September 12, 2011

பசங்க


பயமறியாது ஓடி வந்து
பேருந்தில்
தொற்றிக் கொள்ளும்
பள்ளிச் சிறுவர்களைப்
பார்க்கும்போதெல்லாம்...
ஓட்டுநரின் கால்களில்
மானசீகமாய் விழுகிறது
மனசு..
‘பார்த்து ஓட்டுய்யா’


ஆரவாரமின்றி கடந்து போக
நினைக்கும் மனசு..
முந்திச் செல்லும்
ஊர்தியில்
பள்ளிக் குழந்தைகள்
கையசைப்பில்,
பால்யம் திரும்பி
துள்ளாட்டம் போட
ஆரம்பித்து விடுகிறது
என் இரு சக்கர வாகனமும்..
அனல் கொதிக்கும்
சாலையில்!

27 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை. பிள்ளைகளின் உற்சாகம் எல்லோரையும் தொத்திக் கொள்ளும். இங்கே உங்கள் வாகனத்துக்கும்:)!

எல் கே said...

உண்மைதானே சிறார்களின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்

settaikkaran said...

சூப்பர்!
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்க்கும்போது மிச்சம் வைத்த கடமைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
பூ போல எப்போதும் மலர்ந்து சிரித்து
மணம்வீசி எதிர்படும் அனைவர் மனத்திலும்
உற்சாகத்தை விளைவித்துப்போகும்
குழந்தைகளைக் கண்டால் நிச்சயம்
பால்யம் திரும்பும்
பைக் கூட குதியாட்டம் போடும்
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

rajamelaiyur said...

Super . . Your post was remembered my childhood days

Unknown said...

Nice poem

Unknown said...

சிறுவர் செயலை-எடுத்து
சிந்தனை வயலில்

சிறுகச் சொன்னீர்-கற்பனை
பெறுகச் சொன்னீர்
உருக வைத்தீர்-மகிழ்ந்து
உள்ளவும் வைத்தீர்
அருமை ரிஷப-கவிதை
அருமை அருமை!

புலவர் சா இராமாநுசம்

இந்திரா said...

பால்யத்தை ரசிக்கச்செய்த பதிவு..
நன்றி

vasu balaji said...

அழகு

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அருமையான மிருதுவான பூப்போன்ற மனசு உங்களுக்கும்.

நேரிலேயே உணர்ந்துள்ளேன், இப்போ இந்தக் கவிதையிலும்.

[voted] vgk

கீதமஞ்சரி said...

திரும்பிவாராக் காலம் அது என்றபோதும் ஏங்கும் மனத்தை என்ன செய்வது? கவிதை வரிகளிலேயே தெரிகிறது துள்ளாட்டம் போடும் மனத்தின் பால்யகால ஏக்கம்.

சக்தி கல்வி மையம் said...

பள்ளிக் குழந்தைகள்
கையசைப்பில்,
பால்யம் திரும்பி
துள்ளாட்டம் போட
ஆரம்பித்து விடுகிறது//

உண்மை..

Rizi said...

அழகான கவிதை..

ADHI VENKAT said...

அருமை சார்.
பள்ளிக்குழந்தைகளைப் பார்த்தாலே நமக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்..

சாந்தி மாரியப்பன் said...

பால்யத்தின் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது, உங்க கவிதை மூலமா.

வெங்கட் நாகராஜ் said...

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தவுடன் நமக்கும் ஒரு உற்சாகம்...

அதையே அழகிய கவிதையாகப் படிக்கும்போது அதே உற்சாகம்... :)

நல்ல பகிர்வு.

சென்னை பித்தன் said...

மலர்ந்த பூக்களாய்க் குழந்தைகளைக் காணும்போது மனம் மல்ர்வது இயற்கைதானே!

அருமை ரிஷபன்.

Anonymous said...

மழலையென்றால் மனம் மயங்காதார் யார்! இரும்பு இதயமும் அசையுமே! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

கவிதை அருமை....

கே. பி. ஜனா... said...

எங்கள் மனமும்!

மாலதி said...

உங்களின் ஆக்கம் எங்களையும் அல்லவா துள்ளி விளையாட வைத்து விட்டது பாலபருவத்தை நினைவுக்கு கொண்டு வந்தீர் உளம் நிறைந்த பாராட்டுகள்

ADMIN said...

கவிதை அருமை..! உங்கள் கவிதையைப் படித்ததில் எமக்குப் பெருமை..!! வாழ்க வளமுடன்..!

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் இரசித்தேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

யாருக்கும் மறக்குமுடியாதவை இந்தக் காலங்கள்..

Anonymous said...

‘பார்த்து ஓட்டுய்யா’
மிகக் கவனமான மனசு..

raji said...

சிறுவர்கள் பருவம் கவலையற்ற பருவம்.அவர்களைப் பார்க்கும் பொழுது நாமும் அவர்களாக மாறி விட மாட்டோமா என்ற் ஏக்கம் தோன்றுவது
உண்மையே.
பால்ய வயதை நினைவூட்டியமைக்கு நன்றி

இரசிகை said...

muthan muraiya..varren inga.
kavithai pidichurukku..
vaazhthukal rishaban!