நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
இம்மாதிரி கொண்டாட்டங்களில் எனக்கு அவ்வளவாய் ஆர்வம் இல்லை.
அதாவது இன்று மட்டும் என்பதாய் ஒரு தினம் குறிப்பிட்டு கொண்டாடுவதில்.
ஆனாலும் நம் வாழ்வில் தினங்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.
ஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது.
எதனால் அப்படி ஆனது என்று புரிபடாமல் ..
ஏதேனும் அலுவல்களில் பேசாமல் விட்டு.. மறுபடி பேச முற்படும்போது ஒரு இடைவெளி மனசுக்கும் உணர்வுக்குமாய்..
இன்றைய தினத்தில் என்னோடு மிக மிக அன்போடு இருந்த அத்தனை நண்பர்களுக்கும் - இன்று பேசாமல் இருந்தாலும் கூட - என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் அவ்ர்களை மானசீகமாய் கை குலுக்குகிறேன்.
என்னோடு இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கும் ..
என்னை சகித்துக் கொள்ளும் பொறுமைக்கு வந்தனங்களுடன்..
நட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.
அந்தந்த நேர தேவைக்கேற்ப என் மீது மழையாகவும், வெய்யிலாகவும், காற்றாகவும் உருமாறி என்னைச் செதுக்கும் நண்பர்களுக்கு
வேறென்ன சொல்ல..
இதயபூர்வமான வணக்கங்களைத் தவிர..
15 comments:
//ஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது//
ஸேம் பிளட்! என் மனசு நிறைய, வழிய வழிய அந்த வலியிருக்கிறது.
//நட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.//
உண்மை!
இதயங்கனிந்த நண்பர்தின நல்வாழ்த்துகள்!
நட்பு வழியவழிய ஓர் இடுகை..
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
பதிவு முழுவதும் நட்பின் இனிமை நிரம்பி வழிகிறது.....
நட்புகள் விலகிப் போனாலும் எங்கோ ஒரு ஓரத்தில் அதன் சிறப்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது....
உங்களுக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் எப்போதுமே கொண்டாட்டம்தானே !
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
இனிய நல்வாழ்த்துக்கள்.
தொடரும் நட்புடன் vgk
ஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது.//
நட்பின் உன்னதம் பெருமழையாய் சலனங்களை சஞ்சலங்களை கரைத்தேற்றும்.
"இதுவும் கடந்து போகும்" எனும் அற்புதக் கருத்து, துவளும் மனசுக்கொரு பற்றுக்கோலாய் இருக்கட்டுமே...
வாழ்த்துகளுக்கு நன்றியும் மகிழ்வும்.
அருமை நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
உங்களுக்கும் என் நட்பின் தின வாழ்த்துக்கள் நண்பா
1935,அமெரிக்காவில் ஒரு சிறைகைதி ஆகஸ்ட் முதல் சனியன்று அரசால் சுடப்பட்டு இறக்கிறான். மறுநாள் (ஆகஸ்ட் முதல் ஞாயிறு) அவனது நண்பன் தற்கொலை செய்து கொல்கிறான். அமெரிக்க அரசு அந்த தினத்தை 'நண்பர்கள் தினமாய்' அறிவித்து பூக்களையும், அட்டைகளையும் விற்று கொண்டிருக்கிறது கடந்த 75 வருடங்களாக. கர்ணனையும், பிசிராந்தையாரையும், அதியமானையும் அறிந்த நாம் வேறு தினங்களில் கொண்டாடுவோமே?
//இம்மாதிரி கொண்டாட்டங்களில் எனக்கு அவ்வளவாய் ஆர்வம் இல்லை.அதாவது இன்று மட்டும் என்பதாய் ஒரு தினம் குறிப்பிட்டு கொண்டாடுவதில்.//
நீங்கள் சொல்வது போல் தனி நாட்கள் தேவையா? (அம்மா நாள், அப்பா நாள், காதல் நாள்!!!)
இது எந்த மரபில் வந்தது என்று புரியவில்லை ..
நண்பர்கள் சிந்திக்கட்டும் ..
என்னோடு இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கும் ..
என்னை சகித்துக் கொள்ளும் பொறுமைக்கு வந்தனங்களுடன்..//
//நட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.// நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
வரமாய் கிடைக்கும் நல் நட்புகளை கைக்குலுக்க இந்த ஒரு நாள் மட்டும் போதுமா எல்லா நாட்களும் நட்பு கொண்டாடும் நல்ல நாளே என்று சிறப்பாக சொன்ன வரிகள் ரிஷபன்.....
அன்பு வாழ்த்துகள்....
''...அந்தந்த நேர தேவைக்கேற்ப என் மீது மழையாகவும், வெய்யிலாகவும், காற்றாகவும் உருமாறி என்னைச் செதுக்கும் ...'''
nallavatikal....எல்லா நாட்களும் நட்பு கொண்டாடும் நல்ல நாளே
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல பதிவு. நட்புடன் வாழ்த்துக்கள்.
Post a Comment