதொரு செய்தியை பதிவிட்டுள்ளீர்கள். பாரட்டுக்கள். நன்றிகள். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘நகரு.. நகரு’ என்று யாரும் தள்ளி விடாமல் அரங்கனை ஆசை தீரப் பார்க்கும் வாய்ப்பு..//

இதைத்தான் இன்று எல்லாப் பிரபலக் கோயிலகளிலும், நாம் மிகப்பெரிய அளவில் இழந்துள்ளோம்.

கண்குளிர இறைவனை நிறுத்தி நிதானமாகப் பார்க்க இயலாமல் பக்தர்களுக்கு ஏற்பட்டுவரும் மிகவும் வேதனையான வருத்தம் தரும் விஷயமாக உள்ளது.

தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும். திரைகள் யாவும் விலக்கப்பட வேண்டும். எந்நேரமும் போய் சுலபமாக தரிஸித்து வர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

ராஜகோபுரம் அழகு என்றாலும், கோபுரம் இல்லாமல் விசாலமான இடத்தில் மொட்டையாக இருக்கும் அந்த இடமும் அழகாய்த்தான் இருக்கிறது.

டைம் மெஷின்.... அது மட்டும் கைவசப்பட்டால் அரங்கனை எத்தனை சுலபமாய் தரிசித்து One to One பேச முடியும்.... ஜருகண்டி சொல்லவில்லை என்றாலும் இருக்கும் கும்பலில் அரங்கனுடன் மனதார அளவளாவ முடிவதில்லை என்ற குறை எனக்கும் உண்டு....

நல்ல படங்கள் மற்றும் சிந்தனைகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

kavirimainthan said...

அருமையான புகைப்படங்கள் -
நல்ல பதிவு.

-வாழ்த்துக்கள் ரிஷபன் !

- காவிரிமைந்தன்

பத்மநாபன் said...

வாத்தியார் தன் ஸ்ரீரங்க கதைகளில் அடிக்கடி அழைத்துச் செல்லும் திருவரங்கத்திற்கு..காலயந்திரத்தில் சென்று அந்த பவித்ரமான ஸ்ரீரங்கம் எப்படியிருக்கும் என அழகான அவதானிப்பு.. படங்கள் மனதை 200 ஆண்டுகளுக்கு பின் கொண்டு செல்கிறது..

தொண்டரடி பொடியாழ்வாரின் அழகிய பாசுரத்தை பகிர்ந்ததற்கு நன்றி....

Anonymous said...

மலரும் நினைவுகள்...

settaikkaran said...

படங்களைப் பார்க்கும்போது, இன்றைய ராஜகோபுரம் கண்முன் விரிகிறது. அதில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக வந்த செய்திகள் உண்மையா, வதந்தியா என்று தெரியாது என்றாலும், ஒரு மிகப்பெரிய கூட்டுமுயற்சியான அக்கோபுரம் தொடர்ந்து திருவரங்கனின் பெருமைக்குச் சான்றாய் இனிவரும் நூற்றாண்டுகளில் நிலைத்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஸ்ரீரங்கம் எப்பவோ பள்ளி நாட்களில் சென்றது... அடுத்த முறை ஊருக்கு வரும் போது போகணும்னு தோணுது உங்க பதிவை படித்ததும்... அந்த பழைய படம் ஆச்சிர்யம் தான்...

vetha (kovaikkavi) said...

நல்ல பதிவு. நன்றிகள்
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Chitra said...

உண்மையான பசும்பால்.. மறுநாள் நீர் கோர்த்துக் கொள்ளாத, சாப்பிடப் பிடிக்கிற, கெமிக்கல் வாசனை இல்லாத - பழைய சாதம்..

மேக்கப் இல்லாமல் இயற்கையாய், அழகாய் மனிதர்கள்..


...அருமை....அழகு..... நினைவு.... :-)

சாந்தி மாரியப்பன் said...

ஏழெட்டு வருசம் முன்னாடி போனப்ப, ஏதோ காரணங்களால வரிசை முன்னேறுவது தடைபட, அரங்கனுக்கு ரெண்டடி அண்மையில் நாங்கள்.. நாங்கள் மட்டுமே. அஞ்சு நிமிஷத்துக்கும் மேலா கண்ணார தரிசனம் கண்டோம்.

இராஜராஜேஸ்வரி said...

என் நினைவடுக்குகளில் சோலைகளாய் இருந்த ஸ்ரீரங்கம் இப்போது பன்மாடிக் கட்டிடங்களாய் மாறி அதன் அழகைத் தொலைத்து விட்டது.


உண்மைதான். எனக்கும் அந்த பழைய விசாலமான மொட்டைக்கோபுரம் கண்களில் நிறைந்து கருத்தில் உறைந்திருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

மொட்டைக்கோபுரம் ராஜகோபுரமாகிய பிறகு கொஞ்சம் விலகி உயர்ந்ததாக உணர்வு.....

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை * விலக்கி நாய்க்கு இடுமினீரே
தொண்டரடிப்பொடியாழ்வார் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் !

ADHI VENKAT said...

டைம் மிஷின் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். அந்த கால எளிமையான, இனிமையான வாழ்க்கையை, அழகைக் கண்டு வரலாம்.

இன்று கோபுரத்தின் அருகில் இரண்டு நிமிடம் கூட நிற்க முடியாது என்பது உண்மை தான்.

ஸ்ரீரங்கத்தில் இனிமேல் அடுக்குமாடி கட்டங்கள் கட்டக் கூடாது என்று உத்தரவு உள்ளதாக கேள்விப்பட்டோம்.

நிலாமகள் said...

அருமையான‌ ப‌திவு!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு டைம் மிஷின் ம்ட்டும் இருந்தால்...ம்.....

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு நண்பா. டைம் மெஷின்!! ம்ம்... ஏக்கமாகத்தான் இருக்கிறது.

Matangi Mawley said...

1800s கூட போக வேண்டாம். எனக்கு '92 .. '93 கு போனா கூட போரும். அப்போ கூட இத்தன நெரிசல் இல்ல... அப்போ கூட காவேரி கொஞ்சம் நன்னா தான் இருந்தது...

கவி அழகன் said...

அற்புதமான
படைப்பு

RVS said...

தொண்டரடிப்பொடியின் பாசுரத்தை இதில் பகிர்ந்தது அருமை..

டைம் மிஷினில் ஏறி பின்னோக்கி பறந்தது போல இருந்தது... அற்புதம்...

ஷைலஜா said...

ஆஹா நம்ம ஊர் வாசனை என்னை எப்படியோ இங்க இழுத்துவந்துவிட்டதே ரீ!! உங்க எழுத்துல ஸ்ரீரங்க நினைவுகள் என்னை மீண்டும் சுற்றுகின்றன....அந்த நாளும் வந்திடாதா என்று பாடவேண்டும்போல!

Aathira mullai said...

இப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் சென்றால் அடித்துப் பிடித்து கோவிலை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வலம் வருவதும் கைப்பையையே பார்த்து தட்டேந்தும் அர்ச்சகர்கள் மேல் கோபம் கொள்வதும் என்று பழகிப்போனது.

இனிமேல் இன்னும் கூடுதல் பந்தா இருக்கும். அது வி.ஐ.பி ஏரியா ஆயிற்றே.

இந்தப் பதிவு பழைய நினைவுகளை அசை போட வைத்தது. மிக்க நன்றி ரிஷபன்.

என்ன அழகாக நிமிர்ந்து நிற்கின்றது பழைய கட்டிடம்.

கீதமஞ்சரி said...

ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து வந்தாலே ஊருக்குள் உண்டான மாற்றங்கள் நம்மை மலைக்கவைக்கின்றன. உங்கள் பதிவு பல வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்து ஏங்கவைக்கிறது. நல்ல பதிவு.

வசந்தமுல்லை said...
This comment has been removed by the author.
வசந்தமுல்லை said...

சிறு வயதில் ஸ்ரீரங்கம் வந்தது
என் நினைவில் ஒரு மரத்தாணிபோல்
பதிந்துள்ளது!
உங்கள் பதிவில், ஸ்ரீரங்கம் பழைய கோபுரம்
அதாவது மொட்டை கோபுரம் கண்டு மெய் சிலிர்த்தேன்.
அதில் புதிய கோபுரத்தை எழுப்பிய திரு. இளயராஜா
இசை ஞானி குழுவினரின் பணிக்கு நன்றி செலுத்துவோம்!!

Thenammai Lakshmanan said...

மிக அருமைதான் பழைய நினைவுகள் எப்போதும் ரிஷபன்..:)